மருந்து வாங்கப் போனேன் . 630 ரூபாய் பில் தொகை . டெபிட் கார்டை தேய்ச்சேன் . ரூபாய் 12 கமிஷன் எடுத்துகிட்டாங்க . மருந்து சாப்பிடுற எனக்கு இல்லாமல் ; மருந்து விற்ற வியாபாரிக்கும் இல்லாமல் எவனோ 12 ரூபாய் சாப்பிட வழிசெய்யும் ஆன் லைன் பரிவர்த்தனை யாரை வாழவைக்க. …
ஏடிஎம்ல பணம் எடுத்தால் 27 ரூபாய் புடுங்குறான் . கணக்கு இருக்குற கனரா வங்கில போய் எடுங்கிறான் . அங்க ஏடிஎம் மூடியே கிடக்கு /காசே இல்லாம இருக்கு . 3 கி மீ நடந்தும் பிரயோசனமில்லை . பக்கத்துல இருக்கிற ஸ்டேட் வங்கியில எடுத்தா இப்படி குடலை உருவுறான் .
பணம் அனுப்பிச்சுட்டேன் வந்துட்டான்னு கன்பார்ம் பண்ணுன்னு சொல்றாங்க . ஒரு மினி ஸ்டேட் மெண்ட் எடுத்தா காசு புடுங்கிறான் . எப்படியும் மாசத்துக்கு சராசரி நூறு அல்லது நூற்றி இருபது ரூபாய் உருவிடுறாங்க . .. எல் ஐ சி பிரிமியம் கட்டப்போனால் ஜி எஸ் டின்னு புடுங்கிறான் .
ரயில் டிக்கெட் எடுக்கப் போனால் சோகக்கதை தனி...
எனக்கு சேமிப்போ ஓய்வூதியமோ இல்லை . பிள்ளைகள் கைச்செலவுக்கும் மருந்துச் செலவுக்கும் தருகிற ஐயாயிரம் ரூபாயில் மாதமாதம் சராசரி குறைஞ்சது 500 அல்லது 600 ரூபாய் இப்படி பிக்பாக்கெட் அடிச்சிடுறாரு மோடி ; இதச் சொன்னால் பக்தாள் தேசத்துக்காக தியாகம் செய்யின்னு உபதேசம் செய்யுறாங்க !
ஒவ்வொருவரும் கொஞ்சம் யோசிச்சு கணக்கு போடுங்க … ஒவ்வொருவரும் மாதமாதம் இழப்பது எவ்வள்வு ? ஒவ்வொரு குடும்பமும் இழப்பது எவ்வளவு ? நிச்சயம் வருவாயில் குறைந்தது 15 அல்லது 20 சதத்தைப் பிக்பாக்கெட் அடிக்கிறது மோடி அரசு .
ஆளுக்கு 15 லட்சம் தறேன்னு ஏமாற்றி இப்போ நம்ம தலைய நல்லா மொட்ட அடிக்கிறார் . வளர்ச்சின்னா இதுதானோ ?
No comments:
Post a Comment