அமமுக சீமான் மற்றும் கமலஹாசன் ஆகிய மூவரும் சேர்ந்து சுமார் 20 % வாக்குகளை இழுக்கிறார்கள் என்கிறார் ரங்கராஜ் பாண்டே.. இது திமுகவுக்கு பல இடங்களில் சாதகமாக முடிந்து, 25 இடங்கள் வரை திமுகவே வெல்லும் என்கிறார் பாண்டே
ஆனால் இதற்க்கு முந்தைய தேர்தலை பார்த்தால், எப்பொழுதெல்லாம் மூன்றாவது அணி வலுவாக உருவாகிறதோ, அப்பொழுதெல்லாம் திமுக படுதோல்வியை சந்தித்திருக்கிறது.. இதற்க்கு உதாரணம் 2014 (பாஜக கூட்டணி) மற்றும் 2016 (மக்கள் நல கூட்டணி)..
இதில் சீமானுக்கும் கமலஹாசனுக்கு வாக்களிப்பவர்கள் யாரென்று பார்த்தால், பெரும்பாலாக பாஜக, அதிமுகவை பிடிக்காதவர்கள்.. இந்த இரு கட்சிகள் இல்லையென்றால் இவர்கள் வோட்டு திமுகவிற்கு போயிருக்கும்.. இதில் அதிமுக வோட்டை ஓரளவு பிரிக்க கூடியவர் என்று பார்த்தால் அது தினகரன் மட்டுமே, முக்கியமாக தேவர் வாக்கு வங்கியை.. ஆனால் இதில் ஆறுதல் என்னவென்றால் இவர் திமுகவிற்கு செல்லும் சிறுபான்மையினரின் வாக்கையும் பிரிக்கிறார்.. ஆனால் திமுகவை காட்டிலும் அதிமுகவிற்கு பலமான கூட்டணி அமைந்துள்ளது
அதனால் பாண்டேவின் இந்த 20% கணிப்பு சரியென்றால், அது அதிமுக கூட்டணிக்கே சாதகமாக அமையும் என்பது என் பார்வை...
No comments:
Post a Comment