கழிப்பறையில் அன்னிய மோகம் : வெள்ளைக்காரன் நம்மை அடிமைப்படுத்தி ஆண்டான் அதனால் அவனை அறிவாளி என நினைத்து அவன் குளிருக்காக அவன் நாட்டில் பயன்படுத்திய கோர்ட்டு சூட்டை சென்னை போன்ற வெப்ப பிரதேசதிலும் நீதிமன்றத்தில் கட்டாயமாக கருப்பு கலரில் 3 உடை ஒரே நேரத்தில் அணிகின்றோம் :
காலை எழுந்தவுடனும் இரவு படுக்கச் செல்வதற்கு முன்னும், நாம் பயன்படுத்துவது கழிப்பறை.
இதைப் பற்றி பேசுவதற்குப் பலரும் முகம் சுளிக்கலாம்.
ஆனால், கழிப்பறைகளில்தான் நம் ஆரோக்கியம் அடங்கியிருக்கின்றது
“உலகில் இரண்டு விதமான கழிப்பறைகளை மக்கள் பயன்படுத்து கிறார்கள்: இந்திய முறை கழிப்பறை (squat position), மேற்கத்திய முறை (sitting position).
ஆதிகாலம் முதல் கழிவை வெளியேற்றக் குத்தவைத்து (squat position) உட்காரும் முறையையே மனித இனம் பின்பற்றிவந்தது.
இதற்கு மலாசனம் என்று பெயர்.
நமக்குத் தெரியாமலே நாம் செய்யும் ஆசனம் இது.
இதை எத்தனை முறை செய்கிறோமோ, அந்த அளவுக்கு உடல் உறுதி கூடும்.
இதனால், மூலநோய் தொந்தரவு சீரடையும்; மலச்சிக்கல் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.
கால்களும் முதுகும் உறுதியாகும். வயிற்று உறுப்புகள் திறம்பட வேலை செய்கின்றது
கால்களும் முதுகும் உறுதியாகும். வயிற்று உறுப்புகள் திறம்பட வேலை செய்கின்றது
19-ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில்தான், நாற்காலியில் உட்காருவது போன்ற கழிப்பறைகள் மேற்கத்திய நாடுகளில் பரவ ஆரம்பித்தன.
உடல்நலக் குறைபாடு உடையவர்களுக்காக இவை உருவாக்கப்பட்டன
இந்த முறையால் உடல் கழிவு வெளியேற்றம் கடினமாகிறது.
உடலில் இருந்து கழிவு 100% முழுமையாக வெளியேறுவதும் இல்லை.
இந்திய முறை கழிப்பறையில் அமரும்போது, இயற்கை அழுத்தத்தால் கழிவு முழுமையாக வெளியேற்றப்படுகிறது.
முழுமையாக வெளியேற்றப்படாத கழிவு பெருங்குடல் பகுதியில் தேங்குவதால், அங்கு நோய்த் தொற்று ஏற்பட்டு அப்பெண்டிசிட்டிஸ், இன்ஃபிளமேட்டரி பவல் டிசீஸ் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களுக்குக் காரணமாக அமைகிறது.
மேற்கத்திய நாடுகளில் இந்த நோய்கள் அதிக அளவில் உள்ளன:
உடல் சார்ந்த தனிமனிதச் சுத்தம் பற்றிய விழிப்புணர்வு இல்லாததே, அடிவயிறு தொடர்பான நோய்களுக்குக் காரணம்.
உடல் சார்ந்த தனிமனிதச் சுத்தம் பற்றிய விழிப்புணர்வு இல்லாததே, அடிவயிறு தொடர்பான நோய்களுக்குக் காரணம்.
ஆராய்ச்சியாளர்கள் பலரும், தங்கள் ஆய்வு முடிவாக இந்திய முறை கழிப்பறையே சிறந்தது என்ற கருத்தை முன்வைத்துவரும் நிலையில், அதற்கு மாறாக மேற்கத்திய முறை கழிப்பறை நம்மிடையே பரவலாகி வருகிறது.
சுகப்பிரசவத்துக்கு
கருவுற்ற பெண்கள் இந்திய முறை கழிப்பறையைப் பயன்படுத்தினால் கருப்பையின் அழுத்தம் குறைந்து, சுகப் பிரசவத்துக்கு வழிவகுக்கும்.நோய்த்தொற்றுகளும் குறைவாக இருக்கும். .......................................... மேற்கத்திய கழிப்பறைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் நம் உடலில் ஓட்டி தோல் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது
பொது இடங்களில்கூட இந்திய முறை கழிப்பறைகளே சிறந்தவை.
இன்றைக்கு, எல்லாப் பக்கமுமே மேற்கத்திய முறை கழிப்பறை பரவலாகிவருவது வருத்தம் தருகிறது.
இதனால் நோய் பரவி மருத்துவ வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது !!!
அதனால் தான் இந்த வகை கழிப்பறை பயன்பாடுகள் ஊக்குவிப்பு நடக்கிறது
இந்திய முறை கழிப்பறைகள் அரிதாகிவருகின்றன, அநாகரிகமாகவும் கருதப்படுகின்றது.
இந்திய முறை கழிப்பறைகள் அரிதாகிவருகின்றன, அநாகரிகமாகவும் கருதப்படுகின்றது.
இந்திய முறை கழிப்பறைக்கு மாறுவோம்
: இப்பொழுது நட்சத்திர விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் இந்திய கழிப்பறைகள் முற்றிலும் இல்லை எனவே விடுதியில் தங்கும் பொழுது இந்திய முறை கழிப்பறை வேண்டும் என்ற உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்: நன்றி பல புத்தகங்கங்களில் இருந்து நான் தொகுத்தது.
No comments:
Post a Comment