''அரசுக்கு எதிராக செயல்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்தால், தமிமுன் அன்சாரி, எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அ.தி.மு.க., தலைமை கொறடா ராஜேந்திரன் தெரிவித்தார்.
அரவக்குறிச்சி இடைத்தேர்தல் தொடர்பாக, அரியலுார் மற்றும் பெரம்பலுார் மாவட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், அரியலுாரில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., தலைமை கொறடா ராஜேந்திரன் கூறியதாவது:இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றி பெற்று, அரசுக்கு எதிராக செயல்படுவதாக கூறப்படும் தமிமுன் அன்சாரி மற்றும் கருணாஸ் ஆகியோர் மீது, இப்போதைக்கு எந்த நடவடிக்கையும் இல்லை. வரும் நாட்களில், அவர்கள் எப்படி செயல்படுகின்றனர் என்பதை பொருத்து, யோசித்து தான், நடவடிக்கை எடுக்கப்படும்.
தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்ட மூன்று, எம்.எல்.ஏ.,க்கள், கட்சிக்கு எதிராக செயல்பட்டதை ஆதாரப்பூர்வமாக சபாநாயகரிடம் தந்துள்ளேன். அவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில், எவ்வகையான முடிவையும் எடுக்க, சபாநாயகருக்கு உரிமை உண்டு.இந்த மூன்று, எம்.எல்.ஏ.,க்களும், பிரிந்து போனதில் இருந்தே, எங்களுக்கு எதிராக செயல்பட்டு வந்துள்ளனர். ஆனால், தமிமுன் அன்சாரி, தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக எந்த ஆதாரங்களும் இல்லை. ஆதாரங்கள் கிடைத்தால், நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:
Post a Comment