*பாவம், புண்ணியம் என்று எதுவும் இல்லை. நம்மிடம் உள்ளதெல்லாம் அறியாமை மட்டுமே. கடவுளை உணர்வதால் அறியாமை விலகுகிறது.
* முதலில் நீ செல்ல வேண்டிய பாதையைக் கண்டுபிடி. அதன் பிறகு செய்யவேண்டியது எதுவும் இல்லை. கைகளைக் குவித்தபடியே கடவுளைச் சரணடைந்துவிடு. பாதையின் போக்கிலேயே லட்சியத்தை அடைந்து விடுவாய்.
* ஓய்வு ஒழிவில்லாமல் வேலை செய்து கொண்டே இரு. ஆனால், செய்யும் வேலையில் நீ கட்டுப்பட்டு விடாதே. அதற்குள் சிக்கிக் கொள்ளாதே. இதுதான் கீதையின் வழி.
* எழுந்திருங்கள், எழுந்திருங்கள். நீண்ட இரவு கழிந்துவிட்டது. பகல்பொழுது நெருங்கிக் கொண்டிருக்கிறது. என் அன்பான இளைஞர்களே! உங்களுக்கு வேண்டுவதெல்லாம் உற்சாகம்… உற்சாகம் மட்டுமே.
*சுயநலம் அற்றவர்களாக இருங்கள். ஒருவர் இல்லாதிருக்கும் போது அவரைப் பற்றி, பிறர் தூற்றுவதை ஒருபோதும் கேட்டுக் கொண்டிருக்காதீர்கள்.
* மற்றவர்களுடைய நன்மையைக் குறித்துச் சிறிதளவு நினைப்பது கூட சிங்கத்திற்குச் சமமான ஆற்றலை நமக்கு தந்துவிடும்.
* வாழ்க்கை என்னும் போர்க்களத்தில், அஞ்சாது எதிர்த்து நிற்கும் வெற்றி வீரன் ஒருவனுடைய மனநிலையே இப்போது நமக்கு தேவை.
* மரணம் என்பது நமக்கு உறுதியாக ஒருநாள் வந்தே தீரும். அதற்குள் சிறிதளவாவது பிறருக்கு பயன்பட்டு அழிந்து போவது நல்லது.
No comments:
Post a Comment