#செவ்வாய்_கிழமை குளிகை நேரத்தில் பகல் 12 முதல் 1.30 க்குள் கடனில் சிறு பகுதியை கட்டினால் திரும்ப திரும்ப கடன் தொகையை முழுவதும் கட்டி மீண்டு விடலாம்..
கடன் விரைவில் அடைய எளிய பரிகாரம்
கடனை அடைக்க முடியாமல் தவிப்பவர் பலர்..கடன் கிடைக்காமல் தவிப்பவர் பலர்...கல்வி கடன், வீடு கட்ட கடன், கல்யாணம் செய்ய கடன், தொழில் துவங்க கடன் என மற்றொருவரிடம் அல்லது வங்கியில் கடனோ உதவியோ பெற பலரும் சிரமப்படுகிறார்கள். எப்போது கடன் கேட்டால் கிடைக்கும் என பார்த்தால், உங்கள் ராசிக்கு 11 ஆம் இடத்தில் சந்திரன் எப்போது வருகிறாரோ அப்போது யாரிடம் உதவி கேட்டாலும் கிடைக்கும்.1,.3,6,7,8,12 ல் சந்திரன் இருக்கும் போது கடன் கேட்டால் கிடைக்காது...!!
மரணம் நிகழ்ந்து விட்டால் அந்த சவத்தை எப்போது இடுகாட்டுக்கு எடுத்து செல்வார்கள் தெரியுமா..? குளிகை நேரம் பார்த்துதான் சவத்தை எடுப்பார்கள்..காரணம் குளிகை நேரம் என்பது திரும்ப திரும்ப அந்த காரியம் நடக்க வைக்கும்...
எனனே அந்த வீட்டில் அடிக்கடி மரணம் நிகழாதிருக்க, குளிகை நேரம் முடிந்த பிறகுதான் சவத்தை தூக்குவார்கள்..சிலர் கடன் வாங்கும்போது குளிகை நேரத்தில் வாங்கி விட்டால் திரும்ப திரும்ப கடன் வாங்கி பெரிய கடன்காரர் ஆகிவிடுவர்கள்.. ஊரைவிட்டே செல்லும் நிலையோ தற்கொலை செய்யும் நிலையோ கூட ஏற்படுத்திவிடும்...எனவே கடன் வாங்கும்போது ஜாக்கிரதையாக நேரம் பார்த்து நட்சத்திரம் பார்த்துதான் வாங்க வேண்டும்....ராகுகாலம், எமகண்டம் இல்லாத நேரமாகவும் இருக்க வேண்டும்..
கடன் விரைவில் அடைபட
செவ்வாய் கிழமை குளிகை நேரத்தில் பகல் 12 முதல் 1.30 க்குள் கடனில் சிறு பகுதியை கட்டினால் திரும்ப திரும்ப கடன் தொகையை முழுவதும் கட்டி மீண்டு விடலாம்..
சங்கடஹர சதுர்த்தி அன்று வன்னி மரத்தின் இலைகளை கொண்டு வினாயகருக்கு அர்ச்சனை செய்ய அளவற்ற கடன்களை அடைக்க வழிபிறக்கும்..
ஞாயிற்றுக்கிழமை சூரிய ஓரையில் சிவபெருமானுக்கு செந்தாமரை வைத்து 6 நெய்தீபமேற்றி வழிபட கடன்கள் விரைவில் தீரும்..
திண்டிவனம் அருகில் இருக்கும் திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலுக்கு உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் சென்று காலை 5 மணிக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட கடுமையான நெருக்கடிகள் தீரும்.
குலதெய்வம் கோயிலுக்கு மாதம் தோறும் சென்று வழிபடுங்கள். ஆண் தெய்வமாக இருந்தால் அமாவசை அன்றும் பெண் தெய்வமாக இருப்பின் பெளர்ணமி அன்றும் செல்லலாம்..16 விதமான அபிஷேகம் செய்து சர்க்கரை பொங்கல் வைத்து கோயிலுக்கு வருவோருக்கு பிரசாதமாக கொடுக்கவும். 27 நெய்தீபம் ஏற்றி வழிபடவும்..
ஜாதகத்தில் என்ன திசைபுத்தி நடக்கிறதோ அதற்கேற்றப்படி தானம், தர்மம் செய்து கர்ம வழி தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ளவும்.
குறிப்பு;
கண்டிப்பாக உழைப்பும் இதில் இருக்க வேண்டும்
வெறும் பரிகாரங்கள் மட்டும் பலனளிக்காது.
No comments:
Post a Comment