இதற்கு கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி என்ற வேறு பெயர்களும் உண்டு. இது குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. நீர்நிலைகள், வயல் வரப்புகள் மற்றும் பாழ் நிலங்களில் வளரக்கூடியது. இதனுடைய இலைகள், புளியமரத்தின் இலைகளைப் போலவே இரண்டு வரிசைகளில் சிறியதாகக் காணப்படும். இதன் இலைகளுக்குக் கீழே, பூக்களும் காய்களும் அழகாக வரிசைகட்டி நிற்கும்.
1.மஞ்சள் காமாலை நோயைச் சரிசெய்யும். மஞ்சள் காமாலைக்கு மிகச்சிறந்த மருந்து கீழாநெல்லியே.
2. இதற்கு சிறுநீரைப் பெருக்கும் சக்தி உண்டு.
3. கண் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.
4. தீராத தலைவலியைத் தீர்க்கும் வல்லமை கீழாநெல்லிக்கு உண்டு.
5. இது கல்லீரல் சம்பந்தமான நோய்களைக்கூடச் சரிசெய்யும்.
6. சொறி, சிரங்கு போன்ற பிணிகளைப் போக்கும்
7. சர்க்கரை நோய்
8. உடல்சூட்டால் உண்டான கட்டிகள், வீக்கங்கள் ஆகியவற்றைக் கரைக்கும்.
9. ரத்தசோகையைச் சரிசெய்யும் .
10. கல்லீரல் பாதிப்புகளைத் தடுக்கும்.
11. மலட்டுத் தன்மையைப் போக்கும்.
12. சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் சக்தி கீழாநெல்லிக்கு உண்டு.
13. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.
14. கூந்தல் சம்பந்தமான பிரச்னைகளிலிருந்து நம்மை விடுவிக்கும்.
கீழாநெல்லியை எடுத்துக்கொள்ளும் முறை:
* மஞ்சள் காமாலை
கீழாநெல்லி இலையைப் பறித்து நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமான இலையை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் மோருடன் கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். மேலும் ஹெப்படைட்டிஸ் 'பி' மற்றும் 'சி' ஆல் உண்டாகும் கல்லீரல் பாதிப்புகளிலிருந்து நம்மைக் காக்கும்.
* சர்க்கரை நோய்
உலர்ந்த கீழாநெல்லிப் பொடியை மூன்று வேளையும் உணவுக்கு முன்பாக எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புக்களைத் தடுத்து டயாலிஸிஸ் செய்வதிலிருந்து நம்மைக் காக்கும்.
* உடற்சூடு மற்றும் தொற்றுநோய்கள்
கீழாநெல்லியின் வேரை நன்றாக அரைத்து பசும்பாலுடன் கலந்து மூன்று வேளையும் குடித்துவந்தால், உடல் குளிர்ச்சி அடையும். தொற்று நோய்கள் நெருங்காது.
* வயிற்றுப்புண்
1 டம்ளர் மோரில், கைப்பிடி அளவு அரைத்த கீழாநெல்லி இலையைக் கலந்து காலையில் குடித்துவர, வயிற்றுப்புண் மற்றும் வயிறு சம்பந்தமான அத்தனை பிரச்னைகளும் தீரும்.
* தலைவலி
நல்லெண்ணெய் இரண்டு டீஸ்பூன், கீழாநெல்லி வேர், சீரகம் மற்றும் பசும்பால் ஆகியவற்றை நன்றாக அரைத்து வடிகட்டி அந்தச் சாற்றைக் குடித்தால் தலைவலி குணமடையும்.
* சொறி, சிரங்கு
கீழாநெல்லி இலையுடன் உப்புச் சேர்த்து அரைத்து, குளித்து வந்தால் சொறி, சிரங்கு ஆகிய நோய்கள் சரியாகும்.
* வெள்ளைப்படுதல்
கையளவு கீழாநெல்லி இலையை நன்றாக நசுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர், அதை மூன்று டம்ளர் நீரில் சேர்த்து ஒரு டம்ளர் நீராக வரும் அளவுக்குச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இதை காலை மாலை என இரு வேளைகளிலும் குடித்துவர வெள்ளைப்படுதல் நோய் குணமடையும்.
No comments:
Post a Comment