திமுகவைச் சேர்ந்த R.S. பாரதி கூறியது 100% உண்மை. கருணாநிதி தன் ஆட்சிக்காலத்தில் ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு இடத்திலும் தன் கட்சிக்காரர்களை; தனது விசுவாசிகளை பணியமர்த்தினார்.
அரசு ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் திமுகவினரே. காவல்துறையிலும் இதே நிலைமைதான். நீதித்துறையிலோ மாஜிஸ்டிரேட்டில் துவங்கி மாவட்ட நீதிபதி, உயர்நீதிமன்றம் என்று அத்தனை மட்டங்களிலும் திமுகவினரே நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்.
திமுகவினர் தெனாவட்டாக திரிவதன் மர்மம் இதுதான். எத்தகைய குற்றச்சாட்டுகள் / வழக்குகள் வந்தாலும் திமுகவினர் சுலபமாக வெளியே வருவதன் மர்மம் இதுதான்.
இந்து உணர்வாளர்கள் மீது என்றால் உடனே வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்து விடுவார்கள். குறைந்தது 20 நாட்கள் சிறையிலிருந்தே ஆகவேண்டும்.
உயர்நீதிமன்றம் சென்றால்தான் ஜாமீன் கிடைக்கும். காவல்துறையிலும் நீதித்துறையிலும் உள்ள கருப்பு ஆடுகள் இதை கச்சிதமாக செய்வார்கள்.
இதே கருப்பு ஆடுகள் திமுகவினர், திகவினர், இஸ்லாமியர், கிறிஸ்தவ அமைப்பினர் என்றால் வழக்குப் பதிவே செய்யாமல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இழுத்தடிப்பார்கள்.
அப்படியே பதிந்தாலும் பதியும் போதே மிகவும் வழக்கு பலவீனமாக இருக்கும். கைது நடவடிக்கையும் இருக்காது. தப்பித் தவறி கைது செய்து விட்டாலும் சம்பந்தப்பட்டவர் உடனே ஜாமீனில் வெளியே வந்து விடுவார்.
இதற்கு நல்ல உதாரணமாக நிறைய வழக்குகளைக் கூறலாம்.
சுருக்கமாக சொன்னால் இந்து விரோத அமைப்புகளின் சொர்க்கமாக தமிழக அரசு இயந்திரம் செயல்பட்டு வருகிறது. இதில் காவல்துறையும், நீதித்துறையும் அடக்கம்.
No comments:
Post a Comment