பெரும்பாலான அரசுத்துறைகளை மத்திய அரசு தனியார் நிறுவனங்களிடம் விற்கப்போகும் திட்டத்தை எவ்வாறு பார்க்க வேண்டும். இதனால் யாருக்கு லாபம்?
இதை எதிர்த்து ஏற்கனவே 13 பதிவுகள் இருக்கின்றன. அனைத்தையும் படிக்கவில்லை. ஒரு சில பதில்களைப் படித்தேன். மிகமிக அபத்தமாக இருக்கிறது.
எதுவுமே தெரியாத தமிழன் இந்தத் தலைமுறையில் மிகமிக அதிகம் என தோன்றுகிறது.
1991 ல் காங்கிரஸ் ஆட்சிக்கு (சந்திரசேகர் ஆட்சிக்குப் பின்னர்) வருகிறது. முழு மெஜாரிட்டி இல்லை. வட இந்திய காங்கிரஸ் தலைவர்கள் காலை வாரிவிடுவார்கள் என தென்னிந்தியாவைச் சேர்ந்த நரசிம்ம ராவ் பிரதமராகிறார். நிதி அமைச்சராக ஆவதற்கு பிரணாப் முகர்ஜி பலத்த முயற்சி செய்தார். நரசிம்மராவின் கணிப்பின்படி பிரணாப் முக்கர்ஜி கொஞ்சம் பழமைவாதி.
மன்மோகன்சிங் எனும் மகத்தான மனிதரை நிதி அமைச்சராக நியமிக்கிறார். மாண்டேக் சிங் அலுவாலியா உள்ளிட்டோர் மன்மோகன்சிங் துறையில் இருந்தனர்.
இந்தியாவின் நிதி நிலமை அதல பாதாளத்தில். அன்னிய செலாவாணி கையிருப்பு சுத்தமாக இல்லை. வெளிநாட்டில் கடன் 72 பில்லியன் டாலர். (நினைவிலிருந்து எழுதுகிறேன் - கொஞ்சம் கூடக் குறைய இருக்கலாம்). உலகில் அதிகக் கடனாளி நாடுகள் பட்டியலில் பிரேஸில் மற்றும் மெக்ஸிகோவிற்கு அடுத்ததாக இந்தியா 3 ஆம் இடம். இறக்குமதி மிகமிக அதிகம் ஏற்றுமதி மிகமிகக் குறைவு. என்ன செய்வதெனத் தெரியவில்லை. இருக்கும் பணத்தை வைத்து இன்னும் ஒரு வாரத்திற்கு ஓட்டலாம். ஒரு வாரம் கழித்து பெட்ரோல் இறக்குமதி செய்யக்கூட கையில் பணம் இல்லை. நமது சேமிப்பான 20,000 கிலோ தங்கத்தினை அடகு வைத்து இந்திய பொருளாதாரத்தை மீட்டிருக்கிறோம் 1991 ல்.
நரசிம்மராவ் யதார்த்தவாதி. (சோனியா போஃபர்ஸ் வழக்கை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே நரசிம்மராவுக்கு பிரதமர் பதவி அளித்தார்.) போகாதா ஊருக்கு வழி தேடும் முட்டாள் அல்ல. அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டு நாட்டின் நிதி நிலமை அனைவருக்கும் விளக்கப்பட்டது. ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்த கதைதான் இது. நரசிம்ம ராவ், மன்மோகன், அலுவாலியா டீம் சமர்ப்பித்த 1991 பட்ஜெட் மிக சிறப்பான ஒன்று. அதனால்தான் நரசிம்மராவ் நவீன இந்தியாவின் பொருளாதார சிற்பி என புகழப்படுகிறார்.
நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் டீம் செய்த முக்கியமான ஒன்று தாராளமயமாக்கல். அவரது ஆட்சிமுடியும் காலத்தில் இந்தியாவின் அன்னிய முதலீடு மிகப் பெரிய அளவில் வளர்ந்திருந்தது.
நரசிம்மராவ் செய்த முக்கியமான சீர்திருத்தம்:
தொழில்துறையில் ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளைத் தளத்துவது. (Deregulation of Industry)
ஏற்றுமதிக் கட்டணங்களில் ஏற்ற இறக்கத்தை எளிதாக அனுமதித்தல். (Flexibility of Exchange Rates)
இறக்குமதிக் கட்டுப்பாடுகளை ஒரளவு தளர்த்தல். (Partial Lifting of Import Control)
பொதுத்துறையின் பங்குகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை தனியாருக்கு விற்றல்.
அடிப்படைக் கட்டமைப்புகளுக்கான முதலீடுகளை அதிகரித்தல்.
வணிக முறைகளில் சீர்த்திருத்தங்களை ஏற்படுத்துதல்.
வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கான (எஃப்டிஐ) ஒழுங்குமுறைக் கட்டுப்பாடுகளில், மாற்றங்கள் கொண்டு வருதல்.
தொழில்துறை கட்டுப்பாடுகளை தளர்த்துதல்.
இதனால் ஏற்பட்ட மாற்றங்கள்:
ஏற்றுமதிக் கட்டணங்களில் ஏற்ற இறக்கத்தை எளிதாக அனுமதித்தல். (Flexibility of Exchange Rates)
இறக்குமதிக் கட்டுப்பாடுகளை ஒரளவு தளர்த்தல். (Partial Lifting of Import Control)
பொதுத்துறையின் பங்குகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை தனியாருக்கு விற்றல்.
அடிப்படைக் கட்டமைப்புகளுக்கான முதலீடுகளை அதிகரித்தல்.
வணிக முறைகளில் சீர்த்திருத்தங்களை ஏற்படுத்துதல்.
வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கான (எஃப்டிஐ) ஒழுங்குமுறைக் கட்டுப்பாடுகளில், மாற்றங்கள் கொண்டு வருதல்.
தொழில்துறை கட்டுப்பாடுகளை தளர்த்துதல்.
இதனால் ஏற்பட்ட மாற்றங்கள்:
வெளிநாட்டு நிறுவனங்கள், நமது நாட்டில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்து இணைந்து செயல்பட்டிருக்கும் பொழுது, முதலீட்டின் உச்சவரம்பு 51 சதவீதம் என்ற அளவில் உயர்த்தப்பட்டன.
அந்நிய நேரடி முதலீடுகள் செய்யப்படுவதற்கான அனுமதி மற்றும் வழிமுறைகள் எளிதாக்கப்பட்டன.
அந்நிய நேரடி முதலீடுகள் செய்யப்படுவதற்கான அனுமதி மற்றும் வழிமுறைகள் எளிதாக்கப்பட்டன.
வணிக வரிக் கட்டணங்கள் 85 சதவீதத்திலிருந்து 25 ஆக குறைக்கப்பட்டது.
தொழிற்சாலைகளுக்கு உரிமங்கள் வழங்கப்படும் முறைகளில் கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டன.
தொலைத்தொடர்பு, ஆயுள் காப்பீடு ஆகிய துறைகளில் அரசின் கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டன.
இவை மட்டும் நடக்கவில்லையெனில் பல்லாயிரம் மக்கள் செத்திருப்பர். தமிழகத்தின் கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர், சிவகாசி ஆகிய நகரங்கள் நரசிம்மராவ் காலத்தில் பெரும் பொருளியல் மாற்றங்கள் அடைந்தன.
முகநூல் பொருளாதாரத் தமிழர்கள் சொல்வதை நம்பினால் இன்னும் இருபது ஆண்டுகளில் குடிக்கக் கஞ்சி கூட இருக்காது.
எனவே இந்தியாவில் தனியார் மயம் என்பது தவிர்க்கவே முடியாத ஒன்று. நாம் தமிழர்கள் மற்றும் சந்தர்ப்பவாத திமுகவினர் சொல்லுவதுபோல் தனியாருக்கு விற்பனை செய்வது நின்றால் இந்தியாவின் கதி அதோகதிதான்.
தனியார் மயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் (நரசிம்மராவ் + மன்மோகன்சிங்) காலத்திற்கு முன் லைஸென்ஸ்ராஜ் என்பார்கள். நேருவின் சோசலிசக் கொள்கை இந்தியப் பொருளாதாரத்தை முட்டுச் சந்தில் நிறுத்தியிருந்தது. 1947 ல் சுதந்திரம் கிடைத்தாலும் 1991ல் தான் பொருளாதார சுதந்திரம் கிடைத்தோம் என சொல்வார்கள்.
1980 ற்குப் பிறகு பிறந்தவர்களுக்கு இந்தியாவின் பஞ்சமும் பட்டினியும் தெரியாது. தற்சார்பு எனும் மாய வலையில் சிக்குண்டு சின்னாபின்னமானோம். LPG இணைப்பு வேண்டி விண்ணப்பித்தால் கிடைக்க 10 ஆண்டுகள் ஆகும். கார் வாங்க மந்திரியின் சிபாரிசு கடிதம் தேவைப்பட்டது. தொலைபெசியும் அவ்வாறே.
தாராளமயமாக்கலின்போது மன்மோகன்சிங் சொன்ன வார்த்தைகள் இன்னும் என் நினைவில் இருக்கிறது. இந்திய மக்கள் தனது பொருட்களை தேர்வு செய்து வாங்கப் பல பொருட்கள் சந்தையில் கிடைக்கும் என்றார். 1990 களுக்கு முன் இந்திய சந்தையில் இருந்த கார்கள், பைக்குகள், தொலைக்க்காட்சி தயாரிப்பு நிறுவனக்கள் எத்தனை. இன்று எத்தனை பிராண்ட்கள் உள்ளன. நாம் தெரிவு செய்து வாங்கும் அளவிற்கு பொருட்கள் இன்று குவிந்துள்ளன.
காங்கிரஸ் காலத்திற்குப் பின்னர் பிஜேபி முழு மூச்சுடன் தாராளமயமாக்கல் , தனியார்மயமாக்கல் மற்றும் உலக மயமாக்கலை செய்தது. திமுகவின் முரசொலிமாறன் சில்லறை விற்பனையில் 100% அன்னிய முதலீடு வேண்டுமென்றார். முகநூல் தமிழர்கள் பொருளாதாரம் தெரியாத திமுகவினர் அன்னிய முதலீட்டினையையும் தனியார் முதலீடையும் எதிர்க்கிறார்கள்.
தாராளமயமாக்கல் , தனியார்மயமாக்கல் மற்றும் உலக மயமாக்கல் இல்லையெனில் இன்று நம்மால் எதுவுமே அனுபவிக்க முடியாது. வேலைவாய்ப்பு இருக்காது. அரசு வேலை மட்டுமே இருக்கும். சமூகத்தில் பொருளாதார ஏற்றத் தாழ்வு அதிகமாக இருக்கும்.
பொதுத்துறை நிறுவனங்கள் மிகப்பெரிய நஷ்டத்தினைக் கொண்டுள்ளன. அவற்றைச் சீர் செய்ய பல கமிட்டிகள் அமைக்கப்பட்டும் அந்நிறுவனக்களை இலாபகரமாக இயக்க முடியவில்லை. மக்களின் வரிப்பணம் மிக மிக அதிக அளவு அந்நிறுவனத்தினுள் கொட்டப்பட்டுக் கொண்டே இருந்தது.
SAIL - 343 கோடிகள்
AIR INDIA - 8,474 கோடி நஷ்டம்
BSNL - 14,904 கோடி நஷ்டம்
MTNL
சென்னை பெட்ரோலியம்
ஒரிஸா மினரல் டெவலப்மென்ட்
ஹிந்துஸ்தான் நியூஸ் பிரிண்ட்
நேஷனல் டெக்ஸ்டைல்ஸ்
திருச்சியிலுள்ள BHEL உள்ளிட்ட 50 ற்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனக்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன.
ஒரு நிறுவனத்தால் இலாபம் பார்க்க இயலவில்லையெனில் அரசு என்ன செய்ய வேண்டும்? அரசு மக்களிடமிருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் பெற்ற வரிகளை இதுவரை இந்நிறுவனக்களில் கொட்டிக் கொண்டிருந்தது. இனிமேலும் அவ்வாறு செய்வதில் அர்த்தம் இல்லை. மேலும் இந்நிறுவனக்களிலுள்ள அரசின் பங்கினைக் குறைக்கும் போது அரசுக்கு வருமானமும் கிடைக்கும் மேலும் இந்நிறுவனங்களுக்கு மேலதிகமாக நஷ்டத்திற்காக கொடுக்கும் பணத்தின் அளவும் குறையும்.
இந்நிறுவனங்களால் இந்திய அரசிற்கு 1,32,000 கோடிக்கும் அதிகமாக நஷ்டம்.
தனியார் மயமாக்கப்படும்போது அரசு அதில் எதுவும் செய்ய வேண்டியதில்லை. அது நஷ்டத்தில் இயங்கினால் அரசு தன் கையிலிருந்து எதையும் கொடுக்க வேண்டியதில்லை.
மோடி அரசு அனைத்துப் பொதுத்துறை நிறுவனக்களையும் தனியாருக்குக் கொடுக்கப் ப் போவதில்லை . மோசமாக செயல்படுபவற்றை மட்டுமே தனியாருக்கு விற்கப் போகிறது.
மேலும் கீழ்க்கண்ட 28 நிறுவனக்களிலிருந்து தனது பங்கின் எண்ணிக்கையை குறைக்கப்போகிறது.
1. Project & Development India Ltd
2. Hindustan Prefab Limited (HPL)
3. Hospital Services Consultancy Ltd (HSCC)
4. National Project construction corporation (NPCC)
5. Engineering Project (India) Ltd
6. Bridge and Roof Co. India Ltd
7. Pawan Hans Ltd
8. Hindustan Newsprint Ltd (subsidiary)
9. Scooters India Ltd
10. Bharat Pumps & Compressors Ltd
11. Hindustan Fluorocarbon Ltd (HFL) (sub)
12. Central Electronics Ltd
13. Bharat Earth Movers Ltd (BEML)
14. Ferro Scrap Nigam Ltd.(sub)
15. Cement Corporation of India Ltd (CCI)
16. Nagarnar Steel Plant of NMDC
17. Alloy Steel Plant, Durgapur; Salem Steel Plant; Bhadrawati units of SAIL
18. Air India and its five subsidiaries and one JV.
19. Dredging Corporation of India
20. HLL Life Care
21. Indian Medicine & Pharmaceuticals Corporation Ltd (IMPCL)
22. Karnataka Antibiotics
23. Kamrajar Port
24. Indian Tourism Development Corporation (ITDC)
25. Rural Electrification Corporation Limited (REC)
26. Hindustan Petroleum Corporation Limited
27. Hindustan Antibiotics Ltd (HAL)
28. Bengal Chemicals and Pharmaceuticals Ltd (BCPL)
சில இலட்சம் ஊழியர்கள் நலனுக்காக 130 கோடி மக்களின் வரிப்பணம் ஏன் வீணாக்கப்பட வேண்டும்?
பொதுத்துறை நிறுவனங்கள் இலாபம் ஈட்டினால் அரசு ஏன் விற்கப்போகிறது. இதுவரை பொதுத்துறை ஊழியர்கள் வாங்கிய சம்பளம் நம்முடைய வரிப்பணம். இலாபம் ஈட்டத் திறமை இல்லாத பொதுத்துறை ஊழியர்களுக்கு நாம் ஏன் வீணாகப் பணம் கொடுக்க வேண்டும்.
ஏர் இந்தியா விற்பனையில் அதை விலைக்கு வாங்கும் தனியாருக்கு, அடுத்த 5 வருடங்களுக்கு இபோதிருக்கும் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பக்கூடாது என மோடி அரசு நிபந்தனை விதித்ததால்தான் இன்னும் விற்பனையாகவில்லை. இதிலிருந்தே தெரிகிறது ஊழியர்களின் திறமை.
தனியார் இலாபம் சம்பாதிப்பார்கள் எனப் பலரும் சொல்கிறார்கள். நிச்சயம் இலாபம் சம்பாதிப்பார்கள். அவர்கள் சம்பாதிக்கும் இலாபம் பல்வேறு தொழிலில் முதலீடு செய்யப்பட்டு மீண்டும் மீண்டும் இந்தியர்களுக்கே பயனளிக்கும். டாட்டா குழுமம் எத்தனை நிறுவனக்களை நடத்துகிறது. எத்தனை ஆயிரம் மக்களுக்கு வாழ்வளிக்கிறது. இது போலவே அம்பானி, அதானி உள்ளிட்டோர். அம்பானி சம்பாதித்த பணத்தினை ஜியோவில் போட்டு 1,50,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருக்கிறார். அவர் எதிலோ சம்பாதித்த இலாபத்தினை மக்களாகிய நாம் அனுபவிக்கிறோம். (4,50,000 கோடி எனவும் கேள்விப்பட்டேன்)
காங்கிரஸ் ஆசைப்பட்ட தனியார்மயத்தினை பிஜேபி முழு வீச்சுடன் செயல்படுத்தி வருகிறது. நரசிம்மராவ், மன்மோகன் சிங், சிதம்பரம், வாஜ்பாய், மோடி, நிர்மலா சீதாராமன் ஆகியோர் இந்தியப் பொருளாதாரத்தை மறு சீரமைப்பு செய்தவர்கள்.
40 வயதிற்கும் குறைவான முகநூல் / புலனத் தமிழ் இளைஞர்கள் தொலைக்காட்சி, தினகரன், முரசொலி, நக்கீரன், விகடன் படிப்பதை நிறுத்திவிட்டு கொஞ்சம், Business Standard, Economics Times, Financial express போன்றவையும் படித்தால் திமுக+ காங். மற்றும் இடதுசாரிகளின் பொய்யுரைகளிலிருந்து தப்பிக்கலாம்.
No comments:
Post a Comment