கீழே தரையில் அமர்ந்து #சம்மணங்கால் இட்டு சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
அவரு எவ்வளோ பெரிய ஆளு அவர கீழே உட்கார வெச்சு சாப்பாடு போட முடியும்?
தம்பி எம்புட்டு பெரிய படிப்பு படிச்சுருக்கு அவரு கீழே எல்லாம் உட்கார்ந்து சாப்பிடுவாரா?
போன்ற ஏற்றத்தாழ்வு காணும் கேள்விகள் ஒருபுறம்.
கீழ சம்மணங்கால் போட்டு சாப்பிடற பழக்கமே இல்லைங்க... ,
கீழ உட்கார்ந்து சாப்பிடற அளவுக்கு நான் கேவலமா போயிட்டேனா..? என தன்மானம், கவுரம் சார்ந்த காரணங்களால் மறுபுறம்....
நாம் சம்மணங்கால் இட்டு சாப்பிடும் பழக்கத்தை விட்டு வெகுதூரம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால்,
#அறிவியலோ... சம்மணங்கால் இட்டு சாப்பிடுவது தான் #ஆரோக்கியத்திற்கு#சிறந்தது என பலமாக நமது தலையில் ஒரு குட்டு வைக்கிறது....
நமது உடலை இடுப்பை மையமாக வைத்து, கீழ் உடல், மேல் உடல் என இரண்டாக பிரிக்கலாம். இதில் முக்கியமான உடல் உறுப்புகள் பல மேல் உடலில் தான் இருக்கிறது.
கீழ் உடலில் கால்கள் மட்டுமே இருக்கின்றன. நடக்கும் போது மட்டும் தான் இரத்த ஓட்டம் கால்களுக்கு தேவைப்படுகிறது.
மற்ற வேளைகளில் மேல் உடலில் இருக்கும் கண், காது, மூளை, கணையம், நுரையீரல், சிறுநீரகம், போன்றவைக்கு தான் இரத்த ஓட்டம் அதிகமாக தேவைப்படுகிறது.
சாப்பிடும் போது கீழே தரையில் சம்மணங்கால் இரட்டு அமர்ந்து உணவு உட்கொள்வதால் உடலுக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகம் கிடைக்கிறது.
காலை மடக்கி அமரும் இந்த நிலை உணவு உட்கொள்வதால், சாப்பிடும் போது மேல் உடலுக்கு தேவையான அளவு இரத்த ஓட்டம் செல்லும். இது மேல் உடல் பாகங்களின் செயற்திறனை ஊக்குவிக்கும்.
முக்கியமாக, சம்மணங்கால் இட்டு உணவு உட்கொள்வதால் செரிமான மண்டலம் வலுபெற்று, செரிமானம் சீராகவும், அஜீரண கோளாறுகள், வயிறு பிரச்சனைகள் உண்டாகாமல் இருக்கவும் உதவும்.
#கீழே_கால்களை #தொங்கவிடுதல்... மாறாக, நீங்கள் கால்களை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்து உணவு உட்கொள்ளும் போது, போதுமான இரத்த ஓட்டம் மேல் உடலுக்கு செல்லாமல்.
தேவையின்றி கீழ் உடலுக்கு கால்களுக்கு செல்லும். இதனால் மேல் உடலின் செயற்திறன் பாதிக்கப்படும்.
#இன்று_முதல்....
எனவே, உணவை கீழே அமர்ந்து உட்கொள்வது கேவலமோ, கவுரவ குறைச்சலோ இல்லை என்பதை புரிந்துக் கொண்டு.
இது முற்றிலும் ஆரோக்கியம் சார்ந்தது என்பதால், கீழே சம்மணங்கால் இட்டு அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தை இன்று முதலே பின்தொடருங்கள.
No comments:
Post a Comment