Saturday, April 25, 2020

கடைகளை திறப்பதற்கான அனுமதி குறித்து உள்துறை அமைச்சகம் விளக்கம்.

கடைகளை திறப்பதற்கான அனுமதி குறித்து உள்துறை அமைச்சகம் விளக்கம்
உள்துறை அமைச்சகம்


















மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:

வணிக வளாகங்கள் தவிர கிராமப்புறங்களில் உள்ள அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதிக்கப்படுகிறது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள குடியிருப்பு வளாகங்களில் உள்ள கடைகள், சந்தை வளாகங்கள், அதன் அருகில் உள்ள கடைகள் 50 சதவீத ஊழியர்களுடன் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படுகின்றன. அங்குள்ளவர்கள் கட்டாயம் முக கவசம் அணிவதோடு, சமூக விலகலையும் பின்பற்ற வேண்டும்.

புனித ரம்ஜான் மாதத்தையொட்டி மத்திய அரசு இந்த முடிவை எடுத்து இருக்கிறது.

மாநகராட்சி, நகராட்சி எல்லைப் பகுதிக்கு வெளியே உள்ள பல வணிக முத்திரை, தனி வணிக முத்திரை கொண்ட பொருட்களை விற்கும் வணிக வளாகங்களில் உள்ள கடைகளுக்கு இந்த விதிவிலக்கு பொருந்தாது. அவை மே 3-ம் தேதி வரை தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.

தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் (ஹாட்ஸ்பாட்) உள்ள கடைகளும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களை விற்க மட்டுமே அனுமதிக்கப் படுகின்றன.

மதுபானங்கள் விற்பனைக்கு இருந்து வரும் தடை தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் வகையில் பாடப்புத்தக கடைகள், மின்விசிறி கடைகளை திறக்க சமீபத்தில் உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து தற்போது மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...