அரிசிகளில் பச்சரிசி பலத்தை தரும்,மூத்திர அடைப்பு பித்தகோபம் நீங்கும், இதை வடித்து சாப்பிடுவதே சிறந்தது,பொங்கல் வைத்து சாப்பிட வாயுவை உண்டாக்கும் மந்தத்தை உண்டு பண்ணும்,கொதித்து வடிப்பதால் அரிசியிலுள்ள எண்ணை வெளிப்பட்டு ஆரோக்கியத்தை தரும், குழந்தைகளுக்கு மாந்தம் செய்யும், மிளகு சீரகம் இஞ்சி நெய் இவைகளை கூட்டி பொங்கல் செய்து சாப்பிட விந்து பெருகும்.
புழுங்கலரிசியினால் பலமில்லை, இது நோயாளிகளுக்கு பத்தியத்துக்கு உதவும், சாதம் பக்குவமாக வெந்து வடிக்கப்பட வேண்டும், வேகாது முக்கால் பதத்தில் சாப்பிட மந்தம் கிராணியெனும் பேதி குன்மம் முதலிய நோய்கள் தொடரும், பாலுடன் உப்பை சேர்த்து சாப்பிட கூடாது கற்கண்டு தூள் அல்லது சீனி சேர்த்து சாப்பிடவேண்டும்.
நாட்டு பசுவின் பாலுடன் அன்னம் சாப்பிட தேக புஷ்டி வீரியவிருத்தி உண்டாகும்.
சாதத்துடன் பருப்பு நெய் கூட்டி உண்டால் கண்குளிர்ச்சி சீரணம் உடல் வன்மை பெருகும்.
நல்லெண்ணை சேர்த்து சாப்பிட உடலுறவில் திடமும் பசியும் உண்டாகும்.
No comments:
Post a Comment