தாதர்-சென்னை வண்டியில் வந்துக் கொண்டிருக்கிறேன்.
இங்கே ஒரு பயணச்சீட்டு பரிசோதகர் தன் கடமையை ஆத்தோ ஆத்துன்னு ஆத்திக்கிட்டிருக்கார்.
எப்படி தெரியுமா?
நேற்று இரவு 8:30 மணிக்கு தாதரில் இருந்து புறப்பட்டது. 8:45 மணிக்கெல்லாம் வந்துவிட்டார் நம்ம டிடிஈ.
Reservation செய்து பயணம் செய்பவரிடமே அனைத்து ஆவணங்களை சரிபார்த்தார்.
சரி. தன் கடமையை ஒழுங்காக செய்கிறார் என பார்த்தால், unreserved passengers-இடம் எதுவும் கேட்கவில்லை. அதுமட்டுமல்ல. அவர்கள் (unreserved passengers) ஏதோ, இந்த வண்டியை அவர்கள்தான் அரசுக்கு இலவசமாக கொடுத்திருக்கிறார்கள் போல நடந்துக் கொண்டார்கள்.
இதுபற்றி TTR-இடம் கேட்டால், காது கேளாதோர் பட்டியலில் இடம் பெறுபவர் போல நடந்துக் கொள்கிறார்.
சரி போகட்டும் என விட்டுவிட்டு நான் என்கடமையை செய்ய ஆரம்பித்துவிட்டேன். அதாங்க தூங்கி விட்டேன்.
காலை எழுந்து பார்த்தால் அதே TTR மறுபடியும் செக்கிங் வந்து மீண்டும் எங்களையே ஒருமாதிரி பார்த்துவிட்டு ( நாங்கள் எல்லாம் without போல்) unreserved passengers-ஐ பார்த்தும் பார்க்காமலும் சென்றுவிட்டார்.
அவரின் கடமை உணர்ச்சியை பார்த்துவிட்டு, எனக்கு ஆனந்த கண்ணீரே வந்துவிட்டது.இவரைபோல வேறு யார் இம்மாதிரி வேலையை செய்வார்கள் என எண்ண ஆரம்பித்துவிட்டேன்.
No comments:
Post a Comment