Saturday, March 3, 2018

வசூல் பண்ண பல திட்டம் வெச்சி இருக்காங்க.....



மதிப்பிற்கும் பாசத்திற்கும் உரிய திரு நீரவ் மோடி அவர்களே! நலம், நலம் நாடலும் அஃதே! நல்ல வளமுடனும் செழிப்புடனும் இருப்பீர்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை, பஞ்சாப் வங்கிக்கு நீங்க செலுத்த வேண்டிய 11,400 கோடி ரூபாய பத்தி கவலை படாதீங்க, இந்த தொகையை வங்கிகள் எங்க கிட்டே இருந்து 50 ரூபா 100 ரூபான்னு வசூல் பண்ணிக்கிடுவாங்க! நீங்க கவலை படாதீங்க நீரவ் மோடி! ATM charges, Annual Maintenance Charges, Minimum balance charges, etc இப்படி நெறய இருக்கு, இதுல ஏதாச்சும் சொல்லி வங்கிகள் எங்க கிட்டே கலக்ட் பண்ணிக்கிடுவாங்க, அதுவும் இல்லேன்னு வெச்சுக்கோங்க! நம்ம மத்திய அரசாங்கம் எங்க கிட்டே வசூல் பண்ண பல திட்டம் வெச்சி இருக்காங்க Swatch Bharath Abhiyan Cess, Krishi kalyan cess, Education cess, etc, இப்படி! So நீங்க கவலை படாதீங்க!
No automatic alt text available.
இப்போவெல்லாம் நாங்க விஜய் மல்லையா லவட்டிக்கிட்டு போன பணத்தை நாங்க கட்டிக்கிட்டு ரொம்ப பிஸியா வேலை பண்ணிக்கிட்டு இருக்கோம், அத முடிச்சிட்டு நீங்க வாங்கிட்டு போன கடனை நாங்க கட்டுவோம், நாங்கள் இந்தியர்கள்! எங்களுக்கு இது பழகி போச்சி, எங்களுக்கு என்ன தோணுதுன்னா நாங்க கஷ்டப்பட்டு உழைக்கறதே உங்கள மாதிரி பெரிய மனிதர்கள் கடனை வாங்கி லவட்டிக்கிட்டு போற பணத்தை நாங்க திருப்பி திருப்பி கட்டத்தானே!
நீங்க கவலை படாதீங்க நீரவ் மோடிஜி! நாங்க பாத்துக்கறோம், நாங்க இந்நாட்டின் தேச பக்தர்கள், நீங்க லவட்டிக்கிட்டு போன பணத்தை பணத்தை நாங்க உழைத்து கட்டி விடுகிறோம்.
நீங்க சந்தோசமா இருங்க!
நீங்களும் உங்க குடும்பமும் சந்தோசமா இருங்க!!!
இப்படிக்கு
இந்திய தேசபக்தர்கள்
வந்தே மாதரம்
ஜெய் ஹிந்த்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...