Friday, January 12, 2018

நடப்பு கோட்சாரகிரக பலன்:

பிரபல கவிஞர் வைரமுத்து தெய்வப்பெண் ஸ்ரீ ஆண்டாள் பற்றி மேடையில் தவறாகப்பேசி வகையாக மாட்டிக் கொண்டதற்கு தற்கால கோட்சார கிரகங்கள் எவ்வாறு கட்டியம் கூறுகின்றன என பார்ப்போம். இவருக்கு ரிஷபராசி. தற்போதுதான் இவருக்கு அஷ்டமத்துச்சனி ஆரம்பித்தது. வாக்கு ஸ்தானாதிபதி(2மாதி) புதன்,மேடை விரிப்பாளன் சூரியன்(4மாதி), ராசிநாதன் சுக்ரன், கௌரவ மரியாதை ஸ்தானாதிபதி(9) சனி அனைவரும் கூட்டாக சேர்ந்து 8ல் (தனுசு) சிக்கிப் போயுள்ளார்கள்.அதனால் சிக்குன்டு சிறைப்பட்டது போன்ற நிலைமை.ஏற்கெனவே மரியாதையைக்கெடுக்க 9 ல் கேது மாதக்கணக்கில் காத்துக் கொண்டிருக்கிறார்.இதனால் மேடையில் ஏறிப்பேசி மரியாதையை இழந்து நிற்கிறார்.இந்த கிரகங்கள் அமர்ந்த வீடு மார்கழி மாதத்திற்குரிய தனுசுராசி. அதனால்தான் மார்கழி மாதத்தில் மார்கழியின் ஆண்டாளைப்பற்றி உளறி கூனிக்குறுகி நிற்கிறார். தனுசுவீடு குருவீடு என்பதால் ஆன்மீகம் பற்றி பேசி சொல்லில் சிக்கினார். வில்அம்பு ராசி என்பதால் கோபம் , வம்புதும்பு, போராட்டங்களுக்கு வழிவகுத்துவிட்டது. 6 ல் (துலாம்) எதிரிஸ்தானத்தில் பகைபெற்ற குரு நிற்கிறார். அதனால் அரசியல்வாதிகளின், ஆன்மீகவாதிகளின் , வைணவ பெரியோர்களின், நடமாடும் ஆண்டாள்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் சம்பாதித்து இருக்கிறார். தனுசுராசி என்பது எழுதுகோல் ஏந்துபவர்களின் ராசி.அதில் சனியின் சஞ்சாரம்வேறு.அப்பப்பா.... கோட்சார கிரகங்கள் இப்படியெல்லாம் படுத்துமா? என்று கலங்க வேண்டாம்... ஏற்கெனவே வினையை விதைத்தவர் களுக்கு மட்டுமே அறுவடைப் பணி தருவார் சனீஸ்வரன். ஓம் சனீஸ்வராய போற்றி! ஓம் வைரத்தையும் அறுத்தவா போற்றி!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...