நடிகர் தங்கவேலுவும், புரட்சி தலைவரும் நீண்ட நாள் நண்பர்கள்...
இரண்டு நாட்கள் வித்தியாசம் வயதில்... தங்கவேலு......இருவரும் சென்னை யானைகவுனி என்ற இடத்தில் ஒரு சிறிய அறையில் தங்கி வாய்ப்புகள் தேடிவந்தனர்.
இரண்டு நாட்கள் வித்தியாசம் வயதில்... தங்கவேலு......இருவரும் சென்னை யானைகவுனி என்ற இடத்தில் ஒரு சிறிய அறையில் தங்கி வாய்ப்புகள் தேடிவந்தனர்.
ஒரு நாள் இருவரும் மயிலை கபாலி அரங்கில் அன்று நடந்து கொண்டு இருந்த ஒரு ஆங்கில படத்துக்கு இரவு காட்சிக்கு சென்றனர்.... படம் முடிந்து அன்று சென்னையில் ஓடி கொண்டு இருந்த ட்ராம் வண்டிக்கு காத்து இருந்தனர்.
சற்று நேரம் கழித்து அந்த வண்டி முன்பே சென்றுவிட்டத்தை அறிந்து கொண்டு சரி வா நடந்தே அறைக்கு சென்று விடலாம் என்று தலைவர் சொல்ல 3 மணி நேரம் ஆகும் யானைகவுனி போய் சேர என்று அவர் சொல்ல.
சரி என்று முடிவெடுத்து இருவரும் பேசிக்கொண்டே நடந்து வர ஆழ்வார்பேட்டை பாலம் அருகில் நான்கு ரோடு சந்திப்பு வந்த உடன் புரட்சி தலைவர் சாப்பிட வேறு இல்லை இனி நடக்க வேண்டாம் இங்கே ஒரு ஓரமா படுத்து தூங்கி விட்டு காலையில் முதல் வண்டியில் அறைக்கு போகலாம் என்று தலைவர் சொல்ல.
உங்க இஷ்டம் இங்கே எங்கே படுக்க என்று தங்கவேல் கேட்டவுடன் அருகில் இருந்த ஆழ்வார்பேட்டை பஸ் ஸ்டாப்பை தலைவர் காட்ட சரி விதி வாங்க போவோம் என்று இருவரும் தங்கள் கையில் இருந்த மாலை நாளிதழை விரித்து படுக்க.
உடனே தங்கவேலு. போலீஸ் வந்து பிடித்து விட்டால் என்ன பண்ண என்று கேட்க அதற்கு தலைவர் நாம் என்ன திருடர்களா நம்மிடம் படம் பார்த்த டிக்கெட் இருக்கு காட்டலாம் என்று சொல்ல.
அதற்கு தங்கவேலு ஆமாம் நீங்க ராஜா நான் மந்திரி மாறுவேடத்தில் வந்து இருக்கோம் நகர்வலத்துக்கு...சரி இப்படியே நம்ம நிலைமை போனால் என்ன வழி எதிர்காலம் குறித்து எனக்கு பயமா இருக்கு தம்பி என்று சொல்ல.
அதற்கு தலைவர் கவலை படாதே.... ராஜாவா என்று கேட்டீர்கள் அல்லவா ஒரு நாள் நான் கண்டிப்பாக ராஜா ஆகத்தான் போறேன் அன்று உனக்கு இருக்கு பாரு என்று அந்த ரோட்டில் அடித்து சத்தியம் செய்ய...
அவர் சொன்ன படி வருடங்கள் உருண்டு காலங்கள் மாறி அவர் நிஜமாகவே இந்த நாட்டின் மன்னர் ஆவார் என்று கனவில் கூட நான் நினைக்கவில்லை என்று பின்னாட்களில் ஒருமுறை காரில் நடிகர் ராஜேஷ் அவர்களுடன் ஒரு நிகழ்ச்சிக்கு போய் கொண்டு இருக்கும் போது ஆழ்வார்பேட்டை பஸ் நிறுத்தத்தை காட்டி அதோ அந்த இடம் தான் அவர் சத்தியம் செய்தது என்கிறார் நடிகர் தங்கவேலு...
தங்கவேலு சொன்ன இந்த நிகழ்வை எம்ஜிஆர் 100 வது ஆண்டு விழாவில் சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் நினைவு படுத்தி அவ்வளவு நம்பிக்கை அவர் வாழ்க்கையின் மீது நம் பொன்மனச் செம்மல் என்று பேச அரங்கம் அதிர்ந்தது..
வாழ்க எம்ஜிஆர் புகழ்.
No comments:
Post a Comment