யோகம் என்பது உடலை ஒருமைப்படுத்துவது.
தியானம் என்பது மனதை ஒருமைப்படுத்துவது.
உலகில் ஹடயோகிகள் கஷ்டப்பட்டு தனது உடலையும், மனதையும் கட்டுக்குள் வைக்கின்றனர்.
ராஜயோகம் என்பது ராஜாவை போல தனது உடலையும் மனதையும் மிக்க மகிழ்ச்சியாக வைப்பதாகும். நிகழ்காலத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் இறைவன் ஒருவர் யாரென புரிந்து அவருடன் மனதை ஈடுபடுத்தவேண்டும். எனென்றால் இறைவன் ஒருவரே சத்சித் ஆனந்த சொரூபம்.
அந்த ஒரு இறைவனான பரம்பொருளான ஜோதியான தந்தை ஈசனுடன் ஒரு சிறந்த ராஜாவை போன்று தனது காரிய விவகாரங்களை செய்துகொண்டு, தனது சுய நினைவான ஆன்ம நினைவிலிருந்து, தனது தந்தையான உடலற்ற ஜோதியான ஈசனை மகிழ்வுற நினைப்பதாகும். யார்தனது சுமைகள் அனைத்தையும் தந்தை ஈசனிடம் ஒப்படைத்து இப்பொழுது மகிழ்ச்சியான ஒரு சிறந்த ராஜாவைபோல இவ்வுலகில் வாழ்கின்றனரோ அவரே எதிர்காலத்தில் மஹாராஜா ஆகின்றார்.
இப்படிப்பட்ட ராஜயோகத்தை மனிதனால்
கற்றுத்தரமுடியாது. தந்தை ஈசனால் மட்டுமே அது சாத்தியமான காரியம் ஆகும். ஏனென்றால், உலகம் அதர்மம் ஆகும்பொழுது பிரம்மாவே இந்த ராஜயோகத்தை தந்தை ஈசனிடம் கற்று எதிர்காலத்தில் உலகின் மஹாராஜாவாக ஸ்ரீ நாரயணராக மாறினார்.

நாம் ஒவ்வொருவரும் அப்படிப்பட்ட உயர்ந்த நிலையடைந்து உலகின் மஹாராஜாவாக மாறவேண்டும் எனபதே தந்தை ஈசனின் விருப்பம். ஒரு டாக்டர் தனது மகனை டாக்டராக பார்க்க விரும்புவார். ஒரு கலெக்டரும் அப்படியே... ஏன்? ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த ஒருவர் கூட தனது மகனை உயர்ந்தநிலைக்கு உயர்த்தி பார்க்க ஆசைப்படுவார்கள்.
ஆனால், உலகின் கடவுளான தந்தை ஈசனோ தனது மகனை உலகிற்கே மஹாராஜாவாக்கி பார்க்க விரும்புகின்றனர். இதற்காக தந்தை ஜோதியான ஈசனால் உலகிற்கு கொடுக்கப்பட்டதே
ராஜயோகம். இதன் அடையாளமாக பெருமாள் கோவிலுக்கு செல்பவர் அனைவருக்கும் ஜடாரி எனும் கிரீடம் வைக்கப்படுகின்றது.கிரீடத்தின் மேலே உள்ள பாதங்கள் இறைவனின் வழிமுறை என்னும் ஸ்ரீமத் ஆகும். அதனால் தான் ஸ்ரீமத் பகவத்கீதை என்று சொல்லப் படுகின்றது.ஸ்ரீ என்றால் நாரயணன் அல்லது லஷ்மியை குறிப்பதாகும். மத் என்றால் உயர்ந்த வழி என்பதாகும். பகவத் என்றால் பகவானை குறிப்பதாகும். கீதை என்றால் சாஸ்திரங்களின் சாரமான ஞானம் ஆகும். அதாவது,
ஸ்ரீ நாரயணன் ஆக்கக்கூடிய பகவானால் கொடுக்கப்பட்ட உயர்ந்த ஞானம் என்று பொருள்படும்.

எனவே,ராஜயோகம் என்பது இறைவன் யாரென புரிந்து அவருடன் தொடர்பு வைப்பதால் உடலை, உள்ளத்தை ஆரோக்யமாக வைக்கும் வழிமுறையாகும்.
எனவே, ஒருவர் ராஜ யோகத்தை கற்பதன் மூலம் விரைவில் இந்த பூமியில் தந்தை ஈசனுடைய காரியத்தில் உதவி செய்வதுடன், விரைவில் இவ்வுலகில்
தர்மம் நிறைந்த சனாதன தர்ம ராஜ்ஜியத்தை இதே பாரத பூமியில் கொண்டுவர முடியும்.
எனவே, தந்தை ஈசனின் காரியத்தில் உலகில் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தர்மம் நிறைந்த சனாதன தர்ம ராஜ்ஜியத்தை இதே பாரத பூமியில் கொண்டுவர முடியும்.
எனவே, தந்தை ஈசனின் காரியத்தில் உலகில் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
வாழ்த்துக்கள்.
ஓம்சாந்தி....
No comments:
Post a Comment