*குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் அருமையான பல பாரம்பர்ய முறைகள்* நம்மிடம் இருந்தன. இவை, தற்போது `வேக்ஸின்’களின் வருகையால் ஒட்டுமொத்தமாக மலையேறிவிட்டன. குழந்தைகள் நல மருத்துவர்கள் இந்தப் பாரம்பர்யப் புரிதலை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் இந்த முறைகள் தொலைந்துபோவதற்கு முக்கியமான காரணமாகிவிட்டது.
கிட்டத்தட்ட *16 வகையான வேக்ஸின்களை* வலியுறுத்தும் மருத்துவச் சமூகம், நம்மிடையே இருந்த *23 நோய் எதிர்ப்பு சக்தி தரும் மருந்துகளை* அதன் ஆழத்தையும், மருத்துவக் குணத்தையும் புரிந்துகொள்ளாமல், மறக்கச் செய்துவிட்டது.
*மறந்துட்டோமே "உரை மருந்து"*
இந்தக்கால தாய்மார்கள் பலருக்கு இந்த வார்த்தை புதிதாக இருக்கலாம். ஆனால் நீங்கள் உங்கள் அம்மாவிடமோ அல்லது பாட்டியிடமோ இதை பற்றி கேட்டால், அவர்கள் சொல்வது இதுவாக தான் இருக்கும்," ஆம் அந்தக்காலத்தில் நாங்கள் உரை மருந்து கொடுக்காமல் குழந்தைகளை வளர்த்ததில்லை". இந்த அறிய பொக்கிஷத்தை மூடநம்பிக்கை, நேரமின்மை, சரியான புரிதல் இன்மை மற்றும் நம் முன்னோர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் என்று நினைப்பது இப்படி பல காரணங்களால் மறந்துவிட்டோம். நாங்கள் நீங்கள் இதை செய்தே ஆகவேண்டும் என்று உங்களை வற்புறுத்தவில்லை. ஆனால் நீங்கள் உங்கள் குழந்தையின் நன்மைக்காக இந்த மருத்துவ முறை பற்றி சிறிது ஆராய்ந்து பின்னர் முடிவு எடுங்கள்.
*அந்தக்காலத்தில் மருத்துமனைக்கு குழந்தைகளை தூக்கி சென்றதே இல்லை என்ற நிலை தற்போது மாறி இருப்பதை பற்றி சிந்தித்து பாருங்கள்.*
*உரை மருந்து என்றால் என்ன?*
இயற்கை மருந்துகள் சிலவற்றை உரைகல்லில் உரைத்து குழந்தைகளுக்கு புகட்டுவது.
*எவை எவை உரை மருந்தாகிறது?*
1.வசம்பு
2.கடுக்காய்
3.மாசிக்காய்
4.சித்தரத்தை
5.ஜாதிக்காய்
6.சுக்கு
*மஞ்சள்(தேவை என்றால்)
2.கடுக்காய்
3.மாசிக்காய்
4.சித்தரத்தை
5.ஜாதிக்காய்
6.சுக்கு
*மஞ்சள்(தேவை என்றால்)
*எப்படி உபயோகப்படுத்துவது?*
முதலில் மேற்கூறப்பட்டுள்ள மருத்துகளை ஒரு கப் தண்ணீர் அல்லது தாய்பால் விட்டு கொதிக்க விடவும். பிறகு ஒரு கப் தண்ணீர் அரை கப் அளவான உடன், தண்ணீரை வடிகட்டி விட்டு மருந்துகளை நிழலில் உலர்த்தி காற்று புகாத மூடி போட்ட பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
முதலில் மேற்கூறப்பட்டுள்ள மருத்துகளை ஒரு கப் தண்ணீர் அல்லது தாய்பால் விட்டு கொதிக்க விடவும். பிறகு ஒரு கப் தண்ணீர் அரை கப் அளவான உடன், தண்ணீரை வடிகட்டி விட்டு மருந்துகளை நிழலில் உலர்த்தி காற்று புகாத மூடி போட்ட பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மருந்துகளை உரைகல்லில் தாய்பால் அல்லது தண்ணீர் விட்டு உரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மருந்தையும் இரண்டு முதல் பதினைந்து முறை வரை உரைக்கலாம்.(வசம்பை தவிர)
உரைத்து எடுத்த மருந்தை பாலாடையில் விட்டு மேலும் சிறிது தாய்பால் அல்லது தண்ணீர் விட்டு குழந்தைக்கு புகட்ட வேண்டும்.
*எப்போது கொடுக்க வேண்டும்?*
குழந்தையை குளிக்க வைத்தவுடன் இந்த மருந்தை கொடுப்பது வழக்கம்.
ஒரு நாள் விட்டு மறுநாள் கொடுக்கலாம்.
குழந்தையின் இரண்டு மாதம் முதல் மூன்று வயது வரை கொடுக்கலாம்.
*உரை மருந்துக்கான மூலப் பொருட்களும் அவற்றை சுத்தப்படுத்தும் முறைகளும், அவற்றின் மருத்துவ பயன்களும்*
கடுக்காய், சித்தரத்தை, சுக்கு, ஜாதிக்காய், மாசிக்காய், வசம்பு என்ற ஆறு கடைச்சரக்குகள்.
நெல்லைப் புழுக்குவதற்கு வேக வைக்கும்போது நெல்லுடன் இவற்றை அப்படியே வெள்ளைத்துணியில் முடித்து வைத்துவிடவும்.
அல்லது (2கிலோ நெல் வாங்கி வந்து தனியாக அவிக்கவும்.)
அரை வேக்காடு ஏற்பட்டதும் (காய்களை அழுத்தினால் அழுந்தும் பதம் வந்தவுடன்) எடுத்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். உரை மருந்து தயார்.
அல்லது (2கிலோ நெல் வாங்கி வந்து தனியாக அவிக்கவும்.)
அரை வேக்காடு ஏற்பட்டதும் (காய்களை அழுத்தினால் அழுந்தும் பதம் வந்தவுடன்) எடுத்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். உரை மருந்து தயார்.
கை அகலத்திலுள்ள உரைகல் ஒன்று தேவை.
அதில் வெந்நீர், வெற்றிலைச் சாறு, துளசிச் சாறு, ஓமகஷாயம், இஞ்சிச் சாறு இவற்றில் ஒன்றைவிட்டு ஒவ்வொன்றையும் வயதிற்கேற்றபடி 2 அல்லது 5 தடவை உரைத்து வந்த விழுதைத் தேன் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொடுக்கவும்.
அதில் வெந்நீர், வெற்றிலைச் சாறு, துளசிச் சாறு, ஓமகஷாயம், இஞ்சிச் சாறு இவற்றில் ஒன்றைவிட்டு ஒவ்வொன்றையும் வயதிற்கேற்றபடி 2 அல்லது 5 தடவை உரைத்து வந்த விழுதைத் தேன் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொடுக்கவும்.
வாயு, சளி -வெந்நீர்; சளி, மப்பு -வெற்றிலைச்சாறு, துளசிச் சாறு, தேன்; வயிறு மந்தம், வயிற்றுப்போக்கு-ஓமகஷாயம், தேன். மப்பு, ஜூரம், வாந்தி -இஞ்சிச்சாறு, தேன் என்று மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
*கடுக்காய்:*
நல்ல ஜீரண சக்தி, பசி தரும். மலத்தை இளக்கும். புளிப்பு(வயிற்றில்) அதிகமாவதைத் தடுக்கும். அஜீரண பேதியைத் தடுக்கும். குடல், இரைப்பை, கல்லீரல் சரியே இயங்கச் செய்யும்.
*சுக்கு:*
வயிற்றில் வாயு சேர விடாது. வயிறு உப்புசம், மலஜலம் சரியாக வெளியேறாதிருத்தல், மப்பால் வயிற்றுவலி, அஜீரணம், வாந்தி இவற்றைப் போக்கும். ஆனால் வயிற்றில் அழற்சி, கடுப்புடன் சீதத்துடன் மலம் வெளியாதல் ரத்தப்போக்கு போன்றவை இருந்தால் சுக்கை உரைத்துக் கொடுக்கக்கூடாது.
*சித்தரத்தை:*
தொண்டை மார்பு இவற்றில் கபக்கட்டு, உடலில் கடுப்பு வலி இவற்றில் நல்லது. எண்ணெய் தேய்த்தால் ஜூரம் சளி பிடிக்கும் என்ற நிலையில் இதனைத் தொடர்ந்து கொடுக்கலாம். தொண்டை-வாய்ப்புண், வறட்டிருமல், வயிற்று வேக்காளம் உள்ள நிலையில் சித்தரத்தையைக் கொடுக்கக்கூடாது. கபக்கட்டுள்ள நிலையில் இதனையும், சுக்கையும் அதிகம் உபயோகிக்கலாம்.
*ஜாதிக்காய்:*
இரைப்பையை நன்கு தூண்டி, ருசி சுவை கூட்டி பசி ஜீரண சக்தி தரும். சிடுசிடுப்பு, பரபரப்பு, காரணம் புரியாத அழுகை முதலியதைக் குறைத்து அமைதியாகத் தூக்கம் வரச் செய்யும். இளகிச் சூட்டுடன் அடிக்கடி மலம் போவதை இது தடுக்கும்.
*மாசிக்காய்:*
வேக்காளத்தைக் குறைக்கும். வாய்ப்புண், இரைப்பைப் புண், குடல் புண் இவற்றைக் குறைக்கும். பற்களைக் கெட்டியாக அழகாக வளரச் செய்யும். உடலில் விஷசக்தி பரவாமல் தடுக்கும். சிறுநீர் தாராளமாக வெளியாகும். தொண்டைச் சதை வளர்ச்சி, உள்நாக்கு வளர்ச்சி, சீத ரத்தத்துடன் மலப்போக்கு, வாயில் உமிழ்நீர் அதிகம் பெருகுதல் இவற்றைக் கட்டுப்படுத்தும்.
*வசம்பு
இதுவும் கடுக்காயும், பிள்ளை வளர்ப்பான் என்ற பெயர் பெற்றவை. பசியின்மை, சுறுசுறுப்பின்மை, ருசியின்மை இவற்றைப் போக்கும். பரபரப்பு, சிடுசிடுப்பு, அமைதியின்மை இதனைச் சீராக்கும். பால் ஜீரணமாகாமல் வெளுத்து மலம் போவது, கீரிப்பூச்சி, உப்புசம், வயிற்றுவலி, மார்பில் கபச்சேர்வை இவற்றைப் போக்கும். உடல் சீராக வளர உதவும்.
*கார மருந்து* என இதற்குப் பெயர்.
அதனால் உரைத்த மருந்தை சிறுகச் சிறுக புகட்ட வேண்டும். தேன் சர்க்கரை சேர்த்து இனியதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். சிறு சிசுவிற்கு 10 – 15 உரைப்பு வரை தேவைப்படும். மூளைக்கும் குடலுக்கும் நல்ல செயல் திறனைத் தரும் இம்மருந்தை குழந்தைகளுக்கு ஏழு அல்லது எட்டு வயது முடியும் வரை தொடர்ந்து கொடுத்து வரலாம்.
அருமையிலும் அருமையான தகவல்..
No comments:
Post a Comment