அன்று அமைச்சர் அந்தஸ்திலேயே வைத்து முரசொலி மாறனுக்கு 15 மாதம் மருத்துவம் பார்த்தது வாஜ்பாய் அரசு.இதில் 10 மாதத்திற்கு மேல் தனிவிமானத்தில் அமெரிக்கா கொண்டு போய் வைத்து வைத்தியம் பார்த்தார்கள்.பல கோடிகளை செய்து பார்த்துக் கொண்டார்கள் அரசுப் பணத்தில்.
அப்போது முதல்வர் செல்வி.ஜெயலலிதா 'he is Persistent vegetative state' ஆனால் அவரை இன்னும் அமைச்சராகவே வைத்திருக்கிறது மத்திய அரசு என கடுமையாக பேசினார்.உடனே,மருத்துவ செலவை மாறன் மகன்கள் ஏற்பார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி பிரதமர் வாஜ்பாய்க்கு காட்டமாக ஒரு கடிதம் எழுதினார்.
ஆனால் கலாநிதி மாறனோ,தயாநிதி மாறனோ அந்த பணத்தை தாங்கள் செலுத்தியதாக எந்த ஆதாரத்தையும் பொது வெளியில் தாக்கல் செய்யவில்லை.2004ல் ஆட்சி மாறியது.திமுக-காங்கிரஸ் கூட்டணி பெரு வெற்றி பெற்றது.பின் அவற்றை யாரும் நினைவுகூறவில்லை.
இன்று என்னடா என்றால் பலகோடி சொத்து மதிப்பு கொண்ட மாறன்கள் இந்த அரசையும்,மக்களையும் பிச்சைக்காரர்கள் என்கிறார்கள்.அரசு சொத்தை கொள்ளையடித்தவன்,மக்களை ஏமாற்றிப் பிழைத்தவன் மகாராஜாவாக இருந்தால் அரசாங்கமும்,மக்களும் பிச்சைதான் எடுக்க வேண்டும்.அது விதி.
No comments:
Post a Comment