மாங்கல்ய தோஷமும் அதன் விபரீதங்களும்
மாங்கல்ய தோஷமும் அதன் விபரீதங்களும்
மாங்கல்ய பலம் இருப்பது போலவே மாங்கல்ய தோஷமும் உண்டு. அதாவது
ஒரு ஜாதகத்தில் 8ம் இடம் தான் மாங்கல்ய ஸ்தானம். குறிப்பாக பெண் ஜாதகத்தி ற்கு மட்டுமே பெரும்பாலும் பார்க்கப்படும். அப்படியானால் ஆண்களுக்கு பார்க்க மாட்டார்களா? என்று யோசிக்கலாம்.
திருமணப் பொருத்தத்தின் போது “ பெண் ஜாதகத்திற்குத்தான் ஆண் ஜாதகம் பொ ருந்துகிறதா” என்று பார்க்கப்படுமே தவிர, ஆண் ஜாதகத்திற்கு பெண் ஜாதகத்தைப் பார்க்கக்கூடாது.
இரண்டுமே ஒன்றுதானே. என்னங்க இது… என்று யாரேனும் சொல்லலாம். ஆனால் பார்க்கப்படும் முறையானது இப்படித்தான்.
உதாரணமாக “பெண் பார்க்கப் போகிறோம்” என்று தான் கூறுவார்கள், மாப்பி ள்ளை பார்க்கப் போகிறோம் என்று கேள்விபட்டிருக்கிறீர்களா?
மாப்பிள்ளை வீடு பார்க்க போகிறோம் என்றுதான் சொல்லுவோம். சொல்லுவார்க ள்.
அதுபோலத்தான் “ பெண்ணுக்குத்தான் ஆணே தவிர, ஆணுக்குப் பெண் அல்ல”
சரி விஷயத்துக்கு வருவோம்.
இப்போது புரிகிறதா மாங்கல்ய தோஷம் பெண்ணுக்குதான் முக்கியத்துவம் தரப்ப டுகிறது என்று.
என்ன செய்யும் மாங்கல்யதோஷம்.
திருமணத்திற்குப்பின் கணவனுக்கு “மாரக கண்டம் “ ஏற்படுத்தும் என்பதே, பெரு ம்பாலோர் சொல்லுவது!
இது உண்மையா? எட்டாம் இடம், அதன் அதிபதி கிரகத்தின் நிலை, நவாம்சநிலை இவையெல்லாம் கவனிக்கப்பட வேண்டும்.
மாரகம் மட்டுமே தான் தருமா? இல்லை,
கணவன் மனைவி சேர்ந்து வாழ்வதுதான் சிறப்பு. அதைவிடுத்து கணவன் ஒரு பக்கம், மனைவி ஒரு பக்கம் என வாழ்ந்தால் அதில் என்ன மகிழ்ச்சி இருக்கிறது?
இதுவும் மாங்கல்யதோஷம்தான்.
பெண் ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் எந்த இடத்திலும் சூரியனும் செவ்வாயும் சேர்ந்திருந்தாலும் அதுவும் மாங்கல்யதோஷம்தான்.
நிச்சயமாக அவருடைய கணவர் சம்பாத்தியத்திற்காக வெளியூர் அல்லது வெளி நாட்டில் தான் இருப்பார்.
சில மாதங்களுக்கு முன், சென்னையில் தேசிய வங்கி ஒன்றில் பணிபுரியும் பெண் ஒருவர் என்னிடம் ஜாதகம் பார்க்கவந்தார்,
அவர் சொன்னதை அப்படியே சொல்கிறேன்.
“எனக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகின்றன. எங்கள் திருமணத்தின்போது என் கணவர் மும்பையிலும், நான் பெங்களூரிலும் பணியில் இருந்தோம்.
என் கணவர் வாரம் அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வருவார். பிறகு அவர் போராடி சென்னைக்கு மாறுதலாகி வந்தார்,
அதன்பின் நான் கஷ்டப்பட்டு சென்னைக்கு மாறுதல் வாங்குவதற்குள், அவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்துச் சென்று விட்டார்,
நான் இங்கு என் மாமியாருடன் இருக்கிறேன். நானும் என் கணவரும் எப்போது தான் ஒன்றாகச் சேர்ந்து வாழ்வோம்? என்று கேட்டார்.
நான் இவர் ஜாதகத்தைப் பார்த்தவுடன் தெரிந்த விஷயம் மண வாழ்க்கை சிறப்பி ல்லை என்பதுதான்.
ஆனால் தோஷத்தையும் சில தியாகங்கள் மூலமாக சரிசெய்ய முடியும்.
அவரிடம் நீங்கள் வேலையை ஏன் விடக்கூடாது? வேலையை விட்டுவிட்டால் உங்கள் கணவரோடு சேர்ந்து வாழமுடியுமே… எனக்கேட்டேன்.
அவர் தன் வேலையை விட முடியாது என சொல்லிவிட்டார். “ அப்படியானால் இப்படித்தான் உங்கள் வாழ்க்கை இருக்கும்’’ என்று உறுதியாய்ச் சொன்னேன்.
தோஷ பரிகாரம் என்பது ஆலய வழிபாட்டால்தான் சரியாகும் என்பதில்லை,
இப்படி சில தியாகங்களாலும் சரியாகும்.
அதாவது ஜாதகத்தில் ஒவ்வொரு கட்டமும் “பொருள்பற்று, உயிர்பற்று” என இரண்டு விஷயங்களை உள்ளடக்கியதாகும்.
பொருள்பற்று என்பது பொருளாதாரம் சார்ந்தது,
உயிர்பற்று என்பது வாழ்க்கை சார்ந்தது,
நிச்சயமாக, உறுதியாக இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் அனுபவிக்க கொ டுத்துவைக்கப்படும். மற்றதை விலக்கியே வைக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
நோயற்று இருந்தால், பணம் தராது. பணம் தந்தால் எதையும் அனுபவிக்க உடல் ஒத்துழைக்காது. இது யதார்த்தமான உண்மை.
No comments:
Post a Comment