கோயமுத்தூர் மாவட்டம் ஆனைமலை பகுதியை சேர்ந்த மிக வயதான தம்பதியர் கோபால், சரஸ்வதி. பெரியவர் கோபாலுக்கு நரம்பு தொடர்பாக சில பிரச்னைகள். ஆனால் அவர் வசிக்கும் பகுதியில் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால் அந்த ஏரியா சீல் வைக்கப்பட்டுவிட்டது. இதனால் மாத்திரை, மருந்துகள் வாங்கிட வெளியே செல்ல முடியாத நிலை.
இதனால் கோபாலின் பேத்தி செளந்தர்யா, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ட்விட்டரில் தன் தாத்தாவின் சிரமம் பற்றி ஒரு வேண்டுகோள் வைத்தார். அடுத்த சில நிமிடங்களில் 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பதற்றம் வேண்டாம்!' என்று பதில் வந்தது அமைச்சரிடமிருந்து. அடுத்த சில நிமிடங்களில் அமைச்சரின் உதவியாளர்கள் பெரியவர் கோபாலின் மகனுக்கு தொடர்பு கொண்டு பேசி, அவரது அப்பாவுக்கு தேவையான மருந்து, மாத்திரை விபரங்களை கேட்டறிந்தனர். அடுத்த வெகு சில மணி நேரத்தில் ஆனைமலையிலுள்ள கோபாலின் வீட்டுக் கதவானது அரசு அதிகாரிகளால் தட்டப்பட்டது, திறந்து பார்த்தால் கை நிறைய மருந்துகள். பெரியவர் உருகிப் போனார்! இந்த தகவலை அறியும் மக்கள் அனைவரும் நெகிழத்தான் செய்கிறார்கள்.
அமைச்சரோ 'அரசு தன் கடமையை செய்கிறது! அவ்வளவே' என்கிறார் அடக்கத்துடன்.
நல்லது தொடரட்டும்…
No comments:
Post a Comment