'வன்னியர்களை இழிவுபடுத்தி பேசிய எஸ்றா சற்குணம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்' என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: சென்னையில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடந்த போராட்டத்தில் பேராயர் எஸ்ரா சற்குணம் வன்னிய சமுதாயத்தை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். 'கிழட்டு சிறுத்தையான தான் சீற ஆரம்பித்தால் நாடு தாங்காது' என்றும் வன்னியர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது வார்த்தைகள் அவர் வகிக்கும் பதவிக்கு ஒப்பாதவை; கண்டிக்கத்தக்கவை. அன்பையும் சகிப்பு தன்மையையும் போதித்தவர் இயேசு. அவரது பிரதிநிதியாக தம்மை முன்னிறுத்திக் கொள்பவர் இயேசுவின் மொழிகளை பேசியிருக்க வேண்டும். அவரோ திருமாவளவனே பேச தயங்கும் நச்சு வார்த்தைகளை வாரி இறைத்திருக்கிறார்.
வன்னியர்களையும் ராமதாசையும் குறை கூற வேறு விஷயங்களே கிடைக்காத போது 'மரம் வெட்டி' என்று எஸ்றா சற்குணம் போன்றோர் வசைபாடுவதை இனியும் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும். அவர் வி.சி.யாக இருப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.ஆனால் சீற வேண்டிய இடத்தில் தான் சீற வேண்டும். அதை விடுத்து இளஞ்சிங்க கூட்டத்திடம் கிழட்டு சிறுத்தை சீறினால் சிங்கக்கூட்டம் மறக்க முடியாத பாடத்தை புகட்டும். இதை எஸ்றா சற்குணம் நினைவில் கொள்ள வேண்டும். வன்னியர்களை இழிவுப்படுத்தி பேசியதற்காக அந்த மக்களிடம் எஸ்ரா சற்குணம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அவரை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
அதேபோல போராட்டத்தில் பங்கேற்ற மற்ற தலைவர்களும் வன்னியர்களுக்கு எதிராக வன்மத்தை கொட்டியுள்ளனர். அவர்கள் ஜாதிக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தால் பொன்பரப்பியில் ஊனமுற்ற அப்பாவி ஒருவரை தாக்கியும் வன்னிய சமுதாய பெண்களை திட்டியும் கலவரத்தை துாண்டியவர்கள் யார் என்பதை மனசாட்சி தொட்டு சொல்ல வேண்டும். அதை விடுத்து வன்னியர்கள் மீது மட்டும் ஒரு சார்பாக அவதுாறு பரப்பினால் வன்னியர் எதிர்ப்பு என்ற சாக்கடையில் அரசியல் லாபம் என்ற அரிசி பொறுக்குபவர்களாகவே அவர்களை சமுதாயம் பார்க்கும், என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment