காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு நீட் தேர்வு மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றுகிறது.
கூட்டணியில் இருக்கும் தமிழக முதலமைச்சர் கருணாநிதி நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்கு கேட்கிறார்.
காங்கிரஸ் மறுக்கிறது.
கூட்டணியை நிர்பந்திக்கவும் முடியாமல், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அடிவிழாமலும் தப்பிக்க தமிழ்நாட்டிற்கு ஓராண்டு நீட் விலக்கு கேட்டு திமுக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறது.
அதனை ஏற்றுக்கொண்டு 2011ல் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்களித்தது நீதிமன்றம்.
2011ல் திமுக படுதோல்வியடைந்து தமிழக ஆட்சியை இழக்கிறது.
2014ல் காங்கிரஸ் படுதோல்வியடைந்து மத்திய ஆட்சியை இழக்கிறது.
தன்னை இப்போது தமிழனாக உணரும் ராகுல்காந்தி நினைத்திருந்தால் திமுகவின் கோரிக்கையை ஏற்று 2010லேயே நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களித்திருக்கலாம். ராகுல் காந்தியின் காங்கிரஸ் அரசை எதிர்த்து கருணாநிதியும் நீதிமன்றத்திற்கு போயிருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது.
ராகுல் காந்தி ஆட்சியில் இல்லாததால் தன்னை தமிழனாக உணர்கிறார். ஆட்சியில் இருந்தால் ராகுலும் இன்னொரு மோடிதான்.
மோடி வேஷ்டி, சட்டையோடு தமிழ்நாட்டிற்கு வருவதும், ராகுல் தன்னை தமிழன் என சொல்லிக்கொள்வதும் ஒன்றுதான்.
இரண்டுமே கொரளிவித்தைதான். சில்லரையை சிதறவிடாமல் இருப்பதே புத்திசாலித்தனம்.
No comments:
Post a Comment