மத்திய அரசு எல் ஐ சியை மொத்தமா விற்கிறது
மத்திய அரசு எல் ஐ சியை தனியாருக்கு தாரை வார்க்கிறது
இந்தியா திவால் ஆவதைத் தவர்க்க எல் ஐ சியை விற்கிறது மத்திய அரசு
எல் ஐ சியில் போட்ட பணம் கோவிந்தா
இது மாதிரி பல பேர் சொல்லக் கேட்கிறோம், இவற்றில் ஏதும் உண்மை இருக்கா? இல்லை என்பதே என் பதில். வாட்சப் வெறியர்களின் பல கைங்கர்யங்கள் போலவே இவையும்.
இந்த Disinvestment குறித்து தகவல்களும் என் கருத்தும்.
எல் ஐ சி ஒரு பார்வை
1956 இல் பிரதமர் நேருவால் உருவாக்கப்பட்ட இந்திய அரசு நிறுவனம். ஆரம்பிக்கப்பட்ட அல்ல உருவாக்கப்பட்ட. டாடாவிடம் இருந்த விமான சேவை அரசு மயமாக்கப்பட்டு பல்லாண்டுகளுக்குப்பிறகு டாடாவிடமே சென்றது போல 245 சிறு காப்பீட்டு நிறுவனங்கள் அரசிடம் போய் மேலும் 5 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உருவானது எல் ஐ சி - இப்போது மொத்தமாக தனியார் வசம் போகாமல் பிற PSUக்கள் போல ஆக ஆரம்பிக்கிறது
இன்று வரை இது 100% இந்திய அரசு நிறுவனம்
இந்தியாவின் நம்பர் 1 ஆயுள் காப்பீட்டு நிறுவனம்
8 zonal offices, 113 டிவிஷனல் ஆஃபிஸ், 2000+ ப்ரான்ச் ஆபீஸ், 15 லட்சத்துக்கும் மேற்பட்ட இன்சூரன்ஸ் ஏஜெண்ட்கள் கொண்ட நிறுவனம்
இந்தியாவில் தவிர 14 நாடுகளில் காப்பீட்டுத் தொழில் செய்யும் நிறுவனம், ஃபிஜி, பஹ்ரைன், நேபாள் போன்ற நாடுகளில் நம்பர் 1 காப்பீட்டு நிறுவம் எல் ஐ சியே
எல் ஐ சி யின் சொத்து மதிப்பு 45 லட்சம் கோடி
ரூபாய்கள். சென்ற ஆண்டு பங்குகள் விற்பனை மூலம் மட்டும் லாபம் 37000 கோடி ரூபாய்கள். இந்த ஆண்டு முதல் பாதியில் காப்பீடு லாபம் மட்டும் 1437 கோடி ரூபாய்கள்.
எல் ஐ சி இந்தியாவில் என்னோட ஃபேவரைட் காப்பீட்டு நிறுவனம். உலக அளவில் அதிக அசையும் / அசையா சொத்துகள் கொண்ட காப்பீட்டு நிறுவனம்
எல் ஐ சி இந்தியாவின் உண்மையான மல்ட்டி நேஷனல் ஜயண்ட்.
எல் ஐ சி தன் சொத்தில் பாதியைத்தான் பங்குகளில் முதலீடு செய்துள்ளது, மிச்சத்தை அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளது. ஒரு வங்கியின் 51% பங்குகளை வாங்குவதாலயோ, பங்குச் சந்தை வீழும் போது பொதுத்துறை, தனியார் நிறுவன பங்குகளை வாங்குவதன் மூலம் சந்தை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த செலவிடுவதாலோ எல் ஐ சிக்கு எவ்வித பெரிய பாதிப்பு வரவே வராது. அது போல கம்பெனியின் 5% பங்குகளை வெளியிடுவதாலும் அதற்கு எவ்வித பாதிப்பும் வராது
எல் ஐ சியின் அசுர பலத்துக்கு அதை அழித்தே ஆகணும்னு முழு மூச்சா இயங்கினாலும் அதுக்கு அம்பது வருசம் ஆகும்.
Disinvestment
இப்போது எல் ஐ சியின் 5% மட்டுமே பொதுமக்களுக்கும் முதலீட்டு நிறுவனங்களுக்கும் வழங்கப் படுகிறது. வரும் நாட்களில் அடுத்த 20-25% விற்கப்படும். பிற அரசுத் துறை நிறுவனங்கள் போல மத்திய அரசு குறைந்த பட்சம் 51% வைத்துக்கொண்டு மிச்ச 49% வரை எதிர்காலத்தில் விற்கப்படும்
பொதுவா நான் அரசுகள் தொழில் செய்வதை விரும்புவதில்லை. அரசு அரசாங்கம் நடத்தணும், பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் போன்றவற்றை உறுதி செய்யணும். பணம் அச்சடிப்பதை தன் வசம் வைத்திருப்பதன் மூலம் விலைவாசியை கட்டுக்குள் வைக்க வேண்டும். நலத்திட்டங்கள் வழங்குவதும் அரசின் செயலே. மத்தபடி மிட்டாய் விக்கறது, ஏரோப்ளேன் விடறது, செல் போன் விக்கறது எல்லாம் அரசின் வேலையல்ல. அப்படி முயலும் போது அரசு நிறுவனங்களின் Efficiency மிக மோசமாக இருக்கும். அரசு நிறுவனமாக இருப்பதன் நிர்பந்தகளும் ரெட் டேப் கலாச்சாரமும் அதை நல்ல முறையில் நடக்க அனுமதிக்காது. எனவே அரசு தன் நிறுவனங்களை நல்ல விலைக்கு விற்க முடியும் போது விற்று விடுவது நல்லது. இல்லேன்னா ஏர் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமைதான் மற்ற நிறுவனங்களுக்கும் வரும்.
காபிடலிஸ சிந்தனை கொண்ட நான் எல் ஐ சியை ஒரு Exception ஆக பார்க்கிறேன். அதற்குக் காரணம் அதன் Uniqueness. பிற நிறுவனங்கள் பொருட்களை உற்பத்தி செய்தோ வாங்கியோ சந்தையில் விற்று லாபம் பார்க்க வேண்டும், உதாரணங்கள் பி எச் இ எல், ஐ ஓ சி எல் இன்ன பிற.
எல் ஐ சிக்கு கச்சாப் பொருள் என்பதே இல்லை. அது பொருளை வாங்குவதுமில்லை உற்பத்தி செய்வதுமில்லை. வெறும் 1.1 லட்சம் பேர் மட்டுமே சம்பளம் பெரும் ஊழியர்கள் – வருமானம் ஈட்டித்தரும் ஏஜெண்ட்கள் அனைவருமே கமிஷன் அடிப்படையில் பணி புரிபவர்கள். ஆகவே எல் ஐ சியின் Operating Expenses ரொம்ப கம்மி. எல் ஐ சியின் கஸ்டமர்களோ தெய்வங்கள் 15 முதல் 40 ஆண்டுகள் என மிக நீண்ட நாட்களுக்குத் தவராமல் பணம் செலுத்திவிட்டு வெறும் 4-5% வளர்ச்சியை சந்தோசமா வாங்கிக் கொள்ளத் தயாராய் இருக்கிறார்கள். எல் ஐ சி விற்பனை செய்வதில் பெரும் பகுதி எண்டோமெண்ட் பாலிசிகள் – இவற்றில் Sum Assured மிகவும் குறைவு . பாலிசி காலத்தில் பயனர் இறந்தாலும் எல் ஐ சி தர வேண்டிய தொகை மிகவும் குறைவு. பல்லாண்டுகளுக்கு பண வரத்து கேரண்டீட், அதனால் அதை நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்ய முடியும். கடைசியில் பணம் போட்டவர்களுக்கு வெறும் 4-5% ரிட்டர்ன் கொடுத்தாப் போதும் அதுக்கும் உத்தரவாதம் தரத் தேவையில்லை
இது ஒரு Dream Position to be in, இதனால் தான் ஒவ்வொரு ஆண்டும் எல் ஐ சியின் சொத்து மதிப்பு கூடிக்கொண்டே போகிறது. ஒரு சில முதலீடுகள் சரியா போகலேன்னாலும் பெரிய பாதிப்பு ஏற்படுவதில்லை.
இப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தின் 5% கூட ஏன் விற்கத் தேவையில்லை என்பது என் கருத்து. அதற்கு பதில் வேறு சில பல பொதுத்துறை நிறுவனங்களை மொத்தமா வித்துடலாம்.
நல்லதா கெட்டதா?
எல் ஐ சி Disinvestment தேவையில்லாத ஆணி என்று நான் கருதினாலும் அதிலும் சராசரி இந்தியர்களுக்கு சாதகங்கள் இருக்கத்தான் செய்கிறன. எல் ஐ சியின் அசுர பலம் இந்தியர்கள் தந்தது. எல் ஐ சி ஒரு பொதுச் சொத்து, ஒவ்வொரு இந்தியனும் அதன் உண்மையான உரிமையாளர். இந்த Disinvestment அதை உணமையிலேயே இந்தியர்கள் அனுபவிக்க ஒரு வாய்ப்பைத் தரும். எல் ஐ சி இயங்கும் விதத்திலும் Transparency, Accountability ஐ இது கொண்டு வரும், இல்லேன்னா வருடாந்திர மீட்டிங்கில் ஷேர் ஹோல்டர்களுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
எண்டோமெண்ட் ப்ளான்ல பணம் போட்டு 4-5% சம்பாதிப்பதற்கு பதில் எல் ஐ சியின் பங்குகளை வாங்கி லாபம் பாக்கலாம்.
எல் ஐ சி மட்டும் என்றில்லை, அனைத்து எண்டோமெண்ட் வகை பாலிசிகளிலும் 4-5 % வளர்ச்சிதான் கிடைக்கும் என்பது நாம் அறிந்ததே. அதுவும் நிச்சயம் கிடையாது என்பதும் நமக்குத் தெரியும். மத்திய அரசு வருடா வருடம் எல் ஐ சி தரும் டிவிடெண்ட் வாங்கி ருசி கண்டு விட்டது அதை விட அரசு விரும்பாது. இனிமே டிவிடெண்ட் தரும் போது அரசுக்கு மட்டுமன்றி பங்குதாரர்களுக்கும் தர வேண்டும். IOCL, BPCL, BHEL போன்ற அரசுத் துறை நிறுவனங்கள் போல எல் ஐ சி யும் நல்ல டிவிடெண்ட் தரும் என நம்பலாம். குறைந்த பட்சம் எண்டோமெண்ட் பாலிசிகள் தரும் வளர்ச்சியை விட டிவிடெண்டே அதிகம் வரும். பங்கு விலையின் வளர்ச்சி தனி
பயனர்கள் செய்ய வேண்டியது என்ன ?
எல் ஐ சி பாலிசிதாரகள், ஊழியர்கள், முகவர்களுக்கு பங்கு வாங்குவதில் முன்னுரிமை தருகிறது. நான் எல் ஐ சி பங்கில் முதலீடு செய்யப் போகிறேன். விருப்பமும் முதலீட்டுக்கு பணமும் இருப்போர் சுயமாய் முடிவெடுத்து முதலீடு செய்யலாம்
வேறு எதுவுமேயில்லை, வழக்கம் போல இருங்கள். டெர்ம் பாலிசி எடுக்க நினைத்திருந்தால் தாராளமாக எடுங்கள். ஏற்கெனவெ எடுத்திருந்தால் தொடர்ந்து பணம் கட்டுங்கள்.
எண்டோமெண்ட் பாலிசி எடுத்திருப்போர், மனம் திருந்தி அவற்றை கேன்சல் செய்ய எண்ணியிருந்தால் ஓகே, எல் ஐ சி திவால் ஆகிடுமோ, தனியார் கிட்ட போய் நமக்கு பணம் இல்லேன்னு சொல்லிடுவாங்களோ என்ற பயத்தில் மட்டும் கேன்சல் செய்ய நினைச்சா – வேண்டாம், எல் ஐ சி பத்திரமாய் இருக்கும்
எல் ஐ சியின் Disinvestment ஐ கொள்கை ரீதியாக எதிர்ப்போர், அது முழுக்க முழுக்க அரசிடமே இருக்க வேண்டும் என்று நினைக்கும் சோசியல் மீடியா போராளிகள், யூனியன்கள், காம்ரேட்கள் ஏனையோர் பங்குகள் வெளியாகும் போது அனைத்து பங்குகளையும் நீங்களே வாங்கிடுங்க – கொள்கை முடிவுகள் அனைத்திலும் அரசின் பக்கம் நில்லுங்கள் – அப்படிச் செய்தால் ப்ராக்டிக்கலா எல் ஐ சி 100% அரசிடம் இருக்கும். பங்குகளை வாங்கி அரசுக்கே தானமா கொடுத்துடுஞ்க அது அதை விட இன்னும் சிறப்பு.
No comments:
Post a Comment