”ராஜாவுக்கு, 200 படம் முடிந்தவுடனேயே இப்படி ஒரு விழா எடுத்திருக்கவேண்டும். 200 படங்களிலேயே அவர் அவ்வளவு விஷயங்கள் செய்து முடித்துவிட்டிருந்தார். இப்போது விழா எடுப்பது.. .. ‘லேட்’டாக செய்கிறோம் என்பதல்ல.. ‘இத்தனை வருடங்களாக அவருடைய இசையில் மயங்கியிருந்து, இது போன்ற பாராட்டு விழாக்களை எல்லாம் மறந்துவிட்டோம்.
‘இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள்’ எல்லாம் ஓய்ந்துவிட்ட நிலையிலும் இந்திப்பாடல்களின் ஆதிக்கம் இங்கே ஓயாமல் இருந்தது. அதை மாற்றி, மீண்டும் தமிழிசையைக் கேட்கவைத்தவர், இந்தியாவையே கேட்கவைத்தவர் என் அண்ணன் இளையராஜா!’.
தமிழகம் மட்டுமல்ல, நீங்கள் வங்காளத்திலோ, வட இந்தியாவின் எந்தப் பகுதியிலும் சென்று கேட்டுப்பாருங்கள். ‘இளையராஜா’ என்றால் மதிப்புடன் இரண்டடி பின்னால் செல்வார்கள். இவர் நம் பக்கத்திலேயே இருப்பதனால் அவருடைய அருமையை நாம்.. .. உணராமல் எல்லாம் இல்லை. ஆனால் இன்னும் கொண்டாட வேண்டும்”,
#Ilaiyaraaja1000 நிகழ்ச்சியில் கலைஞானி கமல்.
No comments:
Post a Comment