----------------------+-+-+-+-+------------------
*சின்ன கற்பனை ...*_
_*கிபி 2021 இந்தியா...*_
_*என்னப்பா இது டெய்லி வீட்டுக்கு ஆவின் பால் தானே போடுவே இதென்ன அதானி பால்? மன்னிக்கவும் சார் ஆவினை அதானி வாங்கிட்டாங்க...*_
_*என்னப்பா தி இந்து தமிழ் நாளிதழ் நாங்க வாங்கறதில்லையே இப்போ எதுக்கு அதைக் கொண்டு வந்து போடுற? விஷயம் தெரியாதா சார் ஹிந்துவை இப்போ ஹிந்துஸ்தான் லீவர் கம்பெனி வாங்கிடுச்சு இனி நாட்டில் இந்த ஒரே நியூஸ் பேப்பர் மட்டும் தான்.!*_
_*கேபிள்காரரே வெறும் சங்கரா டிவி.. காசி யாத்திரை.. தியானம்.. யோகா.. கோவில்கள்.. பசுமாடு.. கோமியம்.. ஹோமம்.. அபிஷேகம்.. கோவில்கள் குடமுழுக்கு, இராசிபலன், ஜோசியம்.. கதாகாலட்சேபம் இராமாயணம், மஹாபாரதம் நிகழ்ச்சியா வருதே...*_
_*விஜய் டிவி, சன் டிவி எல்லாம் ஏன் வரலை?*_
_*கேபிள் மொத்தத்தையும் பாபா இராம்தேவ் வாங்கிட்டாரும்மா இனி இந்தச் சானல்கள் மட்டும் தான் வரும்.. இந்தக் கேபிள் கனெக்ஷனை நீங்க கட் பண்ணாலும் மாத வாடகை கட்டாயம் உண்டு அப்புறம் உங்க இஷ்டம்.!*_
_*இங்க இருந்த உழவர் சந்தை எங்கங்க.. அடடா விஷயம் தெரியாதா சார் அதெல்லாம் ரிலையன்ஸ் வாங்கிட்டாங்க நேரா போயி லெஃப்டில் திரும்பினா 10 மாடி ரிலையன்ஸ் ஃபிரெஷ் வரும் அங்க போங்க!*_
_*என்னங்க இது அடுத்த ஸ்டாப்பில் இறங்க ₹50 ரூபாய் டிக்கெட்டா கவர்மெண்ட் பஸ்ஸில் இப்படியா கொள்ளையடிப்பிங்க? இந்தாப்பா இது கவர்மெண்ட் பஸ் இல்ல இதை டாடா கம்பெனி வாங்கிட்டாங்க.. இதான் கட்டணம் இருந்தா ஏறு இல்ல பொடி நடையா நடந்து போ.!*_
_*ரிஜிஸ்டிரர் சார் வீடு வாங்கினதுக்கு பத்திரம் பதிய எதுக்கு அம்பானி க்ரூப் கம்பெனிக்கு போகச் சொல்றிங்க.. என்ன சார் விஷயம் தெரியாதா பத்திரப்பதிவுத்துறையை போன வாரம் அவங்க வாங்கிட்டாங்களே.!*_
_*என்னது பிளாட்பார்ம் டிக்கெட் 500 ரூபாயா? டிரெயினில் சென்னை போகக் கூட அவ்வளவு ஆகாதே! யாரு சொன்னா இப்போ சென்னைக்கு இரயில் டிக்கட் ₹6000 ரூபாய் இரயில்வேயை அனில் அம்பானி வாங்கிட்டாரு தெரியுமில்ல.!*_
_*என்னங்க இது அநியாயமா இருக்கு மொபைலுக்கு மினிமம் டாப் அப்பே ₹3000 ரூபாயா? பி.எஸ்.என்.எல் பேரை கெடுக்குறீங்களே!! அய்யா இதை ஜியோ வாங்கி 4 நாளாகுது நாட்டில் இது ஒரு நெட்வொர்க் தான் இப்போ..! நாங்க சொல்றது தான் இப்போ சட்டம்.!*_
_*என்னங்க இது எல்லா பேங்கும் மூடிட்டாங்க.! பேங்கை ஃபுல்லா வேதாந்தா க்ரூப் வாங்கிடுச்சாம்.. ஒரே வங்கி.! ஊரெல்லாம் சங்கி.!*_
_*பையனை ஸ்கூலில் எல்.கே.ஜி சேர்க்கணும்.. அப்போ அதானி கம்பெனி ஷேர் 5 இலட்சத்துக்கு வாங்கிட்டு அதோட ஃப்ரூப் அனுப்புங்க நாளைக்கே அட்மிஷன் போட்டுடுவோம்..! ஏன்னா எல்லா ஸ்கூல் & காலேஜையும் அதானி வாங்கிட்டாங்க.!*_
_*அம்மா எலக்டிரிக் ரீடிங் எடுக்க ரிலையன்ஸ் கம்பெனியில் இருந்து வந்துருக்கோம் மீட்டர் பாக்ஸை திறங்களேன்.!*_
_*ஏன் அவரை போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டு போறாங்க? பின்ன என்னங்க பதஞ்சலி மினரல் வாட்டர் வாங்காம வீட்டில் போர் போட்டுத் தண்ணி எடுத்துருக்கான்.. அரசாங்கம் சும்மா விடுமா!*_
_*நீங்க இவ்வளவு குண்டா குள்ளமா இருக்கிங்க உங்களை எப்படி இராணுவத்தில் எடுத்தாங்க ? அட நாட்டு இராணுவத்தை தான் ரிலையன்ஸ் செக்யூரிட்டி சர்வீஸ் கிட்ட கொடுத்துட்டாங்களே பணம் இருந்தா யாரு வேணா இதில் சேரலாமே.!*_
_*இனி நீங்களும் சொல்லலாம்...*_
_*மக்களே இந்தப்பதிவு சிரிப்பதற்கு அல்ல, சிந்திப்பதற்கு.*_
_*வரும் காலங்கள் இப்படி மாறலாம் எல்லாவற்றையும் தனியார் மயமாக்க படலாம்!!!*_
_*இந்த லாக் டவுன் கொரானாவுக்கு அல்ல. தனியார் மயமாக்க படுவதற்காகவே!.*_
_*சிரிப்பதற்காக அல்ல இந்த பதிவு...*_
_*சிந்திப்பீர்!*_
_*விழித்தெழுங்கள்!*_
No comments:
Post a Comment