பெரும்பால ஜோதிடர்கள் பலன் சொல்லும்போது கேட்டு இருப்பீர்கள். இந்த பையன் பிறந்த நேரத்துக்கு அப்பா போயிருக்கணுமே... விரயம் ஆகி இருக்கணுமே. இந்த ஜாதகர் க்கு அப்பா கிடையாது என்றெல்லாம் பலன் சொல்லுவார்கள்.
அதுபோல பெரும்பாலான மக்களும் நான் பொறந்து அப்பாவை கொன்னுட்டேன். நான் பிறந்து சொத்தை அழிச்சுட்டேன் என்று எல்லாம் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.
இதற்கு இரண்டே காரணம் தான்.
1) ஜோதிடர் சரியாக பார்க்காமல் நீங்க இப்போ வீடு வாங்கி இருக்கணுமே என்று பலன் சொல்லி இருப்பார். உடனே வந்தவரும் இல்லையே என்று பதில் சொல்ல... பிள்ளை ஜாதகம் பார்த்துட்டு இவனுக்கு ஏழரை சனி. அதான் நீங்க வாங்கல என்று சமாளிப்பார்.
2) அது போல சில ஜாதகருக்கு நிறைய பாவங்கள் சாபங்கள் இருக்கும். அதை அவரால் ஏற்று கொள்ள முடியாமல் பிள்ளை மீதி பழி போட்டு தப்பிக்க பார்ப்பார்.
ஒரு மனிதன் பிறக்கும்போதே எல்லாம் தீர்மானிக்கப்பட்டு விட்டது. இவன் இப்படி தான் வாழ்வான். இப்படி தான் சம்பாதிப்பான்.இப்படி தான் பிள்ளை அமையும். இப்படி தான் சாவான் என்று.
அப்படி இருக்க இவர்கள் எப்படி குழந்தையை காரணம் காட்டுகிறார்கள்.
மேலும் இதனை ஒரு ஆய்வாக எடுத்து கொண்டு நான் ஆராட்சி செய்யும்போது, மகன் ஜாதகத்தில் தந்தை இறக்க வேண்டும் என்றும் என்று அமைப்பு வரும் அதே நேரத்தில், தந்தையின் சுய ஜாதகத்திலும் மரண அமைப்பு இருக்கும்.
// அதாவது தந்தை இறப்பு மகன் ஜாதகத்தில் காட்டுகிறதே தவிர, மகனால் தந்தை இறக்கவில்லை.//
ஜோதிடத்தில் திறமை இருக்கு இல்லை. முழுசா கற்றவர். இல்லை அரைகுறையாக கற்றவர் அது முக்கியம் இல்லை. சொல்லும் வார்த்தைகள் மிக முக்கியமானது அல்லவா....
அந்த வார்த்தையால் எத்தனை தந்தை மகன் உறவு பாதிக்கப்பட்டு இருக்கும். தந்தை இழந்த பிள்ளை காலம் முழுவதும் குற்ற உணர்ச்சியில் இருந்து இருக்கும். அதை எண்ணி பார்க்க வேணாமா....
ஜோதிடம் என்பதே ஒருவருக்கு பாவ புண்ணியவங்களை உணர வைத்து நல்ல வழி காட்டுவது தான். நல்லா போயிட்டு இருக்குற ஒன்றை ஜோதிடம் எனும் பெயரில் கெடுக்க கூடாது.
இனிமேல் எந்த ஜோதிடரும் அதுபோன்ற வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாம். மேலும் இதுவரை யாருக்கேனும் குற்ற உணர்ச்சிகள் இருந்தால் அதில் இருந்து வெளியே வாருங்கள். நிச்சயம் நீங்கள் காரணம் அல்ல...
No comments:
Post a Comment