Wednesday, April 24, 2019

வேலூர் தேர்தல் ரத்து: நெருக்கடியில் தி.மு.க.,

வேலுார் லோக்சபா தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது, தி.மு.க.,வுக்கு, அரசியல் ரீதியாக, கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
 வேலூர் தேர்தல், ரத்து,நெருக்கடியில், தி.மு.க.,
வேலுார் லோக்சபா தொகுதியில், தி.மு.க., சார்பில், துரைமுருகன் மகன், கதிர் ஆனந்த், வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார்.ஏப்., 29ல், காட்பாடியில் உள்ள, துரைமுருகன் வீட்டில், வருமான வரித் துறை அதிகாரிகள், திடீர் சோதனை நடத்தி, 10 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.ஏப்., 1ல், துரைமுருகனுக்கு நெருக்கமானவர்கள் வீடு, சிமென்ட் கிடங்குகளில் நடந்த சோதனையில், கட்டு கட்டாக,ரூ.11.55 கோடிகைப்பற்றப்பட்டது. 

சோதனை

இப்பணம், வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.இதன் அடிப்படையில், கதிர் ஆனந்த்  உட்பட, மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப் பட்டது. இதையடுத்து, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, போலீஸ் தரப்பிலிருந்து, தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டது. 


இந்திய தேர்தல் ஆணையம்,அந்த புகாரை, ஜனாதிபதிக்கு அனுப்பி, ஒப்புதல் பெற்று, தேர்தலை ரத்து செய்தது.இந்த அறிவிப்பு வெளியான, சில மணி நேரத்தில், துாத்துக்குடியில், தி.மு.க., வேட்பாளர் கனிமொழி வீட்டில், வருமான வரித் துறையினர், 'ரெய்டு' நடத்தினர். எனவே, ஒரே நாளில், வேலுார் தொகுதி தேர்தல் ரத்து அறிவிப்பு, கனிமொழி வீட்டில் சோதனை நடத்தியது, தி.மு.க.,வுக்கு கொடுக்கப்படும் நெருக்கடியாக, அக்கட்சி மேலிடம் கருதுகிறது.

லஞ்சம்

இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க., நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் மனச்சோர்வு அளிக்கும் வகையில் தான், வருமான வரித் துறையினரால் நெருக்கடிதரப்படுகிறது. வேலுார் தொகுதி தேர்தல் நிறுத்தப்பட்டதன் காரணமாக, வாக்காளர்களுக்கு, லஞ்சம் கொடுத்த கட்சியாக, தி.மு.க.,வை முத்திரை குத்தி விட்டனர். தேசிய அளவில், கட்சிக்கு களங்கம் உருவாக்கப் பட்டு உள்ளது.

கடந்த, 2016 சட்டசபை பொது தேர்தலில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த புகார் காரணமாக, தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளின் தேர்தல்கள், ரத்து செய்யப் பட்டன. வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த புகார் தொடர்பாக, தேர்தலை ரத்து செய்வது, இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் அடிக்கடி நடக்கிறது.
உத்தரவு

வேலுார் தேர்தல் ரத்து, ஜனாதிபதியின் உத்தரவு என்பதால், நீதிமன்றமும் தலையிட முடியாது. எனவே, தேர்தல் ரத்து அறிவிப்பு, வருமான வரித் துறையினர் சோதனை விவகாரம் எல்லாமே, தி.மு.க.,வுக்கு அரசியல் ரீதியாக கடும் நெருக்கடியை தந்துள்ளது. இவ்வாறு, கட்சிவட்டாரங்கள் கூறின.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...