Sunday, July 18, 2021

நற்சிந்தனைகளாலும், நற்செயல்களாலும் மலரும் புதிய பயனுள்ள மலர்களால் பாதையை நிரப்புங்கள்.

 களை இல்லாத தோட்டம் இல்லை; அதுபோலவேதனை, போராட்டம் இல்லாத வாழ்க்கையும் இல்லை. வாழ்க்கையை அழகானதாக மாற்றி கொள்வது நம் கையில்தான் உள்ளது...

எல்லோர் வாழ்விலும் இன்ப, துன்பங்கள் உள்ளன. நாம் அவற்றை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பது மிக முக்கியம். ஆசையை குறைத்துக் கொள்ள வேண்டும். மன நிறைவு இருந்தாலே போதும், வாழ்வில் மகிழ்ச்சி நிலைத்து இருக்கும்...
போராட்டங்கள் இருந்தாலும் கூட, யாரும் வாழ்க்கையை வெறுப்பதில்லை. போராட்டங்களையெல்லாம், ஏற்றுக் கொள்ளவும், நமக்கு ஏற்றதாக மாற்றிக் கொள்ளவும் பழகினாலே போதும், வாழ்க்கை பூந்தோட்டமே...
நீங்கள் எப்படிப்பட்ட பாதையில் பயணம் செய்தாலும் உங்கள் நற்சிந்தனைகளாலும், நற்செயல்களாலும் மலரும் புதிய பயனுள்ள மலர்களால் பாதையை நிரப்புங்கள். வாழ்க்கைப் பயணம் இனிதாய் அமையும். வாழ வாருங்கள்; வாழ்க்கைக்கு வழிகள் ஆயிரம் உள்ளன.. வெற்றிபெற்ற வாழ்க்கையை வாழ்வோம் நம்பிக்கையோடு தொடங்குவோம் வெற்றி நிச்சயம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...