தி.மு.க.,வின் தேர்தல் வியூக ஆலோசகராக, பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, அ.தி.மு.க.,வின் தேர்தல் ஆலோசகராக, சுனில் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசியல் கட்சிகள், தொண்டர்களை நம்பியிருந்த நிலை மாறி, தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில், அரசியல் ஆலோசனை கூறுவோரை நம்பும் நிலை உருவாகி உள்ளது.
ஒரு தலைவரை, நல்லவராக மக்களிடம் உருவகப்படுத்துவதும், கெட்டவராக மாற்றுவதும், தகவல் தொழில்நுட்ப உதவியுடன் எளிதாகிறது.
ஒரு தலைவரை, நல்லவராக மக்களிடம் உருவகப்படுத்துவதும், கெட்டவராக மாற்றுவதும், தகவல் தொழில்நுட்ப உதவியுடன் எளிதாகிறது.
கடந்த, 2016 சட்டசபை தேர்தல், 2019 லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுக்காக, தேர்தல் வியூகங்களை வகுத்து தந்தவர், சுனில். அவரது ஆலோசனைப்படியே, தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், அவரது கட்சியும் செயல்பட்டது.
சுனில் சொன்ன யோசனையை ஏற்று, 'நமக்கு நாமே திட்டம்' என்ற, நடைப்பயண பிரசார திட்டத்தை, தி.மு.க., செயல்படுத்தியது.
இதன் காரணமாக, சட்டசபை தேர்தலில்,வெற்றி வாய்ப்பை இழந்தபோதிலும், மிகப்பெரிய எதிர்க்கட்சியாக, தி.மு.க., உருவெடுத்தது.அதே, சுனில் வகுத்து தந்த பாதையில் செயல்பட்ட காரணத்தால், லோக்சபா தேர்தலில், தி.மு.க., மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
ஆனால், 21 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், அவரது வியூகம், தி.மு.க.,வுக்கு வெற்றியை தேடித் தரவில்லை.
இந்த இடைத்தேர்தல் வாயிலாக, அ.தி.மு.க., ஆட்சியை கவிழ்த்து, தி.மு.க., இடைக்கால ஆட்சி அமைக்க திட்டமிட்டது, தோல்வி அடைந்ததால், சுனிலுக்கும், தி.மு.க., தலைமைக்கும் உரசல் ஏற்பட்டது. அதன் விளைவாக, தி.மு.க.,விடம் இருந்து, சுனில் வெளியேறினார். அதன் பின், தி.மு.க., தேர்தல் ஆலோசகராக, பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டார்.பீஹாரை சேர்ந்த இவர், ஏற்கனவே, பிரதமர் மோடி போன்ற பிரபலங்களுக்காக பணி செய்தவர்.ஸ்டாலினை முதல்வராக்கும் திட்டத்தோடு, அவரது தலைமையிலான குழுவினர், தமிழகத்தில் களம் புகுந்துள்ளனர். அடுத்து வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை வெற்றி வைப்பதற்கான பணிகளை, இப்போதே துவக்கி உள்ளனர்.

அதற்கு ஈடுகொடுக்கும் வகையில், அ.தி.மு.க.,வும், தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை துவக்கி உள்ளது. பிரசாத்துக்கு போட்டியாக, தி.மு.க.,விடம் இருந்து விலகியுள்ள சுனிலை, தனக்காக அமர்த்தியுள்ளது, அ.தி.மு.க., தலைமை. அவரது ஆலோசனைப்படியே, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, அந்த அணியினர், 2016 சட்டசபை தேர்தலில், யாருடைய ஆலோசனையும் இல்லாமல், ஜெ.,வை வெற்றி பெற வைத்தனர்.எனவே, அவர்களது உதவியுடன், பிரசாந்த் கிஷோரை எதிர்கொள்ள, சுனில் தயாராகி உள்ளார். கொரோனா முடிவுக்கு பின், இரு கட்சிகளும், தேர்தல் பணிகளை துவக்க உள்ளன. எனவே, அரசியல் களத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
புதிய மாவட்ட செயலர்கள்
அ.தி.மு.க.,வில், புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு, மாவட்ட செயலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அத்துடன் சில மாவட்டங்களை பிரித்து, கூடுதல் மாவட்டங்கள் உருவாக்கவும், அதற்கு மாவட்ட செயலர்களை நியமிக்கவும், கட்சி தலைமை முடிவு செய்து உள்ளது.சென்னை, திருவள்ளூர், விருதுநகர் உட்பட பல மாவட்டங்களில், மாற்றங்கள் செய்ய உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில், சில மாவட்ட செயலர்கள் மீது, கட்சியினரிடமும், மக்களிடமும் அதிருப்தி காணப்படுகிறது. அவர்களை நீக்குவது அல்லது செல்வாக்கை குறைத்து, 'டம்மி' ஆக்குவது என, இரு வித நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படுகின்றன. இந்த மாற்றங்கள், அடுத்த மாதமே அரங்கேறும் என, ஆளும் கட்சி நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment