இன்று உலக புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. துவக்க நிலையிலேயே கண்டறிந்து பரிசோதனை மேற்கொண்டால் பெரும்பாலான புற்றுநோய் பாதிப்பை குணப்படுத்தலாம். புற்று நோயின் வகை, அதன் நிலை, வயது, உடல்நிலை ஆகியவற்றை பொறுத்து சிகிச்சை வழங்கப்படும். இதற்கு ஒரே சிகிச்சை என்பது இல்லை.
ரேடியேஷன், கீமியோதெரபி, இம்மினோ தெரபி, ஹார்மோன் தெரபி, ஜென் தெரபி உட்பட பல சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆண்களிடம் பொதுவாக நுரையீரல், புரோஸ்டேட், பெருங்குடல், வயிறு, கல்லீரல் போன்ற புற்றுநோயும், பெண்களிடம் மார்பகம், பெருங்குடல், நுரையீரல், கர்ப்பவாய், தைராய்டு புற்றுநோய் ஏற்படுகிறது.
என்ன காரணம்
நுரையீரல் புற்றுநோய் ஏற்பட 70 சதவீதம் புகையிலையே காரணம். நாட்டில் புகையிலை பயன்படுத்துபவர்களின எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர, குறையவில்லை. சிகரெட்டில் இருக்கும் நிக்கோடின் உட்பட 50க்கும் மேற்பட்ட நச்சுத்தன்மை அமிலங்கள் புற்றுநோயை ஏற்படுத்துகின்றன.
பெரிய சுமை
தனிநபர், குடும்பம், சமூகம், சுகாதார அமைப்புகள் மீது உடல், உணர்ச்சி ரீதியாக, நிதி விஷயத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி உலகளவில் பெரும் சுமையை புற்றுநோய் ஏற்படுத்துகிறது.
பாதுகாப்பது எப்படி
ஆல்கஹால், புகையிலை பயன்பாட்டை கைவிட வேண்டும். சத்தான காய்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும். தினமும் 40 நிமிட உடற்பயிற்சி மிக அவசியம். சீரான உடல் எடையை கடைபிடிக்க வேண்டும். துரித உணவு, பிளாஸ்டிக்கில் உணவு, காற்றுமாசு அதிகமுள்ள இடங்களை தவிர்க்க வேண்டும்.
30 இதில் 30 - 50 சதவீத புற்று நோய் பாதிப்பு குணப்படுத்தக்கூடியவை.
ஆறில் ஒன்று
உலகில் உயிரிழப்பை ஏற்படுத்தும் காரணிகளில் புற்றுநோய் முன்னணியில் உள்ளது. 2020ல் 1 கோடி பேர் அல்லது ஆறில் ஒரு உயிரிழப்புக்கு புற்றுநோய் காரணமாக அமைந்தது. இதில் அதிகபட்சமாக மார்பக புற்றுநோயால் 22.60 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment