Monday, April 20, 2020

தயாநிதி_மாறனும்_ஜோதிகாவும்.

பேச்சு கூட ஒரு வகை போதை தான், என்ன பேசுகிறோம் என்று மது போதையில் இருப்பவனுக்கு தெரியாது. புகழ் போதையில் இருப்பவனுக்கும் அதே நிலை தான். ஒரு பேட்டி கொடுக்கும் பொழுது நம்முடைய பேச்சு சரியான வகையில் சரியாக மக்களை சென்றடைய வேண்டும் என்ற பொறுப்பே இல்லாமல் பேசுபவர்களை கண்டால் எரிச்சலை விட பரிதாப நிலை தான் ஏற்படுகிறது.
இவர் மீது பல குற்றச்சாட்டுக்கள், வழக்கு இன்னமும் முடிக்காத நிலை, இவர் ஒரு எம் பி ஆக இருக்கும் நிலையில், ஒரு தேசத்தின் பிரதமரையும் ஒரு மாநிலத்தின் முதல்வரையும் மட்டுமல்லாது தன்னை தேர்ந்தெடுத்த பொது மக்களையும் பிச்சைகார்ர்கள் என்று வெளிப்பட கூறியது பெரும் அதிர்ச்சி என்பதை விட இந்த திராவிட அரசியல் களம் எத்தனை கேவலம் என்பதை மீண்டும் நிரூபித்திருக்க்கும் ஒரு செயல்.
யாரையும் கேவலமாக பேசுவது வெகு தவறு. முடிந்தவரை நாம் வெகு சாதாரண மனிதர்களையும் அவர்கள் செய்யும் வேலைகளையும் கூட மரியாதை கலந்த நல்ல சொற்களால் விளிக்க வேண்டும் என்பது தான் நமக்கு சமூக நாகரீகம். ஆனால் இவரோ நிதி அளியுங்கள் என்று ப்ரதமரும் முதல்வரும் கேட்டுக் கொண்ட்தால் அவர்கள் பிச்சைக்காரர்களாம். அதுவும் அவர்கள் கேட்டது ஏற்கெனவே பிச்சை எடுக்கும் பொது மக்களை
என்று பேசியது கேவலத்தின் உச்சம்.
இவர் லஞ்சம் வாங்கி பணம் சேர்த்து ,
அதுவும் அவர் அண்ணன் கலா நிதி மாறனுக்கு உலகில் யாருக்குமே கிடைக்காத வாய்ப்பு, தாத்தா மா நிலத்தின் முதல்வர் தம்பி டெலி கம்யூனிகேஷன் மந்திரி, சும்மா புகுந்து விளையாடினார்கள்.
எப்படி இத்தனை பெரிய கோடீஸ்வர்ர் ஆனார்கள் இவர்கள். அதுவும் சன் டிவி குழுமத்தின் 85 சதவிகித ஷார் இவர்களிடம் மட்டுமே. கேவலம் பத்து கோடி ரூபாய் நன் கொடை கொடுத்த பெரிய மனிதர்கள்,
என் சொத்து முழுவது அரசு எடுத்துக் கொள்ளட்டும் கொரோணா நிதிக்கு தேவை என்றால் என்று சொன்ன டாடா போன்ற மனிதர் நடுவே இவர்களின் கஞ்சத்தனம் வியக்க வைக்கிறது.
பணம் வைத்துக் கொண்டும் கொடுக்காதவன் பிச்சைக்காரனா அல்லது பணமே இல்லாத நிலையில் தேசம் நன்றாக இருக்க வேண்டும் என்று பொது ஜனம் கொடுக்கும் மன நிலையில் இருப்பதால் அவர்கள் கோடீஸ்வரர்களா?
தயா நிதி மாறன் பேச்சு வன்மையானது பெரிதும் கண்டிக்கத்தக்கது, இதை ஸ்டாலின் இந்த நேரம் செய்திருக்க வேண்டும். மீண்டும் ஸ்டாலின் இங்கே சறுக்கியிருக்கிறார், வர வர வெகு தவறாக திமுக ஆட்கள் பேசத் தொடங்கிய நிலை, அந்த கட்சிக்கு பெரும் பயம் பிடித்த நிலை என்பதை ப்ரகடனப்படுத்தும் காட்சியாகவே படுகிறது.
சேரும் இடம் எப்படியோ அப்படித்தானே பேச்சும் வரும். எத்தனை துணிச்சல் இருந்தால் இங்கு வாழ வந்து வளர்ந்து இந்த கலாச்சாரம் கொண்ட ஒரு குடும்ப மருமகள் ஆகி, பிரபலம் ஆனவுடன் திருமணம் செய்து,, இன்று என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசி பலரின் ஏச்சுக்கு ஆளான நிலை.
இவர் சொல்கிறார், மக்களே கோயில் உண்டியலில் காசு போட வேண்டும். எதற்கு இத்தனை ஆடம்பரமாக தஞ்சை கோயில்? நீங்கள் கோயிலில் போடும் பணத்தை கல்லூரி அல்லது வேறு நல்ல காரியத்துக்கு பயன் படுத்துங்கள்...
சரி பொருள் நல்ல பொருள் தான், ஆனால் இதில் தஞ்சை கோயில், கோயிலில் காசு என்பது மட்டும் தான் நம் டார்கெட்.
தஞ்சை கோயில் தமிழ் கலாசார சின்னம். அது ஒரு பொக்கிஷம், அன்று அத்தனை பாறை கற்களை புதுக்கோட்டையில் இருந்து யானை மூலம் எடுத்து வந்து ராஜராஜன் கட்டியது. வட இந்திய தாஜ்மஹால் அதிசயம் என்றால் அதிசயத்திற்கு இது தென்னக தாஜ்மஹால் எனலாம். இதை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது.
மேலும் கோயிலில் காசு போட வேண்டாம்,,,,ஏன் இதை பொதுவாக சொல்லேன், வேளாங்கண்ணி மாதா, மெக்காவுக்கு போவது என்று எல்லா மதம் சேர்த்து சொல்ல வேண்டியது தானே, துணிவு இருக்கிறதா?
இங்கு இருப்பவர்கள் முட்டாள்கள், கோயிலைப் பற்றிச் சொன்னால் தமிழ் கலாசார சின்னத்தைப் பற்றிச் சொன்னால் எதுவும் சொல்ல மாட்டார்கள், ஏன் எனில் சினிமாக்காரர் பின்னால் சுற்றும் கூட்டம் தானே தமிழர்களின் பெரும் கூட்டம்.
ஜோதிகா தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். சிவகுமார் அதை செய்வார் என்று நான் நம்புகிறேன், அப்படி அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரை எப்படி மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என்பதை நான் சீமானிடன் விட்டு விடுகிறேன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...