Thursday, February 3, 2022

ஆளுநர்களுடைய சிக்கல்கள்.

 ஆளுநர்களுடைய குறைபாடுகள், சிக்கல்களை அறிய வேண்டுமென்றால், ஆங்கிலேயர் காலத்தில் மின்டோ மார்லி  சீர்திருத்தத்தம் மற்றும் Raja Nandakumar caseலிருந்து கவர்னர்களுடைய செயல்பாட்டை கவனிக்க வேண்டும்.


கவர்னர் சர்ச்சைகள், கடந்த கால இந்திய 75 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில், நடத்ததையும், இதைக் குறித்து நடந்த ஆய்வுகளையும் கவனிக்க வேண்டும். 


1. அரசியலமைப்பு அவையின் கவர்னரை குறித்த விவாதங்கள்.

 

2. 1964ல் மொராஜி தேசாய், பின் அனுமந்தப்பா தலைமையில் அமைந்த, அன்றைய  சென்னை மாநில முதல்வர் எம்.பக்தவச்சலம் உறுப்பினராக இருந்த நிர்வாக குழுவினுடைய அறிக்கை. 


3. அண்ணா ஆளுநரை பற்றி கூறிய எழுப்பிய பிரச்சனைகள். 


4. தலைவர் கலைஞர் அமைத்த இராஜமன்னார் குழு மாநில சுயாட்சி அறிக்கை. 


5.கர்நாடக முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே மத்திய மாநில உறவுகள் குறித்து ஆய்ந்து, கவர்னர் வேண்டாமென்று வெளியிட்ட வெள்ளையறிக்கை. மற்றும் அவர் தென் மாநில முதல்வர்களின் மாநாட்டு தீர்மானங்கள்.


6. என்.டி.ராமராவ் தலைமையில்… விஜயவாடாவில் நடந்த 356 யை குறித்த மாநாடும், 


7.ஸ்ரீநகரில் பரூக் அப்துல்லா கூட்டிய கூட்டத்தில் கவர்னரை குறித்தும், 356 யை குறித்தும் விரிவாக பேசப்பட்டு வெளிவந்த ஷாகினுடைய நூல். 


8. இந்திரா காந்தி அமைத்த சர்க்காரியா குழு அறிக்கை. 


9.பரூக் அப்துல்லாவின் காஷ்மீர் அரசின் மாநில சுயாட்சி அறிக்கை. 


10வாஜ்பாய் காலத்தில் அரசியல் அமைப்பு சாசனம் திருத்தத்தை குறித்து அமைக்கப்பட்ட வெங்கடாசலய்யா குழு அறிக்கை. 


இவற்றையெல்லாம் பார்த்தால் கவர்னர்களுடைய நடவடிக்கைகளை குறித்து நமக்கே ஒரு தெளிவான பார்வை வரும். ஆளுநர்கள் என்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அழுத்தம் திருத்தமாக வாதங்கள் வைக்க, இவற்றையும் வாசித்து புரிதலோடு அழுத்தமாக பிரச்சாரத்தை எடுக்க வேண்டும் என்பதற்காக இதை இங்கே குறிப்பிடுகிறேன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...