கொரோனா பரவலை கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, நாட்டில் பணத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, ரிசர்வ் வங்கி, புதிதாக அச்சிட்ட, 1.20 லட்சம் கோடி ரூபாயை புழக்கத்தில் விட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களை நேற்று அறிவித்தார். இது குறித்து, அவர் பேசியதாவது:ஊரடங்கு உத்தரவால் அனைத்து துறைகளின் செயல்பாடுகளும், சுணக்கம் கண்டுள்ளன. ஆனால், வங்கிகள் வாயிலான பணப் பரிவர்த்தனைகள் வழக்கம் போலவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களை நேற்று அறிவித்தார். இது குறித்து, அவர் பேசியதாவது:ஊரடங்கு உத்தரவால் அனைத்து துறைகளின் செயல்பாடுகளும், சுணக்கம் கண்டுள்ளன. ஆனால், வங்கிகள் வாயிலான பணப் பரிவர்த்தனைகள் வழக்கம் போலவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மார்ச் 1 முதல்
வங்கிகள் மற்றும் அவற்றின், ஏ.டி.எம்.,களில் போதுமான பணப் புழக்கத்திற்கு, ரிசர்வ் வங்கி ஏற்பாடு செய்துள்ளது. ரிசர்வ் வங்கி, மார்ச், 1 முதல், நடப்பு ஏப்., 14 வரை, புதிதாக அச்சிடப்பட்ட, 1.20 லட்சம் கோடி ரூபாயை புழக்கத்தில் விட்டுள்ளது. அனைத்து மண்டல அலுவலகங்கள் வாயிலாக, இத்தொகை, வங்கி கருவூலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதன் காரணமாக, நாடு முழுதும், கொரோனா பரவல் காரணமாக பெருகியுள்ள பணத் தேவையை சுலபமாக சமாளிக்க முடிந்து உள்ளது. குக்கிராமங்களுக்கும் வங்கிச் சேவையை வழங்கி வரும், வங்கிகளின் வர்த்தக பிரதிநிதிகளிடம் போதுமான பணம் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல, அனைத்து, ஏ.டி.எம்., மையங்களிலும், பணம் தட்டுப்பாடின்றி கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்திலும், ஏ.டி.எம்.,களில் தொடர்ந்து பணம் நிரப்பப்பட்டு வருவதை, வங்கிகள் உறுதி செய்கின்றன. அவற்றின் சேவை பாராட்டத்தக்கது. பணம் நிரப்பும் ஏஜென்சிகளும் சிறப்பாக செயல்படுகின்றன. அதுபோல, 'இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங்' ஆகிய சேவைகளும் எவ்வித பாதிப்புமின்றி செயல்பட்டு வருகின்றன.
தொய்வில்லை
வங்கிகள், அவற்றின், பேரிடர் கால மீட்பு மையங்கள் அல்லது மாற்று இடங்களில் வர்த்தகத்தை தடையின்றி தொடர ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கான சேவையில் எந்த தொய்வும் ஏற்படாது. ரிசர்வ் வங்கியைச் சேர்ந்த, 150 அதிகாரிகள், தனியிடத்தில் அமர்ந்து, கரன்சி புழக்கம், பணப் பரிவர்த்தனை, நிதிச் சந்தை நடவடிக்கைகள் ஆகியவை சீரான முறையில் நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தாக்குதலை சமாளிக்க, அவர்களின் பங்களிப்பும் துணை நிற்கிறது என்றால் அது மிகையாகாது.இந்தியாவிடம், 11.8 மாதங்களுக்குத் தேவையான அளவிற்கு, 35 லட்சத்து, 73 ஆயிரத்து, 750 கோடி ரூபாய் அன்னியச் செலாவணி கையிருப்பு உள்ளது. அதனால், நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்தாலும், சுலபமாக சமாளிக்கலாம்.
ஏமாற்றம் அளிக்கிறது
ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள், காங்கிரசுக்கும், மக்களுக்கும் ஏமாற்றம் அளிக்கின்றன. அவை, கொரோனா பிரச்னையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் அளிக்காது. மத்திய அரசு, ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் படும் துயரத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- அஜய் மக்கான், காங்., மூத்த தலைவர்
விவசாயிகள், ஏழைகள் பயன் பெறுவர்
ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகள், நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், தாராளமாக கடன் கிடைக்கவும் உதவும். குறிப்பாக, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், சிறு தொழில்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு பயனளிக்கும். மேலும், கடன் வரம்பு உயர்வால், மாநில அரசுகள் பயன் பெறும்.- மோடி, பிரதமர்
மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்
கொரோனா பிரச்னையின் பாதிப்பில் இருந்து, மக்களின் வாழ்வாதாரத்தை காக்க, ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு, 50 ஆயிரம் கோடி, நபார்டு வங்கி வாயிலாக விவசாயிகளுக்கு உதவ,25 ஆயிரம் கோடி, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க, 15 ஆயிரம் கோடி, வீட்டு வசதி கடனுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது, பாராட்டத்தக்கது.- ஜே.பி.நட்டா, தேசிய தலைவர், பா.ஜ.,
No comments:
Post a Comment