// தமிழகத்திலுள்ள சிபிஎஸ்சி பள்ளிகளில் “சம்ஸ்கிருத வாரம் கட்டாயம்” என்று நடுவண் அரசு அறிவித்தபோது அன்றைய முதல்வர் ஜெயலலிதா,
“ முதலில் சிபிஎஸ்சி பள்ளிகளில் தமிழ்மொழி வாரத்தைக் கட்டாயம் ஆக்குங்கள். பிறகு
சம்ஸ்கிருத வாரம் பற்றிப் பேசலாம்” என்று பதிலடி கொடுத்ததும் நினைவுக்கு வருகிறது. //
தமிழுக்கு என்ன செய்தார் மோடி?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சென்னையில் நடைபெற்ற “தமிழியக்கம்” தொடக்கவிழா நிகழ்ச்சியில் பொன். ராதாகிருஷ்ணன் பேசும்போது,“தமிழ்மொழிக்காக மோடி பலவற்றைச் செய்துள்ளார். ஆனால் தமிழ் அமைப்புகள் மோடியைப் பாராட்டவே இல்லை” என்று நிரம்ப ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
பொன்னாரின் பேச்சைப் படித்தபிறகு, கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழ்மொழிக்கென்று மோடி முதன்மையாக, நினைவில் நிற்கும் வண்ணம் ஏதேனும் செய்திருக்கிறாரா என்று யோசித்தேன்.
ஊஹூம்...எதுவுமே நினைவுக்கு வரவில்லை.
மாறாக,
இந்தித் திணிப்பு,
சம்ஸ்கிருதத் திணிப்பு,
அந்தத் திணிப்புக்குத் தமிழ் ஆர்வலர்களின் எதிர்ப்புகள் என்றுதான் வரிசையாக நினைவுக்கு வந்தனவே தவிர வேறு எதுவும் நினைவுக்கு வரவில்லை.
தமிழகத்திலுள்ள சிபிஎஸ்சி பள்ளிகளில் “சம்ஸ்கிருத வாரம் கட்டாயம்” என்று நடுவண் அரசு அறிவித்தபோது அன்றைய முதல்வர் ஜெயலலிதா,
“ முதலில் சிபிஎஸ்சி பள்ளிகளில் தமிழ்மொழி வாரத்தைக் கட்டாயம் ஆக்குங்கள். பிறகு
சம்ஸ்கிருத வாரம் பற்றிப் பேசலாம்” என்று பதிலடி கொடுத்ததும் நினைவுக்கு வருகிறது.
நீட் தேர்விலிருந்து தமிழகம் விலக்கு பெறும் என்று நம்ப வைத்துக் கழுத்தறுத்தது,
நீட் தேர்வு எழுதுவதற்காகத் தமிழக மாணவர்களை மாநிலம் மாநிலமாக அலைய வைத்தது-
நடுவண் அரசு இதுபோன்று செய்த "சேவைகளும்" நினைவுக்கு வருகின்றன.
தமிழ்மொழிக்கென்று மோடி பலவற்றைச் செய்துள்ளாராம்...
என்ன செய்தார் என்பதைப் பட்டியல் இடவேண்டியதுதானே?
No comments:
Post a Comment