Monday, April 22, 2019

கடன் தொல்லையிலிருந்து விடுபட.........

ஒவ்வொரு ராசிக்கும் அவர்களின் கிரகங்களுக்கு ஏற்ற பரிகாரங்கள்
கடன் தொல்லை நம்மை நிம்மதியாகவே இருக்கவிடாது. நம்முடைய கிரகங்களும் கூட காரணமாக இருக்கும். கடன் தொல்லையிலிருந்து விடுபட ஒவ்வொரு ராசிக்கும் அவர்களின் கிரகங்களுக்கு ஏற்ற பரிகாரங்கள்
அப்படி எந்த ராசிக்காரர்கள் என்ன மாதிரியான பரிகாரங்கள் செய்ய வேண்டும்?
No photo description available.

மேஷம்
தயிரை கொண்டு ஏதேனும் மஞ்சள் நிற இனிப்பு பண்டம் தயார் செய்து ஒவ்வொரு வெள்ளியும் மாலை வேளையில் பசுவிற்கு கொடுத்து வர கடன்கள் நீங்கி வளம் பெறலாம்.
ரிஷபம்
ஜவ்வரிசி கொண்டு இனிப்பு தயாரித்து அதை வெள்ளியன்று பசுவிற்கு மாலை வேளையில் கொடுத்து வர கடன்கள் அடைந்து சுகம் பெறலாம்.
மிதுனம்
தினசரி சிறிது தயிர் சேர்த்து குளித்து வரவும்-கடன்கள் நீங்கும். மாலை வேளையில் சூரிய தரிசனம் அஸ்தமனத்திற்கு முன் செய்து வரவும்.
கடகம்
ஒவ்வொரு ஞாயிறும் சிறிது வெல்லக்கட்டியை ஓடும் நீரில் விடவும்-ஞாயிறன்று அச்சு வெல்லக்கட்டியை குரங்குகளுக்கு கொடுத்து வரவும்.
சிம்மம்
ஒவ்வொரு சனிக்கிழமையும் அரச மரத்தடியில் மண் அகலில் நல்லெண்ணெய் ஊற்றி கருப்பு திரி கொண்டு 8 விளக்குகள் ஏற்றி வர கடன்கள் அடைய வழி பிறக்கும்.
கன்னி
சனிக்கிழமைகளில் உளுந்து வடை தானம் செய்யவும் (நீங்கள் உண்ண கூடாது) மேலும் துளசிக்கு தினசரி நீர் வார்த்து ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வைக்க ருண நிவாரணம் பெறலாம்.
தனுசு
வீடிழந்தோருக்கு வீடு கட்ட செவ்வாய் கிழமைகளில் செங்கல்கள் முடிந்த அளவு வாங்கி கொடுக்க கடன்கள் அடைந்து நிம்மதி பெறலாம்.
மகரம்
சனிக்கிழமைகளில் எள்ளுருண்டை செய்து பலருக்கு தானமாய் கொடுத்து வர கடன் தொல்லை நீங்கும்.
கும்பம்
வியாழன் மாலை 5-6 மணிக்கு குங்குமப்பூ சேர்த்த பாதாம் கீர் செய்து மகாவிஷ்ணுவிற்கு நிவேதனம் செய்து முதலில் தான் அருந்திவிட்டு பின்பு மற்றோருக்கும் தானமாய் / பிரசாதமாய் கொடுத்து வர கடன்கள் அடைபடும்.
மீனம்
தொழு நோயாளிகளுக்கு சப்பாத்தியை தானமாக செவ்வாய்கிழமை மதியம் 1-2 அல்லது இரவு 8-9 மணிக்குள் கொடுத்து வர கடன்கள் வேகமாக அடையப ஆரம்பிக்கும்-குறைந்தது 9 சப்பாத்திகள் கொடுப்பது நலம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...