அ.தி.மு.க.வில் நான்கு சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். திருப்பரங்குன்றம் தொகுதிக்கான பொறுப்பாளர்களாக மதுரை மாநகர் புறநகர் கிழக்கு புறநகர் மேற்கு; தேனி, திண்டுக்கல், காஞ்சிபுரம் கிழக்கு , மத்தியம், மேற்கு; கிருஷ்ணகிரி கிழக்கு, தெற்கு, மேற்கு; கடலுார் கிழக்கு, மேற்கு; சிவகங்கை, தஞ்சாவூர் வடக்கு தெற்கு; வட சென்னை தெற்கு, வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பணியாற்றுவர்.
நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களை சேர்ந்த மாநில நிர்வாகிகள் அமைச்சர்கள், செய்தித் தொடர்பாளர்கள், எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் தேர்தல் பணிகளில் ஈடுபடுவர். இதற்கான அறிவிப்பை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான பன்னீர்செல்வம்; இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டனர்.

No comments:
Post a Comment