நம்முடைய பாரம்பரியத்தில் பெண்கள் பொட்டு வைத்தல் மரபாகும். பெண்கள் வட்டமாக வைப்பது பொட்டு என்பதாகும்.
திருமணமான பெண்கள் தங்களது நெற்றியில் வகிடுகளுக்கு மத்தியில் குங்குமம் இடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது மங்கள சின்னமாக கருதப்படுகிறது. சுமங்கலி பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது கணவரின் ஆயுளை அதிகரிக்க செய்கிறது என நம்பப்படுகிறது.
நெற்றியில் குங்குமம் வைத்திருக்கும் பெண்கள் சௌபாக்கியவதியாக கருதப்படுகிறாள். குங்குமம் பெண்ணிற்கு பார்வதியின் சக்தியை தருவதாக நம்பப்படுகிறது.
நெற்றியில் குங்குமம் வைப்பதனால் கிடைக்கும் நன்மைகள் :
சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். இந்த இடம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் ஆகும். சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில்தான் உள்ளது.
வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.
பெண்கள் தலை வகிடிலும், மாங்கல்யத்திலும், நெற்றியிலும் பொட்டு வைக்கிறார்கள். இந்த மூன்று இடங்களிலுமே லட்சுமி குடியிருப்பதாக ஐதீகம்.
கோவில்களிலோ, வீட்டிலோ குங்குமத்தை எடுத்து இடது கையில் போட்டு கொண்டு, வலது கைவிரலால் தொட்டு வைப்பது கூடாது. வீட்டில் யாராவது ஒருவரை வலது உள்ளங்கையில் சிறிதளவே போட சொல்லி, வலதுகை மோதிர விரலை வளைத்து குங்குமத்தை தொட்டு நெற்றியில் இட வேண்டும்..
No comments:
Post a Comment