Friday, January 5, 2018

தமிழனையும் தமிழ்நாட்டையும் கேவலபடுத்தி வருகிறார் ...

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் தேர்தல் வர இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகும். அது வரை ரஜினி ரசிகர்கள் பொறுத்திருக்க வேண்டுமா? காலம் என்னென்ன மாறுதல்களைச் செய்யக் காத்திருக்கிறதோ? யாருக்குத் தெரியும்.
உள்ளாட்சித் தேர்தல்களிலேயே ரஜினி தன் பலத்தைப் பரிசோதிக்கலாமே? விஜயகாந்த் ரசிகர் மன்றம் அப்படித்தானே ஆரம்பகால களம் கண்டது?
நாடாளுமன்றத் தேர்தல் முதலில் வந்தால் ரஜினியின் நிலைப்பாடு என்ன? நடப்பு அரசு கவிழ்ந்து தேர்தல் முன்பே வரும் என்று ரஜினி யூகிக்கிறாரா? 
அல்லது பாரதிய ஜனதா அப்படி அவருக்கு கோடிட்டுக் காட்டி இருக்கிறதா?
மோடி மறுமுறை பிரதமராவது பற்றி ரஜினியின் நிலைப்பாடு என்ன?
அகில இந்தியக் கேள்விகளுக்குக் கருத்துத் தெரிவிக்காமல் மாநில அரசியலை மட்டுமே குறை கூறுவது ரஜினிக்கு எதிர்மறை விளைவுகளையே தோற்றுவிக்கும்.
அரசியலில் புதிய சக்திகள் வரவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ரஜினி மராட்டியர் என்று எதிர்க்கப்படுவதிலும் எனக்கு சம்மதமில்லை.
இன்றைய நிலையில் தேசிய அரசியலின் போக்கு எல்லா மாநிலங்களையும் ஒரு சேரப் பாதிக்கிறது. பண நோட்டு மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. நீட், மருத்துவர் தகுதி காண் தேர்வு, வங்கி சீரமைப்பு, முத்தலாக் விவகாரம் என்று தேசிய அரசியலின் பல்வேறு முகங்கள் குறித்து ரஜினி எந்தக் கருத்தும் கூறாமல்-
சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள தான் அரசியலுக்கு வந்தால் மக்கள் கண்ணை மூடி ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைப்பது சரி அல்ல. அது அவருக்குத் தோல்வி தரும். மாற்று அரசியலை விரும்புபவர்களும் பின்னடைவையே சந்திப்பார்கள்.
எச்சரிக்கை...

எழுதிவைத்துக்கொள்ளுங்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ரஜினி ஆதரவு தெரிவிப்பார். 
ரஜினி ஆதரவு தெரிவித்தாலும் தமிழ்நாட்டில் மீண்டும் ஒருத்தொகுதியைக்கூட கைப்பற்றுவது சிரமம்தான். அப்படி ரஜினி பாஜகவுக்கு ஆதரவு தருவதை திரு. தமிழருவி மணியன் அவர்கள் எ
திர்க்கக்கூடும் இருந்தும் அவர் ஆதரவு தருவார் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை. 
ஆனால் சட்டசபை தேர்தலில் 15 சதவிகித அளவுக்கு வாக்குகள் கிடைக்கலாம் இது யுகம் மட்டுமே.
இது என் கணிப்பு!!!

அவருக்கு காவடி தூக்குறவங்களுக்கும் தெரியாது
ஏன் கஷ்டப்படறீங்க  
அவரின் கொள்கை என்ன
அவர் தமிழ்நாட்டில் நடக்கும் அரசியலில் நிகழ்வுகள் 

மக்களின் பிரச்சினைகள் தீர்வுகள் 
இன்றைய அரசியல் அவலங்களை பற்றி எதைபற்றியும் பேசமாட்டாராம்

பொத்தாம் பொதுவாக 
தமிழ்நாட்டில் 
சிஸ்டம் சரியில்லை என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் தமிழ் மக்கள்

மூத்த பத்திரிகை ஆசிரியர் 
தமிழகத்தில் தங்கள் கலத்தில் 
நடந்த அரசியல் 
சமூக அவலங்களை 
அரசியல் வாதிகளை ஊழல் 
ஊதாரித்தனங்கள்

அடாவடி 
அக்கிரமங்களை அக்கு வேறு ஆணி வேறாக 
கண்டுபிடித்து 
நீதியின் பட்டதாகவும்
நியாத்தின் தராசாக நின்று 
தராசு வார இதழை நடத்தி 
அநிதியை 
தோலுரித்து கட்டியதால் 

ஏற்பட்ட இழப்புகள் 
ஏற்பட்ட பின் விளைவுகளை 
அருகில் தராசு மக்கள் மன்றத்தில் 
பொறுப்பில் அறிந்தவன் 

ஆனால் இன்றைய 
அச்சு, காட்சி ஊடகங்கள் 
காசு,பணம் 
இவற்றிற்க்காக 
இன்றைய அரசியல் அவலங்களையும் 
அநீதிகளையையும்

கண்டும் காணாமல் இருந்து 
பிரதி பலனால் 
தினகரன் போன்றவர்களின் 
செய்தியும்

ஆடியடிங்கி
அரிதாரம் கலந்து 
நடிமுடிந்து 
காடுசேறும்
68வயதில் ஜெயலலிதா இல்லாத போது
அரசியலில் அரிப்பெடுத்து 
அடியெடுத்து வைக்க முனையும் 

நடிகரை வெட்டமின்றி
எந்த தகுதியோடு 
எந்த தியாகம்
எந்த போராட்டம் 
எந்த கொள்கையினால் ஈர்க்கபட்டு

பத்திற்கும் மேற்பட்ட ஊடகங்கள் 
துதிபடி அடிக்கடி துறவி என்று நடிக்கும் 
போலியை
தூக்கி பிடிக்கும் ஊடகங்களுக்கு
தாங்கள் கருத்துகூறி
தமிழனையும் 
தமிழ்நாட்டையும் காப்பாற்ற 
தார்மீக உரிமையும் 
தார்மீக பொருப்பும்
தார்மீக கடமையும் -உண்டு 

ஆசிரியர் அவர்களே!
கடைமையை செய்யுங்கள் 
கன்டவன் கடைவிரிக்க
இனியும் இடமளித்து விடக்கூடாது 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...