பூஜையின் முழுபலனும் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்க – பூஜையின்போது. . .
நமது வீட்டு பூஜை அறையில் நாம் செய்யும் பூஜைகளால் நமக்கும் நமது குடும்ப த்தாருக்கும் அந்த
பூஜையின் முழு பலன்களும் கிடைத்திட நாம் தவிர்க்க வேண்டிய சில வற்றை தவிர்த்து முழுதாக, ஒழுங்காக செய்தாலே போதும் நமக்கும் நமது குடும்பத்தாருக்கும் பூஜையின் முழுபலன்களும் கிட்டும்.
பூஜை (Pooja) அறையில் எந்த பொருட்களை வைக்கக் கூடாது?
பூஜை அறையில் நுனி இல்லாத வெற்றிலை (Betel Leaves)யை வைக்கக் கூடாது, காம்பு இல்லாத வாழைப்பழத்தையும் (Banana-ம்) வைக்கக் கூடாது. வெற்றிலை பாக்கில் சுண்ணாம்பு வைக்க கூடாது.
பச்ச அரிசியை தவரித்து வேறு எந்த அரிசியிலும் சாதம் செய்து கடவுளுக்கு படைக்கக் கூடாது. மேலும் பச்ச அரிசி சாதத்துடன் அவல், பொறி, கடலை, கற்கண்டு ஆகிய பொருட்களை உடன் வைக்காமல் படைக்கக் கூடாது.
நாகப்பழம் (Syzygium cumini), புளியம்பழம் (Tamarind), மாதுளை (Pomegranate), கொய்யாப்பழம் (Guava Fruit), வாழைப்பழம் (Banana), நெல்லி (Nelly) , இளந்தை விளாம்பழம் (Beard) ஆகிய பழங்களை தவிர வேறு எந்த பழங்களையும் படைத்து பூஜை செய்யக் கூடாது. (முன்பு சொன்ன பழங்களைத் தவிர்த்த பிற பழங்கள் சிற்சில தெய்வங்களுக்கு பிடிக்கும் அந்த தெய்வங்களுக்கு அந்தந்த விசேட தினங்களில் படைக்கலாம்.)
தேங்காய் (Coconut) உடைக்கும்போது அதை சமமாக உடைக்க வேண்டும். .ஆனால் அழுகிய தேங்காய், வழுக்கை, கொப்ப ரைத் தேங்காய் மற்றும் கோணலான தேங்காயையோ உடை க்கக் கூடாது. படைக்க கூடாது. உடைத்த தேங்காயை குடுமியு டன் படைக்கக் கூடாது.
வீடுமுழுக்க சாம்பிராணி (Sambrani)புகைபோட்டு பரவச்செய்து வீட்டில் உள்ள கெட்ட சக்திகளை அகற்றாமல் கடவுளை வழிபட க்கூடாது
முதலில்கோலமிடுதல், விக்ரகங்களை சரியாகஅமைத்தல், விளக்கு மற்றும் ஊது வர்த்தி ஏற்றுதல் ஆகியவற்றை முறையா க செய்யாமல் அர்ச்சனை செய்யக் கூடாது. அர்ச்சனை செய்யா மல் கற்பூரம் ஏற்றி வழிபடக் கூடாது.
கடவுள்பூ ஜைக்கு அருகம்புல் (Arugambul), மல்லி (Jasmine), சாமந்தி (Marigold), நீலப்பூ (Blue Flower), ரோஜா (Rose), பன்னீர் (Panneer), சங்குப் பூ (Chunk flower), தாமரை (Lotus), மரிக்கொழுந்து, சம்பங்கி, துளசி, விரிச்சி ப்பூ, ஆகிய மலர்களைத் தவிர்த்து பிற பூக்களை பூஜைக்கு பயன்படுத்தக்கூடாது.
பூவின் இதழ்கள், அழுகிய, வாடிய, பூச்சி கடித்த, காய்ந்து போன பூக்களை பூஜைக்கு பயன்படுத்தவே கூடாது.
No comments:
Post a Comment