கடகம் பற்றி நிறைய எதிர்க்கருத்துகள் வந்தன. கடகம் சுயநலம் துரோகம் என்றெல்லாம்..... அவர்களுக்காக சிறு விளக்கம்.
கடகம் என்றால் சந்திரன். சந்திரன் என்றால் வெண்மை. அதுபோல கடக ராசி காரர்கள் 100% perfect எதிர்பார்ப்பார்கள். சிறு குறையை கூட அவர்களால் ஏற்று கொள்ள முடியாது.
குறை இல்லா மனிதன் ஏது. அதனாலேயே அவர்கள் பெரும்பாலும் single ஆக இருப்பார்கள். அவர்களுக்கு காதல் ஒத்து வராது.
ஒரு படத்தில் சுஜாதா வசனம்..... செப்பு கலக்காத சுத்த தங்கம். அதான் புழக்கத்துக்கு இல்லாம இருக்கு னு....
அதுபோல தான் காதலுக்கு பேரு போன கடக ராசிக்கு காதல் ஒத்து வராது.
மேலும் இவர்கள் வைசிய ஜாதியை சேர்ந்தவர்கள். அதாவது வியாபாரம். தனக்கு ஆதாயம் இன்றி எந்த ஒரு காரியத்தையும் செய்ய மாட்டார்கள். சுயநலமானவர்கள் தான். ஆனால் நிச்சயம் அந்த சுய நலத்தில் மற்றவர்களுக்கு பாதிப்பு இருக்காது.
மேலும் காதலுக்கு பேர் போன இவர்களுக்கு நிறைய காதல் உண்டு. எளிதில் காதல் பயப்பட கூடியவர்கள். ஆனால் எத்தனை காதல் செய்தாலும் காதலுக்கு உண்மையாக இருப்பார்கள். அதாவது ஒன்றை விட்டு விலகி இன்னொன்று.
மேலும் இவர்களுக்கு நிரந்தர நண்பனும் கிடையாது. நிரந்திர எதிரியும் கிடையாது. எதிரியையும் நண்பனாக்க முயலுவார்கள்.
மேலும் இவர்கள் நிலை இல்லா புத்தி உடையவர்கள். மன குழப்பங்கள் உடையவர்கள். பகலை விட இரவினில் இவர்கள் மூளை நன்கு வேலை செய்யும். சுறுசுறுப்பாக இருக்கும்.
வளர்பிறை நாள்களில் அதிக சுறுசுறுப்பாகவும் தேய்பிறை நாள்களில் மந்தமாகவும் இருப்பார்கள்.
அதிக உணர்ச்சிவசப்பட கூடியவர்கள். சாதாரண சின்ன வார்த்தை செய்கை கூட இவர்களுக்கு அதிக அன்பாக தெரியும். அதே நேரத்தில் அதுவே அலட்சியமாகவும் அவமானமாகவும் தெரியும்.
அன்பு அழுகை கோபம் எதுவாகினும் வெளிப்படையாக காட்டி விடுவர்.
மொத்தத்தில் கடகம் ஒரு புரியாத புதிர்.
No comments:
Post a Comment