படத்தின் க்ளைமேக்ஸ் நெருங்கும் வேளையில் , சரிந்து விழும் மோடித்துவா...
சமீப காலமாக மக்கள் பா ஜ காவின் மேல் உள்ள வெறுப்பை வாக்குகளில் சரியாக காட்டத்தொடங்கி விட்டார்கள். குஜராத் தேர்தலில் கூட தட்டுத்தடுமாறி தப்பிய மோடி அதன் பின் வந்த ஒவ்வொரு இடைத்தேர்தல்களில் எல்லாம் ஆப்பு மேல் ஆப்பு வாங்கிக்கொண்டு இருக்கிறார்.
முதலில் ராஜஸ்தான், மேற்கு வங்கம் மொத்தமும் வாஷ் அவுட்
அடுத்தது சொந்த மாநிலம் குஜராத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 50% இடங்களை இழந்த பரிதாபம்.
கடைசியாக ஒடிஷா மற்றும் பா ஜ க ஆளும் மத்திய பிரதேச இடைத்தேர்தல்களில் கூட அனைத்து இடங்களிலும் அடி மேல் அடி என ஆடிப்போய் இருக்கிறார் மோடி!

மோடி என்ற நபரை நம்பி அவர் கையில் ஸ்டியரிங்கை கொடுத்த பா ஜ க பல இடங்களில் முட்டி மோதி கவிழும் என்பது கிட்டத்தட்ட உறுதி ஆகி விட்டது. அடுத்து வரும் வடகிழக்கு மாநில தேர்தல்கள் ஆசுவாசம் தர வாய்ப்புண்டு என்றாலும் கர்நாடக தேர்தல் தான் இவர்களை வீட்டுக்கு அனுப்பும் டீ சி யாக இருக்கும்.
அதிகார பூர்வ தலைவர் பதவி கிடைத்தவுடன் ராகுல் பாயும் புதிய உத்வேகப்பாய்ச்சல் இவர்களை திக்கு முக்காட செய்துள்ளது! கர்நாடகாவிலும் பாதி இருக்கைகள் காலியாக கிடைக்கும் மோடியின் பிரச்சார கூட்டங்கள், அமித் ஷாவை பேச விடாமல் கண்டனம் தெரிவித்த விவசாயிகள் என்று இப்போதே வரப்போகும் தோல்விக்கு கட்டாயங்கள் ஒழிக்க ஆரம்பித்து விட்டன.
No comments:
Post a Comment