பிரச்சனை அந்த நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு அல்ல. அதற்காக அவர்கள் மரபுகளை மீறி பத்திரிக்கையாளர்களை சந்திக்க வில்லை. அவர்கள் எழுப்பியுள்ள பிரச்சனை நமக்கானது. ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட ஆபத்து குறித்தானது. மக்களின் நலன் , நீதி துறையின் நலன் நாட்டின் நலன் சம்மந்த பட்டது.
ஜனநாயகத்திற்கு ஆபத்து , நீதித்துறைக்கு ஆபத்து யாரால் , யார் மூலம் வருகிறது என்பதை கோடிட்டு காட்டி விட்டனர்.
இது தான் அந்த நால்வரும் மக்களுக்கு விடுக்கும் செய்தி.
இந்த நிலை நீடித்தால் ஜனநாயகம் நீடிக்காது. கவலை தோய்ந்த நீதிபதிகளின் பேட்டி.
ஆண்டாள் , வைரமுத்து, ராஜா என பேசுவதை நிறுத்திவிட்டு பிரச்சனையின் வீரியத்தை மக்களிடம் கொண்டு சேருங்கள்.
”நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம் நீதித்துறையையும் நாட்டையும் காப்பாற்றுங்கள்” - உச்ச நீதின்ற நீதிபதிகள் நாட்டுமக்களுக்கு கோரிக்கை!
இந்திய வரலாற்றில் முதல் முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பணியில் இருக்கும் போது நாட்டுமக்களை சந்தித்து பேட்டி அளித்திருப்பது நாட்டில் அசாதாரண நிலையாக பார்க்கப்படுகின்றது!
நீதித்துறை சரி செய்யப்படாதவரை இந்த நாட்டில் மட்டுமல்ல எந்த நாட்டிலும் ஜனநாயகம் நிலைக்காது! ஜனநாயகத்தின் முத்திரையே சுதந்திரமான நீதித்துறை தான்!
4 மாதத்திற்கு முன்னரே புகார் அளித்தோம் இன்று காலையில் கூடு தலைமை நீதிபதியை சந்தித்து புகார் அளித்தோம் ஆனால் நாங்கள் புகார் அளித்தும் தோல்வி அடைந்து விட்டோம். எனவே மக்களிடம் இதை சொல்ல வேண்டும் என்பதை தவிர வேறு வழி தெரியவில்லை!
தயவு செய்து நாட்டையும் நீதித்துறையையும் காப்பாற்றுங்கள் (அவர்கள் பயன்படுத்திய வார்த்தை
"please take care of this institution and Please take care of this nation"
யாரிடமிருந்து? எந்த கும்பலிடமிருந்து?
No comments:
Post a Comment