அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாகத் தான் செயல்படுகிறேன்,'' என, கள்ளக்குறிச்சி, எம்.எல்.ஏ., பிரபு கூறினார்.
இது குறித்து அவர் நேற்று அளித்த பேட்டி:நாங்கள் மூவரும், கொறடா உத்தரவை எதிர்த்து, எப்போதும் ஓட்டு போட்டதில்லை. இதுவரை சட்டசபையில் நடந்த ஓட்டெடுப்பில், அ.தி.மு.க.,வுக்கு ஆதர வாகத் தான் ஓட்டளித்துள்ளோம்.இந்நிலையில், அரசு கொறடா எங்களை தகுதி நீக்கம் செய்ய, எதற்கு மனு அளித்துள்ளார் என்பது தெரியவில்லை. அ.ம.மு.க., என்பது, அ.தி.மு.க.,வின் ஒரு அங்கம் தானே தவிர, இது தனிக்கட்சி கிடையாது.

நான் தொடர்ந்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக உள்ளேன். அப்படித் தான் செயல்படுகிறேன்; நாங்கள் எந்த கட்சியிலும் சேர்ந்து விடவில்லை.தற்போது நடைபெறும் இடைத்தேர்தல் முடிவுக்குப் பிறகு, சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தால், கொறடா உத்தரவின்படியே செயல்படுவேன்.
அ.தி.மு.க., வை அழிப்பதற்காக நாங்கள் செயல்படவில்லை. அ.தி.மு.க., நல்ல தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்பதே, எங்களின் நோக்கம்.தமிழகத்தில் மீண்டும், ஜெ., ஆட்சி தொடர நாங்கள் பாடுபடுவோம். அதிகாரப்பூர்வ, 'நோட்டீஸ்' கிடைத்தவுடன், அதை சட்ட ரீதியாக நாங்கள் சந்திப்போம்.இவ்வாறு, பிரபு கூறினார்.
No comments:
Post a Comment