Thursday, April 23, 2020

'ஒன்றிணைவோம் வா' திட்டம்: திணறும் தி.மு.க., மா.செ.க்கள்.

ஸ்டாலின் அறிவித்துள்ள, 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தில், உதவி கேட்டு, ஆயிரக்கணக்கில் அழைப்புகள் வருவதால், நிவாரண உதவிகள் வழங்க முடியாமல், தி.மு.க., மாவட்ட செயலர்கள் திணறுகின்றனர்.

மொபைல் போன்


மக்களுக்கு தேவையான, அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கும், அவர்களின் பசியை போக்கவும், 'ஒன்றிணைவோம் வா' என்ற, புது திட்டத்தை, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழகம் முழுதும், பொதுமக்கள் உதவி கேட்க வசதியாக, 90730 90730 என்ற, மொபைல் போன் எண்ணையும் அறிவித்துள்ளார். இந்த எண்ணுக்கு, மாவட்ட வாரியாக, உதவி கேட்டு, தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்க முடியாமல், அக்கட்சியின் மாவட்ட செயலர்கள் திணறுகின்றனர்.
அதனால், மாவட்ட செயலர்கள், நிவாரண உதவி வழங்கும் பொறுப்பை, அந்தந்த பகுதி நிர்வாகிகளிடம் ஒப்படைக்கின்றனர். அவர்களால், முடிந்த அளவுக்கு, ஒரு சிலருக்கு உதவி செய்கின்றனர்; அனைவருக்கும் உதவி செய்ய முடியவில்லை.இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:இதுபோன்ற தவறான செயல் திட்டங்களை தான், அரசியல் ஆலோசகரான பிரசாந் கிஷோர், ஸ்டாலினுக்கு வகுத்து கொடுக்கிறார்.

அரசுக்கு இணையாக, மாவட்ட செயலர்களால் எப்படி செலவு செய்ய முடியும்?


எந்தெந்த மாவட்டங்களில், அரசின் உதவிகள் சரிவர வழங்கப்படவில்லையோ, அவற்றை கண்டறிந்து, தி.மு.க.,வினரை களமிறக்கி இருக்க வேண்டும்.அப்படி செய்தால், மக்களிடம் நல்ல பெயர் வாங்கலாம். அதை விடுத்து, அரசு இயந்திரம் செய்ய வேண்டிய பணிகளை, கட்சி நிர்வாகிகளிடம் ஒப்படைத்ததால், அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. இத்திட்டம், தி.மு.க.,வுக்கு தோல்வியை தான் கொடுக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
'ஒன்றிணைவோம் வா' திட்டம்: திணறும் தி.மு.க., மா.செ.க்கள்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...