Sunday, May 17, 2020

பலாக்கொட்டை மருத்துவ பயன்கள்.

பலாப்பழ கொட்டையில் உள்ள புரதம் மற்றும் நுண் ஊட்டச்சத்துகள் , சரும நோய்களைத் தடுக்கின்றன. இதில் உள்ள இரும்பு சத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இரத்த சோகையை குணப்படுத்துகிறது.பொதுவாக இந்த கொட்டையை வேகவைத்து உண்ணலாம். வெந்த பிறகு உருளைக் கிழங்கின் சுவையைக் ஒத்து இருக்கும் கண்களுக்கு மிகவும் நல்லது.
#இரத்தசோகை
இந்த கொட்டையில் இரும்பு சத்து மிகவும் அதிகம். இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினின் முக்கிய கூறு இந்த இரும்புச்சத்து. போதுமான அளவு இரும்புச்சத்து உடலில் இருப்பதால் இரத்த சோகை தடுக்கப்படுகிறது. மேலும் பல இரத்தம் தொடர்பான கோளாறுகள் தவிர்க்கப்படுகின்றன. இரத்தசோகையின் மற்றொரு முக்கிய அறிகுறியான சோர்வை இந்த இரும்புச்சத்து போக்குகிறது. சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியை , இரும்புச்சத்து அதிகரிக்க உதவுகிறது. இதனால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய்கள் உடலை தாக்காமல் தடுக்கப்படுகிறது.
#செரிமானம்
பொடி செய்யப்பட்ட கொட்டைகள் மலச்சிக்கல் மற்றும் செரிமான கோளாறுகள் நீங்க பெரும் நன்மை செய்வதாக நமது பாரம்பரிய மருத்துவங்கள் கூறுகின்றன. இந்த கொட்டையில் நார்ச்சத்து அதிகம் என்பதால், செரிமான சக்தியை அதிகரிக்க இவை மேலும் பயன்படுகின்றன. வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துகிறது.
#கண்பார்வை
பலாப்பழ கொட்டையில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது. இது கண்பார்வையை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. வைட்டமின் ஏ குறைபாட்டால் மாலைக்கண் நோய் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. இந்த கொட்டைகள் கேடரக்ட் என்னும் கண்புரை நோயைத் தடுக்கின்றன. மேலும் படர்ந்த நசிவு என்னும் மகுலர் டிஜெனரேஷன் என்ற கண்பார்வை இழப்பு அல்லது மங்கிய பார்வை நோயைத் தடுக்கின்றன.
#பாலுணர்வு
இது பாலுணர்வையும் தூண்டுகிறது. பலாப்பழ கொட்டையில் உள்ள இரும்பு சத்து பாலுணர்வைத் தூண்டுவதாக சில ஆதாரங்கள் கூறுகின்றன. பாலியல் பிரச்சனைகளின் தீர்வுகளுக்கு. இந்த கொட்டைகளை வறுத்து உண்ணலாம். இவை, பாலுணர்வூட்டும் ஒரு சிறந்த கருவியாக உள்ளன என்று சில வல்லுனர்கள் கூறுகின்றனர்.
பலாப்பழக் கொட்டையில் உள்ள புரதம்,உடலின் புரதச்சத்து அதிகரிக்கிறது இதனால் தசைகள் வலுவடைந்து தோல் சுருக்கங்கள்,
இளம் வயதிலேயே முதிர்த்த தோற்றத்தை பெறுவது, மற்றும் சுருக்கங்கள் தோன்றுவது போன்ற சரும பிரச்சனைகளை உண்டாக்கும் ப்ரீ ராடிகல்களை எதிர்த்துப் போராடும் குணம் பலாப்பழ கொட்டையில் உள்ள ஆன்டி ஆக்சிடெண்ட்களுக்கு உண்டு.
பலாப்பழ கொட்டையை பால் மற்றும் தேன் கலந்த கலவையில் ஊற வைக்கவும். இந்த கலவையை பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும். முகத்தில் சீராக இந்த பேஸ்டை தடவவும். இந்த கலவை முற்றிலும் காய்ந்தவுடன், வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். முகம் பொலிவாக மாறும். முகம் இளமையாகத் தோன்றும்.
#முடி வளர்ச்சி
பலாப்பழ கொட்டையில் உள்ள வைட்டமின் ஏ சத்து, முடி உடைவதைத் தடுக்கிறது. இந்த கொட்டையில் உள்ள அதிகமான புரதச் சத்து, முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. இரும்பு சத்து இந்த கொட்டையில் அதிகம் உள்ளதால், இரத்த ஓட்டம் அதிகரித்து, உச்சந்தலைக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. இதனால் கூந்தல் ஆரோக்கியமாக வளர்கிறது. இன்னும் ஆச்சர்யமான மற்றொரு செய்தி, இந்த கொட்டை மன அழுத்தத்தைப் போக்க உதவுவது தான். இதனால் முடி உதிர்தல் குறைகிறது.
ஊட்டச்சத்துக்கள்
பலாப்பழ கொட்டையின் ஊட்டச்சத்து அளவுகள் எவ்வளவு இருக்கின்றன என்று பார்ப்போம்.
பலாப்பழ கொட்டை 100கிராம் அளவு அதாவது 3.5 அவுன்ஸ் அளவில்
185 கலோரிகள்
7 கிராம் புரதம்
38 கிராம் கார்போ
1.5 கிராம் நார்ச்சத்து போன்றவை உள்ளன.
இதில் 1 கிராமுக்கும் குறைவாக கொழுப்பு சத்து உள்ளது.
தைமின் மற்றும் ரிபோப்லவின் போன்றவற்றின் சிறந்த ஆதாரமாக இந்த கொட்டைகள் உள்ளன. ஜின்க், இரும்பு, பொட்டசியம், காப்பர் மற்றும் மாங்கனீஸ் போன்றவையும் இவற்றில் உள்ளன. இந்த கொட்டையில் உள்ள மற்றொரு முக்கிய ஊட்டச்சத்து சபோனின் என்ற ரசாயனம் ஆகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...