சட்டசபை இடைத்தேர்தல் நடக்கும் தொகுதி களுக்கு, தேர்தல் பொறுப்பாளர்கள் பெயரை அறிவித்தால்,கட்சியினரிடம் குழப்பம் ஏற்படும் என்பதால், ஒவ்வொரு தொகுதியிலும் பணி யாற்ற வேண்டிய மாவட்டங்கள் பட்டியலை, அ.தி.மு.க., தலைமை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில்,ஒட்டப்பிடாரம்,திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலுார் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு,மே,19ல் தேர்தல் நடக்க உள்ளது. சட்டசபை இடைத்தேர்தலில், அதிக தொகுதிகளில் வென்றால் தான், ஆட்சியை தக்க வைக்க முடியும். எனவே, நான்கு சட்டசபை தொகுதிகளிலும், வெற்றி பெற, அனைத்து வகையான நடவடிக்கைகளையும், அ.தி.மு.க., தலைமை மேற்கொண்டுள்ளது.
பொதுவாக இடைத்தேர்தல் நடக்கும்போது, அந்த தொகுதிக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் பெயர் பட்டியல், கட்சி தலைமையால் அறிவிக் கப்படும்.பெரும்பாலும், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலர்கள், பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவர். அவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்கு, மாவட்ட நிர்வாகிகளை அழைத்துச் சென்று, தேர்தல் பணியை மேற்கொள்வர்.
பொதுவாக இடைத்தேர்தல் நடக்கும்போது, அந்த தொகுதிக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் பெயர் பட்டியல், கட்சி தலைமையால் அறிவிக் கப்படும்.பெரும்பாலும், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலர்கள், பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவர். அவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்கு, மாவட்ட நிர்வாகிகளை அழைத்துச் சென்று, தேர்தல் பணியை மேற்கொள்வர்.
தற்போது, கட்சியில் கோஷ்டி பூசல் அதிகமாக உள்ளது.பொறுப்பாளர்கள் பெயர் பட்டியலை வெளியிட்டால், பட்டியலில் இடம் பெறாதவர்கள், அதிருப்தி அடைவர்; தேர்தல்பணிக்கு வர மறுப்பர். இதை தவிர்க்க, இம்முறை, தொகுதி பொறுப்பாளர் கள் பெயர் பட்டியலை, கட்சி தலைமை அறிவிக்க வில்லை. அதற்கு மாறாக, ஒவ்வொரு தொகுதி யிலும், எந்த மாவட்ட நிர்வாகி கள் பணிபுரிய வேண்டும் என, அறிவித்துள்ளது.
சூலுார் தொகுதிக்கு, 13; அரவக்குறிச்சி தொகுதிக்கு, 14; திருப்பரங்குன்றத்திற்கு, 17; ஒட்டப்பிடாரத்திற்கு, 11 மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தவிர, சட்டசபை தொகுதிகளில், ஒவ்வொரு பகுதியும், குறிப்பிட்ட அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இந்த விபரங்களை, வெளிப்படையாக அறிவிக்காமல், தனியே அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளனர்.
கட்சியில், பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை, இ.பி.எஸ்., ஆதரவாளர்கள், தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். எனவே,இடைத்தேர்தல் பணிக்கு, அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலர்கள், தங்களுக்கு எதிரானவர்களை அழைத்து செல்வரா என்ற கேள்வி எழுந்துள்ளது. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், தங்களை தேர்தல் பணிக்கு, இ.பி.எஸ்., ஆதரவாளர்கள் அழைத்தால் செல்வது, இல்லையேல் வீட்டில் அமைதியாக இருப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். நான்கு சட்டசபை தொகுதிகளுக்கும், பொறுப் பாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களை, அ.தி. மு.க., நேற்று, திடீரென மாற்றி அமைத்தது. இதன்படி, அரவக்குறிச்சி தொகுதிக்கு ஒதுக் கப்பட்ட, திருவண்ணாமலை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்கள், தற்போது ஒட்டப் பிடாரம் தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன. ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட அரியலுார்; சூலுார் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட பெரம்பலுார் மாவட்டங்கள், அரவக்குறிச்சி தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன. திருப்பரங் குன்றம் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட, கடலுார் மேற்கு மாவட்டம், சூலுார் தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment