Friday, January 5, 2018

உடலை_ஆரோக்கியமாக_வைத்துக்_கொள்ளுங்கள் ...!!!#தூங்க_போவதற்கு_முன்_இதை_செய்யுங்கள் ...!!!

ஆரோக்கியமான மனிதன் என்றவுடன் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிறந்த உடல் நலம் கொண்ட ஒருவர்தான் ஆரோக்கியமானவர் என்பது பெரும்பாலோனாவரின் அபிப்பிராயம்..
சில சந்தர்ப்பங்களில் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல உடலுடன் சேர்ந்து மனமும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும்.
உணவு, உடல் சார்ந்த ஒழுக்கம், உடற்பயிற்சி என்பனவற்றின் கூட்டு விளைவே உடல் ஆரோக்கியத்தின் அடிப்படையாகும். ஆரோக்கியமான உடலுக்கு உணவின் தன்மை, அதன் ஊட்டச்சத்தின் பங்கு, உணவின் அளவு, உடலின் ஒப்புதல் என்பன மிகவும் முக்கிய விஷயங்களாக அமைகின்றன.
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில குறிப்புகள் :
👉 சம்மணமிட்டு சாப்பிட வேண்டும். இது உடலில் பரவும் சக்தியை வயிற்றுப் பகுதியில் தடுத்து, தேக்கி செரிமானத்திற்கு உதவும். காலைத்தொங்கவிட்டு நாற்காலியில் அமர்ந்து உண்பது நல்லதல்ல.
👉 குளித்தபின் 45 நிமிடம் சாப்பிடக் கூடாது. சாப்பிட்டபின் 2.5 மணி நேரம் குளிக்கக் கூடாது.
👉 அளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்குச் சாப்பிடுங்கள். ஏப்பம் வந்தால் அத்துடன் நிறுத்தலாம். எப்படி சாப்பிடுவது என்று அறிந்து சாப்பிட்டால் உணவுக் கட்டுப்பாடின்றி எதையும் சாப்பிடலாம்.
👉 தண்ணீரை மண் பானையில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம்.
👉 காலையில் பல் துலக்குவதை விட இரவில் கட்டாயம் பல் துலக்கி படுக்கைக்கு செல்லவேண்டும்.
👉 இரவு படுக்கைக்கு நேரத்தில் சென்று விடியற்காலை எழுந்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில்தான் பித்தம் உடலில் பரவும், அப்போது குளிப்பது உடம்பிற்கு நல்லது.
👉 தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல் அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும்.
👉 படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட வேண்டும்.
👉 டீ, காப்பி போன்றவற்றை தவிர்த்து அதற்கு பதில் சத்துமாவு கஞ்சி, சூப் போன்றவைகளை அருந்தலாம்.
👉 நாற்பது வயதிற்கு மேல் சைவ உணவை உண்டு, அசைவ உணவை குறைத்துக்கொள்வது நல்லது.
👉 தலைவலி, உடல்வலி என்று எதற்கெடுத்தாலும் ஒரு மாத்திரையை போட்டுக்கொள்வது நல்லதல்ல. எண்ணெய் குளியல், கஷாயம் போன்ற இயற்கை மருத்துவ முறையைப் பின்பற்றுவது நல்லது.
👉 காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தி ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கவும், தண்ணீர் குடித்து நாளை முடிக்கவும்.
👉 உணவு, உறக்கம், உழைப்பு, ஓய்வு, உடற்பயிற்சி, உடல்உறவு ஆகியவைகளை சரியாக வைத்திருப்பதே உடல்நலத்திற்கு மிக முக்கிய காரணியாகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...