தப்புமா எம்பி #பதவி..?
கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் டிவி #விவாதம் ஒன்றில் கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பிரதமர் மோடியைக் #கல்லால் அடிக்க வேண்டும் என்று கூறியது பல தரப்பினரிடத்திலும் #அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
என்ன தான் எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பிரதமரை #இழிவு படுத்துவது போல் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது என பலர் #கண்டனம் தெரிவித்தாலும் காங்கிரஸ் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் அவருக்கு #ஆதரவாக நின்றன.
இந்த விவகாரம் இப்போது #டெல்லியிலும் பேசு பொருளாக மாறிவிட்டது. பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் #எஸ்பிஜி சிறப்பு பாதுகாப்பு படையின் சீனியர் அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.
ஜோதிமணி என்ன பேசினார் எந்த சூழ்நிலையில் இப்படிப் பேசினார் எதற்கு மோடியின் பெயரை இழுத்தார் என்பதைக் கண்டறிய அதிகாரிகள் அவரது பேச்சைத் திரும்பத் திரும்பக் கேட்டு வருகின்றனராம்.
இந்தப் பாதுகாப்பு ஜோதிமணியிடம் #விசாரணை நடத்த பிரதமர் பாதுகாப்புப் பிரிவுப்படை உள்துறை அமைச்சகம் மற்றும் லோக்சபா சபாநாயகருக்கு #அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளது.
கடந்த லோக்சபா கூட்டத் தொடரில் கூட பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்த போது ஜோதிமணி தன் இருக்கையிலிருந்து பிரதமரை #நோக்கி ஓடினார். அப்போது ஜவுளித்துறை அமைச்சர் #ஸ்மிருதிஇரானி தான் அவரைத் #தடுத்தார்.
இந்த சம்பவத்தை வைத்தும் பிரதமரின் பாதுகாப்பு பிரிவு ஜோதிமணியின் #சர்ச்சைப் பேச்சு குறித்து ஆராய்ந்து வருகிறது. இதற்கிடையே தமிழக பாஜக தலைவர்கள் பலரும் ஜோதிமணியின் சர்ச்சை பேச்சு குறித்து தேசியத் தலைமைக்கு #புகார்கள் அளித்த வண்ணம் உள்ளனர்..
No comments:
Post a Comment