Saturday, April 18, 2020

அதிமுக விலிருந்து கொள்ளைக் குற்றவாளி சசிகலா திஹார் கரன் விரட்டியடிக்கப்பட்டு.. இன்றோடு மூன்றாண்டுகள் நிறைவு நாள்...

2017 ஏப்ரல் 18-ம் தேதி. ஆம், இதே நாளில் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்திற்குப் பிறகுதான் ''கட்சியிலும் ஆட்சியிலும் அதிகாரம் செலுத்துவதில் இருந்து தினகரன் குடும்பத்தை ஒதுக்குகிறோம்'' என அறிவிக்கிறார்கள்.
இன்றோடு சரியாக மூன்று ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. இந்த இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது?
ஜெயலலிதா அம்மையார் மறைவுற்றதாக அறிவிக்கப்பட்ட பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஆனார்.
பல்வேறு முயற்சிகளை மோசடிகளை கையாண்டு அ.தி.மு.க-வின் தற்காலிக பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டார் சசிகலா. முதல்வர் பதவியை நோக்கி சசிகலா முன்னேற... தர்மயுத்தம் நடத்தினார் ஓ.பன்னீர்செல்வம்.
2017 பிப்ரவரி 5-ம் தேதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் அவசரக்கூட்டம் கூடியது. அடுத்த முதல்வராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அவர் முதல்வர் ஆவதற்காக பன்னீர்செல்வத்திடமிருந்த முதல்வர் பதவி தட்டி பறிக்கப்பட்டது.
முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் என அறிவிக்கப்படுகிறது. அடுத்த 48 மணி நேரத்தில், திடீரென ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து 'தர்மயுத்தம்' தொடங்கினார். மிரட்டப்பட்டேன்... 'அவமானப்படுத்தப்பட்டேன்.. கட்டாயப்படுத்தி ராஜினாமா வாங்கினார்கள்'' என்று சொல்லி சசிகலாவுக்கு எதிராக போர்க் கொடி தூக்கினார். இதனால் சசிகலா அணி, பன்னீர் அணி என அ.தி.மு.க பிரிந்தது.
பயந்து போன சசிகலா தான் எப்படியாவது முதல்வர் ஆகிவிட வேண்டும் என்ற பல்லாண்டு கனவை நனவாக்க துடித்து அதிமுக எம்எல்ஏ க்களை கூவத்தூரில் கொண்டு போய் அடைத்து வைத்தார்...
கொள்ளைக் குற்ற வழக்கில் சசிகலா குடும்பத்தினர் மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வந்தது.
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்க உத்தரவு வந்தது...
கூவத்தூர் ஓடிப்போன சசிகலா கண்ணீர் விட்டு கதறி அழுதார். எடப்பாடி பழனிச்சாமி நமக்கு நல்ல அடிமையாக இருப்பார் தினகரனை முதல்வர் ஆக்கும் வரை ஒரு பொம்மை முதல்வராக இருப்பார் என நம்பி... எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராகத் தேர்வுசெய்துவிட்டு, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குப் போனார் சசிகலா. 'ஆட்சிக்கு எடப்பாடி... கட்சிக்கு டி.டி.வி. தினகரன்' எனத் திட்டம் வகுத்துக் கொடுத்துவிட்டுப் போனார். தினகரனிடம் கட்சிப் பொறுப்பை ஒப்படைத்து, அவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவியையும் சசிகலா தந்தார். அதன்பின், தினகரன் தலைமையில் செயல்பட்டது அ.தி.மு.க. அரசும்... கட்சியும்...
இன்னொரு பக்கம், பன்னீர்செல்வம் தனி ஆவர்த்தனம் நடத்திக்கொண்டிருந்தார்.
ஜெயலலிதா மறைக்கப்பட்ட தால் காலியான ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தினகரன் வேட்பாளர் ஆக தானே நியமித்து கொண்டு போட்டியிட்டார்...
உடனே பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார் அதிமுக அவைத் தலைவர் மதுசூதன் தான்.
அவரே பொதுச்செயலாளர் இல்லாத நிலையில் கட்சிக்கு தலைவர் எனவே அதிமுக எங்களுக்கே சொந்தம் இரட்டை இலை எங்களுக்கே சொந்தம் என உரிமை கோரினார்...
இருவருக்கும் இரட்டை இலை இல்லை என இரட்டை இலை சின்னத்தையும்... அதிமுக கட்சியின் பெயரையும் முடக்கியது தேர்தல் ஆணையம் .
பன்னீர் அணி சார்பில் மதுசூதனன் வேட்பாளர் ஆக்கப்பட்டார். இரட்டை இலை முடக்கப்பட்டதால் தினகரனுக்கு தொப்பி சின்னமும் மதுசூதனனுக்கு இரட்டை மின் விளக்கும் அளித்தது தேர்தல் ஆணையம்.
தினகரன் ஆர்.கே.நகரில் வெற்றிபெற்றால், அவர் அடுத்து முதல்வர் ஆக முற்படுவார் என்பது தெரிந்தும், அவருக்காக எடப்பாடி ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் செய்தார். அவர் மட்டுமல்ல, மொத்த அமைச்சரவையும் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் தினகரனுக்காக ஓட்டு வேட்டையாடினார்கள்
பணமும் கோடி கோடியாக விளையாடியது...
இந்த நேரத்தில்தான் தேர்தல் ஆணையத்தின் புகாரின் பேரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் வருமானவரித் துறை 2017 ஏப்ரல் 7-ம் தேதி சோதனை நடத்தியது. நாலரை கோடி ரூபாய் ரொக்கம், 86 கோடிக்கு முறைகேடு நடந்ததற்கான ஆதாரத்தை அதிகாரிகள் அள்ளினார்கள்.
சோதனையின்போது, விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து ஆதாரங்களுடன் தப்பி ஓடிய டிரைவரைப் பிடித்தார்கள். ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்தற்கான ஆதாரம் சிக்கியது. இதனால், ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
2017 ஏப்ரல் 7-ம் தேதி,அன்று வருமான வரித்துறை விஜயபாஸ்கர் வீட்டில் நடத்திய ரெய்டுக்குப் பிறகு,
அதுவரையில் தினகரனுக்கு விசுவாசியாக இருந்தவர்கள்,கொஞ்சம் கொஞ்சமாக தடம் மாற ஆரம்பித்தார்கள்.
அதற்கு காரணம் முதல்வராக இல்லாமலேயே முதல்வர் போல ஆணவத்துடன் நடந்து கொண்ட தினகரனின் ஆணவப்போக்குதான்...
அதுமட்டுமின்றி ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சசிகலா குடும்பத்தில் உள்ள சிலரின் எதிர்ப்பையும் மீறி தன்னை வேட்பாளராக அறிவித்துக்கொண்டதாகப் புகார் எழுந்தது.
இதன் பிறகு தினகரன் அணி என்பது எடப்பாடி அணியாக பெயர் மாற்றம் பெற்றது.
நாம் இப்படியே இரு அணியாக இருந்தால் அது நமக்குதான் பாதகம் என இரு அணிகளும் சிந்திக்க தொடங்கி திரை மறைவில் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தினார்....
2017 ஏப்ரல் 17-ம் தேதி இரவு, அமைச்சர் தங்கமணி வீட்டில் நடைபெற்ற கூட்டத்தில், பன்னீர்செல்வம் அணியுடன் ஒத்துப்போகும் முடிவை எடுத்தது எடப்பாடி தரப்பு. அடுத்த நாள் ஏப்ரல் 18-ம் தேதி, முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ''கட்சியைக் காப்பாற்றுவதற்காக சசிகலா அணியை விலக்கி வைக்கிறோம். கட்சியைக் காப்பாற்றவும் இரட்டை இலையை மீட்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அ.தி.மு.க தொண்டர்களின் விருப்பத்தையும், தமிழக மக்களின் ஒட்டுமொத்த விருப்பத்தையும் நிறைவேற்ற இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கட்சியிலும் ஆட்சியிலும் ஒரு குடும்பம் ஆதிக்கம் செலுத்துவதை நிறுத்த வேண்டும். இனி, எக்காலத்திலும் தினகரன் குடும்பத்தைச் சேர்க்கவே மாட்டோம்.. வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டுமென்றால், டி.டி.வி. தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவைக்க வேண்டும் என்ற விருப்பம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது அ.தி.மு.க நிர்வாகிகளின் ஒட்டு மொத்த விருப்பம். அனைத்து அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் இணைந்து எடுத்த முடிவு'' என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.
''துணை பொதுச்செயலாளர் தினகரனுக்குத் தெரியாமல் கூட்டம் நடத்த மற்றவர்களுக்கு அதிகாரம் இல்லை'' என்று சொன்னார் வெற்றிவேல். ஆனாலும் எந்தப் பலனும் இல்லை.
தினகரன் அணி, எடப்பாடி அணி, பன்னீர் செல்வம் அணி என அ.தி.மு.க மூன்று பிரிவுகள் ஆகின.
ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற ஆதாரங்கள் சிக்கியதின் அடிப்படையில் வழக்கு பதியப் பட்டு தினகரன் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
உடனே எதிர்வினை ஆற்றிய தினகரன், ''யாருக்கோ அவர்கள் பயப்படுகிறார்கள்'' என்றார். இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் திஹார் சிறையில் சில காலம் இருந்துவிட்டுத் திரும்பிய தினகரன், தனி அணியாகச் செயல்பட ஆரம்பித்தார்.
2017 ஆகஸ்ட்டில் அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளான ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணிகள் 7 மாதங்களுக்குப் பிறகு இணைந்தன. துணை முதல்வர் ஆனார் ஓ.பன்னீர்செல்வம்.
இத்தனையும் பார்த்துக்கொண்டு தினகரன் சும்மா இருப்பாரா? பழி தீர்க்க நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். எடப்பாடி ஆட்சியைக் கவிழ்க்க முயன்றார். 18 சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடிக்கு எதிராகத் திரும்பினார்கள்.
அவர்களை ஊர் ஊராகச் அழைத்து சென்ற தினகரன் விரைவில் அதிமுக ஆட்சியைக் கவிழ்பேன் என சபதமிட்டார்...
இவர்கள் 18 பேரும் கவர்னரை சந்தித்து முதல்வர் பழனிச்சாமி க்கு எதிராக மனு கொடுக்க வைத்தார் தினகரன்.
எனவே சட்டப்படி செயல்பட்டு சபாநாயகர் தனபால் கட்சி தாவல் தடைசட்டப்படி அவர்களைத் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர்.
சபாநாயகர் தனபால் உத்திரவிற்கெதிராக உச்ச நீதிமன்றம் வரை மோதிப்பார்த்தார்
தினகரன்.
18 பேரும் கட்சி தாவல் தடை சட்டப்படி தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்திரவிட்டுள்ளது சட்டப்படி சரிதான் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மூக்குடைபட்டு திரும்பினார் தினகரன்.
தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட 18 பேரும் எம்.எல்.ஏ பதவிகளைப் பறிகொடுத்து நின்றார்கள். ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட நேரத்தில்தான் சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் வருமானவரித் துறை மாபெரும் ரெய்டு நடத்தியது.
அதைச் சமாளித்த நேரத்தில்தான், ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதற்குள் இரட்டை இலை சின்னத்தை ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணிக்கு அளித்தது தேர்தல் ஆணையம்.
ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தினகரன்..
இருபது ரூபாய் டோக்கனாலும்..
தினகரன் வெற்றி பெற்று வந்தால் அதிமுக எம்எல்ஏ க்கள் எல்லாம் தினகரன் பின்னால் அணிவகுத்து வந்துவிடுவார்கள்..
தினகரன் அதிமுக ஆட்சியை கலைத்து விடுவார்... அதன் பிறகு சுலபமாக ஆட்சியில் திமுக ஏறிவிடலாம் என்ற தினகரனின் வாக்குறுதி யை நம்பி ஏமாந்த திமுகவினர் தினகரனை வெற்றி பெற வைத்தனர்....
தி.மு.க வரலாற்றில் முதன்முறையாக சுயேச்சையான தினகரனிடம் தோற்று.. டெபாசிட் இழந்த திமுக என வரலாறு எழுதப்பட்டது.
அதன் பிறகு, ஆட்சியை கலைக்கும் முயற்சி யும்,
அ.தி.மு.க-வை கைப்பற்ற முயன்ற தினகரனின் முயற்சியும் இன்றுவரை பலிக்கவில்லை.
'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் தனியாக கடை திறந்து செயல்பட்டுவந்தார். அவர் நடத்திய கூட்டங்களுக்கு பெரும் செலவில் அதிகமான தொண்டர்கள் திரட்டப்பட்டார்கள். அதனால், நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய சக்தியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உருவெடுக்கலாம் எனும்
மாயையை ஏற்படுத்தினார் தினகரன். ஆனால், அது பொய்த்துப்போனது. 5.38 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது.
அ.தி.மு.க-வின் வெற்றியை அ.ம.மு.க. பாதிக்கும் என்கிற வாதம் வலுவிழந்தது. தென் மாவட்டங்களைத் தாண்டி பெரிய வாக்கு சதவிகிதத்தை வட மாவட்டங்களில் பெற முடியவில்லை.
ஆனால் சில தொகுதிகளில் திமுக வெற்றிக்கு தினகரன் துணை நின்றார்...
95 சதவிகித அ.தி.மு.க தொண்டர்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறிய தினகரனால், அ.தி.மு.க-வின் வாக்கு வங்கியை ஓரிரு தொகுதிகள் தாண்டி வேறெங்கும் பெரியதாகப் பிரிக்க முடியவில்லை.
தற்போது அமமுகவில் தினகரனைத்தவிர வேறு எவறுமில்லை எனும் வகையில் தினகரனுக்கு தோள் கொடுத்த பலரும் கட்சி மாறி போய்விட்டார்கள்.
இப்போது அமமுகவில் தினகரனைத் தவிர தலைவர்களுமில்லை. தொண்டர்களுமில்லை.
தினகரனை ஒதுக்கிவைத்து மூன்றாண்டுகள் ஆன நிலையில், தினகரனின் முழு ஆட்டமும் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலுக்கு பின்பு முடிந்துவிடும்...
Image may contain: 1 person, standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...